சந்தேகம்!




அழகானதோர் மங்கைக்கு மூன்று முடிச்சும் பொட்டுமிட்டு இன்றோடு ஐந்தாவது நாள் சந்தோசமாகப் பிறந்து விட்டது.

அன்று திங்கட் கிழமை மோகன் டவுனுக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவன் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து நீ கெட்ட கேட்டுக்கு பத்திரிகையொன்று தான் குறைச்சலாக இருக்கின்றது! என்று முந்திய நான்கு நாளுமில்லாத ஓர் குரலில் திடீரென்று ஓரிழிவான வசனத்தை வெளியில் உதிர்த்தான்.
அதைக் கேட்ட ராதா அதிர்ந்து விட்டாள். இருப்பினும் வாங்க நீங்க இல்லாம ஒரே போர் அதுதான் சிறுகதையை வாசித்தேன். அதற்குள் கோபம் வந்திருச்சா என்ற வாரே கணவனை சமாதானப் படுத்தினாள்.
அவன் விட்டால் தானே! ஏய் ராதா நீ யாரையும் ஏமாற்றலாம், இந்த மோகனை உன்னால் ஏமாற்ற முடியாது.
அதுவென்றால் நிச்சயமாக உண்மைத்தான். நீங்கள் வெளி அனுபவத்தைப் புரிந்துக் கொண்டவர். ஆனால் நான் சமையலைப் பற்றிய அனுபவத்தைத் தானே புரிந்துக் கொண்டுள்ளேன். சமையலில் உங்களை ஏமாற்றுகின்றேன். வெளியில் என்னை ஏமாற்றுங்கள்.
போதும் மூடு வாயை. வீட்டில் அடங்காதவளாக இருந்து விட்டு ,என்னை ஏமாற்றி தலையில் ஐஸ் வைக்கலாமென்று நினைக்கிறாயா?.
நீங்கள் எதை வைத்து நாடகம் நடிக்கிறீங்களென்று நான் தெரிந்துக் கொள்ளலாமா.
ராதா உனக்கு எத்தனை போய் பிரண்ட்கள்.
ஆ ஹா ஆ ஹா இதைக் கேட்கத்தான் இவ்வளவுப் பெரிய நாடகம் டவுனுக்குப் போய் வந்த டயற்டையும் பொருட் படுத்தாமல் நடத்தினீர்களா?.மிகவும் சந்தோசம். உங்களின் கர்நாடக கேள்விகளுக்கு இதோ பதில் தருகிறேன்.
எனக்கு எத்தனையோ போய் பிரண்ட்ஸ் . அதில் இவர்கள் எல்லோருமே அடங்குவார்கள். பதினான்கு ஆசிரியர்கள், முப்பத்தைந்து வகுப்பு மானவர்கள், ஒரு அப்பா, மூன்று அண்ணன்கள், எட்டு எழுத்தார்கள், பலயிதழ்களின் ஆசிரியர்களாக எட்டுப் பேர்,பேனா நண்பர்களாக பத்துப் பேர், மற்றும் சொந்த பந்தத்தினால் உருவான ஆண் நண்பர்கள் அதைவிட அதிகம்.
இதை விபரிப்பதென்றால் இருவருமே தொடரவிருக்கும் வாழ்நாளில் இவைகளை எண்ணி கூட்டிக் கழிப்பதிலேயே பொழுதைக் கழித்து விடலாம். எப்படியென்னைப் பற்றிப் புரிந்துக் கொண்டு விட்டீர்களா.||
இதை என்னிடம் கூறியதற்காக கவலைப் பட வில்லையா.
இல்லை கவலைப்பட வில்லை. தயவு செய்து மண்ணித்துக் கொள்ளுங்கள்.
இதில் எத்தனைப் பேரோடு பிக்னிக் சென்றாய்.
என்னை மன்னியுங்கள். நான் எனக்கு வரும் கணவரோடு பழகும் முறையைத் தான் முதலில் கற்றுக் கொண்டேன்.
அதை எப்பொழுது யாரிடம் பயன் படுத்தினாய்.
நீங்கள் என்னையோர் பெண் என்றும் பார்க்காமல் மிகவும் இழிவானக் கேள்விகள் கேட்பதையிட்டு நான் வெட்கப் படுகிறேன்.
அப்படியானால் உன் உருவத்தையே மற்றதொரு ஆடவனிடம் கொடுக்க கூச்சப் படவில்லையா?
நான் அப்படியென்ன தரங்கெட்டவள் என்றா நினைத்துக் கொண்டீர்கள். நான் யாருக்கு என் போட்டோவைக் கொடுத்தேன் என்று நிரூபித்துக் காட்ட முடியுமா?
அதற்கு முன் உன் மனசாட்சியைத் தொட்டுக் கேள்.
என் மனசாட்சிக்கு அருகில் சந்தேகமென்றப் பேயை விட நான் இன்றுவரை விரும்பவில்லை.
நீ பொய் தத்துவம் பேசியே என்னை வீழ்த்தலாமென்று வீணாகக் கஷ்டப் படுகிறாய். நீ யாரிடமும் தொடர்பு வைத்திருக்க வில்லையா?
வைத்திருந்தேன்!
யாருடன்!
முகம் தெரியாத திலீப்புடன்.
இதையேன் நீ முன்பேச் சொல்ல வில்லை?
நீங்கள் இப்போது தானே கேட்டீர்கள்.
எப்படி முகம் தெரியாமல் பழக்கம் ஏற்பட்டு போட்டோ கொடுக்கின்ற அளவிற்கு நீடித்தது?.
உங்கள் சந்தேகத்தை இதோ தீர்த்து வைக்கின்றேன்||. என்றவள் ஒரு கடிதத்தை எடுத்து அவன் முன் வைத்தாள். அவன் படிக்கத் தொடங்கினான்.
என் அன்புள்ள தங்கை ராதாவுக்கு!. வாணியிதழில் உங்களின் அண்ணாவின் உறவுக்கோர் தடை எனும் சிறுகதையைப் பிரசுரிக்க திட்டமிட்டுள்ளேன். அடுத்த மடலோடு, இதழையும் அனுப்பி வைக்கின்றேன்.
மேலும்.தங்களின் திருமண அமைப்பிதழ் எப்போ என் கரம் கிட்டும். வருகின்ற மச்சான் எழுத்தார்வம் உள்ளவராயும் ,உங்கள் எழுத்து ஆர்வத்திற்கு தடை விதிக்காதவராயும் இருக்க வேண்டுமென்ற மேலான பிரார்த்தனைகள் பலதோடு , வாழ்த்துக்கள் பலவும் கூறி விடைப் பெறுகிறேன்.
வணக்கம். இப்படிக்கு என்றும் அண்ணா திலீப்.
கடிதத்தைப் படித்தவன் சரி அப்படியானால் ஏன் புகைப்படம் அனுப்பினாய்.|
ஓ அதற்குள் இன்னுமொரு சந்தேகமா?.என் முகத்தைப் பார்க்க அவர் விரும்பினார். அவர் முகத்தைப் பார்க்க நான் விரும்பினேன். ஆகவே நான் போட்டோ ஒன்றை அனுப்பி பார்த்து விட்டு திருப்பி அனுப்பும் படி எழுதினேன்.
அவர் திருப்பியனுப்பியப் போது அவரின் போட்டோவான நீங்கள் கையில் வைத்திருக்கும் படத்தை அனுப்பினார்.
இல்லை நீ பொய் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாய் .இனிமேல் உன்னோடு சேர்ந்து வாழ முடியாது. என்று கூறி முடிக்கும் முன்பே காலிங் மணி|| அடிக்கும் சத்தம் கேட்டு மோகன் கதவைத் திறந்தான்.
ஆ ஹா ஆஹா என்ன ஆச்சரியம்! அழகானதோர் ஆணும் ,அழகானதோர் பெண்ணும்!.
மோகன் நிலைத் தடுமாறிப் போனான். நீங்க?
வந்தவர்கள் உள்ளே வராமலேயே இதுதானே மிஸிஸ் மோகன் வீடு எனக் கேட்க,
ஓ ஆமா! வாங்க உள்ளே என்றழைக்கவும், ராதாவும் விறாந்தைக்கு வரவும் சரியாகயிருந்தது.
ராதாட வெடிங் கார்ட் எனக்குக் கிடைத்தது. ஆனால் கல்யாணத்திற்கு வர எனக்கு வசதிப் படல்ல.
மிஸிஸையும் கூட்டிக் கொண்டுவர வேண்டுமென்று ,மாமா வீட்டுக்குச் சென்று, இவளையும் அழைத்துக் கொண்டு வந்தேன்.|| வந்தவர்கள் திலீபனும் மிஸிஸ் திலீபனும் என்பதை ராதா மோகனுக்கு அறிமுகப் படுத்தியப் போது மோகனின் முகத்தில் அசடு வழிந்தது .
தனது முட்டாள் தனமான சந்தேக எண்ணத்தை எண்ணி அவன் மனம் வறுந்தினான்.