கிறிஸ்மஸ் வாழ்த்து கார்டு
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 72
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜெர்மன் தேசத்துப் பெர்லின் பட்டணத்தில் பிரபுக்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருந்தாள். அந்த நாட்டுச் சக்கரவர்த்தியிடம் உயர் உத்தியோகம் வகிக்கும் இனத்தானான அன்பனிடம் அப் பெண் மனமுறிவு கொண்டிருந்தாள். அவ்வருத்தத்தை நீக்க விரும்பி ஓர் அழகான கார்டில் வேலைப்பாடோடு கூடிய அழகிய சித்திரம் வரைந்து, “கிறிஸ்து என்னும் குழந்தை உன் இருதயத்தில் தங்கி உனக்குச் சமாதானமும் சந்தோஷமும் உண்டாக்குவாராக” என்று கவர்ச்சியாக எழுதி கிறிஸ்மஸ் தினத்தன்று அனுப்பு வைத்தாள்.
அதனால் அவர்களுக்குள்ளிருந்த மனவருத்தம் நீங்கி விவாகம் செய்துகொண்டு களிப்புடன் வாழ்க்கை நடத்தினார்கள்.
அடுத்த கிறிஸ்மஸ் தினத்தன்று ராஜ்ய சபை விருந்தின் போது இவ்விஷயம் விளம்பப்பட்டது. அங்கிருந்த பெரியோர் யாவரும் இது நேர்த்தியான காரியமென்று நினைத்துத் தாங்களும் அப்படியே செய்ய ஆரம்பித்தனர்.
வியாபாரிகள், ‘இது நல்ல வியாபாரம்’ என்று கண்டு இன்று நாம் காண்கிற விதவிதமான வண்ண வண்ணக் கார்டுகளைச் செய்தார்கள்.
“கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்” (ரோமர் 16:16)
“உமக்குள்ள எல்லாவற்றிற்கும் சமாதானம் உண்டாவதாக” [1 சாமுவேல் 25:6]
“இறைமக்கள் அனைவருக்கும் என் வாழ்த்தைத் தெரிவியுங்கள்.” [ரோமர் 16:16]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
