காட்டிலெறித்த நிலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2025
பார்வையிட்டோர்: 2,469 
 
 

அக்கா பானுமதி ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருக்க யோகத்தின் கல்யாண நாடகம் களை கட்டி அரங்கேறவே செய்தது அவள் பானுமதியை விட மிக இளையவள். நாலைந்து வயது குறைவாக இருந்தாலும் ஏதோ அவள், செய்த, புண்ணியம் இந்த வயதிலே கல்யாணம் மட்டுமல்ல அவளைத் தேர் ஏற்றி ஊர் கோலம் போக, என்னவொரு அதிர்ஷ்டக் கார மாப்பி:ள்ளை அவளுக்கு எல்லாம் மண்ணோடு போகிற கதை தான் இருந்தாலும் வாழும் போது வாழ்க்கை ஒரு நேர் கோட்டில் போனால், தான் எல்லாம் சுபமாய் முடியும் இது ஒரு சுபசங்கதியல்ல.

யோகம் அக்கா அளவிற்கு அழகல்ல கூன் விழுந்த உடம்பும் கோணல் விழுந்த பார்வையுமாக அவள் பார்க்க ஒரு மாதிரியாக, இருந்தாலும் இன்றைக்கு அவள், தங்கத் தேர் ஏறி ஊர்வலம் போனது எதனால் ? தெருக்கோடி வரை, அவர்கள் அப்படி சென்று மறையும் வரை அக்கா நிலைகுத்தி அங்கேயே பார்ர்த்துக் கொண்டிருந்தாள் அவளின் உள் மன ஓட்டம் புரிந்து கொண்ட காரணத்த்னால், மதுரா அவள் முகத்தைத் திருப்பி ஆழ்ந்து அவளை நோக்கியவாறே கேட்டாள்.

என்னக்கா யோசிக்கிறாய்?

அங்கை பார் கை கோர்த்துக் கொண்டு, ரோட்டிலை வெட்கமில்லாமல் அவர்கள் போற அழகை பாக்க எரிச்சல் தான் வருகுது.

அதுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாய்?

அம்மாட்டை சொல்லி அழுவன்.

இது நடக்குமா?

ஏன் நடக்காது? யோகாவுக்கு இப்படி நடந்திருக்கு இருந்து பார். என்ரை வடிவுக்கு இன்னும்திறமாய் வரும்.

இதற்கு மேலே வாய் திறந்தால், பூகம்பம் தான் வெடிக்கும் அக்கா ஓர் அரை அசடு உள்ளே எந்த விபரமான சங்கதியுமில்லை அவள் உலகை அளந்து வைக்கிற பார்வைஎல்லாம் நேர்மறைசிந்தனை வியூகம் தான் அதில் நரபலி எடுக்கிற மாதிரி விபரீதமாக ஏதாவது நடந்தால் உயிர் மட்டுமல்ல தலையும் போகும் யாருக்கு தெரியும் ?மதுரா பிராத்தனை செய்தாள் இவள் நினைத்தபடியே எல்லாம் சுபமாய் முடிய வேண்டும் இந்த பளிங்கு பதுமைக்கு கல் எறிந்து பார்க்க யாருக்தான் மனம் வரும்? வந்ததே ஒருவனுக்கு அவன் ஒன்றும் ஆகாயதிலிருந்து குதித்து வந்த தேவமகனல்ல வேசி மகன் மாதிரிஏடாகூடமான ஒரு போக்கு வட்டிக் கடை நடத்த்தி உயிர் பிழைக்கிற ஒருவன் வேறு எப்படி இருப்பான்? இந்த சாந்தன் கொஞ்சம் தூரத்து உறவு தான் அதிலும் மச்சான் முறை. ஆனால் ஒட்டவில்லை. வேரறுந்து வீழ்கிற கதை தான் இதற்கு அடித் தளம் போட கல்யாணமான மறு நாளே அவன் வீட்டில் அவளுக்கு கொள்ளி வைக்க சூனியக் காரி போல சாப்பாட்டு மேசையருகே ஓர் உறவு முகம் தெரிந்தது. அப்பாவின் தம்பி மனைவி கமலத்துக்கு அவர்களைக் கண்டால், ஆகாது அதனால், மனதில் வெறுபேத்திக் கொண்டு சொன்னாள்.

பானு நீயும் இவர்களைப் பார்த்து செய் காரியத்தை பழகு என்றாளே பார்க்கலாம். அதென்ன செய்காரியம்? ஓ! அப்படிச் சொல்ல வருகிறாளா? வீடு கூட்டிப் பெருக்கி சமைத்துப் போடுவது ஒரு கலை தான் அதுவும் தெரியாமல் போனால் மக்கு பானு மக்குவாகவே இருந்து விட்டுப் போகட்டும் அவள் சொல்லி இதைக் கேட்ட போது, மதுராவுக்கு இரத்தம் கொதித்தது.

அக்கா அப்ப நீ இப்படிக் கேட்டிருக்க வேண்டும் நாங்கள் எதிர்பாராத விதமாக, போன வருடம் அந்த வீடு சகதி குளித்து எழுந்ததேஉனக்கு வந்தவனின் தங்கைக்கு வேலைக்காரனோடு பிள்ளை ஒன்று பிறந்ததே அப்ப நீகேட்டிருக்க வேணும் சீ! அதை நான் சொல்ல விரும்பேலை. கடவுளே கேட்கட்டும் என்றாள் அவள் கண்களிலிருந்து அந்த தொடக்கப் புள்ளி இதுவரை கரும் புளியாகவே இருக்கிறது பானு விரும்பிய மாதிரி தேர் ஓட்டம் அங்கு நிகழவில்லை வெறும் படுக்கை சுகத்துக்கு மட்டுமே அவள் என்றானது மற்றபடி சாந்தனுக்கு அவள் விலங்கு பூட்டிய அடிமை தான் ஆனால் யோகம் … இன்னும் அவள் அந்த தேரை விட்டு இறங்கவில்லை, தேய் பிறையாகவுமில்லை வளர்ச்சிப் பாதை அவளுக்கு சொர்க்கத்தையே காட்டிக் கொண்டிருக்க, மறு முனையில் மனதில் உதிரம் ஒட்ட தலை குப்புறச் சரிந்து அக்கா வீழ்ந்து விட்ட கொடுமைக்கு மாற்று பரிகாரம் தேடி, மதுரா மன உளைச்சல் கண்டது தான் மிச்சம்.

அக்காவுக்கு பிள்ளை செல்வத்துக்கு மட்டும் குறைவில்லை ஆனால், உணர்வுகளால், பங்கமுற்ற அவள் வெறும் நிழல், பொம்மை போலவே ஆகி விட்டிருந்தாள் யோகம் இன்னும் உச்சத்தில் தான் கொடி பறக்க வாழ்ந்து கொண்டிருந்தாள் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்த கடவுளுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை?சாந்தன் அக்காவை வெறும் அடிமை போலவே வைத்திருந்தார் புடவை முதற் கொண்டு, எல்லாத் தேர்வுகளும் அவன் கையாலேயே நடந்தேறின ஒரு தாசி கணக்கில் இரவில் படுக்கைச் சுகம் பெற மட்டும் அக்காவை நாடி வருவது ஒரு நீதியான செயலாகுமா?பகல் முழுவதும் தொண்டு செய்ய தாய் வீட்டிலே யே போய்க் கிடந்து விட்டு, ஒரு விபசாரி முகத்தில் விழிக்க வருவது போல் இரவு எட்டு மனியளவில் அவன் சைக்கிள் உருட்டிக் கொண்டு வருகிற சத்தம் முற்றத்தில் கேட்கும் போது மதுரா எரிச்சல், தாளாமல் காதுகளைப் பொத்திக் கொள்வாள்.

ஒருநாள் இரவு அவன் இப்படித்தான் வந்து களிப்புறும் போது அறைக்குள்ளிருந்து கனதியான ஒரு சத்தம் கேட்டது. அக்கா வெறுப்புத் தாங்காமல், அவனைப் படுக்கையிலிருந்து தள்ளி விட்டாக மதுராவின் உள்ளுணர்வு சொல்லிற்று . உந்த மிருகத்துக்கு நல்லாய் வேணும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அலங்கோலமாக கலைந்த, ஆடையுடன் அழுது கொண்டே அவளை நோக்கி ஓடி வந்தாள் அக்கா பானு.

அவள் கண் எதிரே இது ஒரு நிகழ்வு. இருண்ட சகாப்தத்தையே வ்கண்டவள் அவனை சிம்மாசனத்தில், அமர வைத்து விசிறியால் விசிறிக் கொண்டா இருப்பாள்.

கேவலம் இப்படியொரு பெண் புழுவாக பிறப்பதே , பெரிய சாப விழுக்காடு. ஆனால், இது எதனால் வந்தது? அவள் கையைப் பிடித்து உலுக்கியவாறே, அவள் குரல் ஆக்கோரஷமாகக் கேட்டது.

சொல்லு அக்கா. எல்லாம் கேட்டுப் பெற்ற வரம் தானேயோகம் தங்கத் தேர் ஏறிப் போன உன் வயிற்றெரிச்சலால் வந்த வினை தானே இது நீயாய் கேட்டுப் பெற்ற வரம் பெற்ற வரம் தானே1 அறைக்குள்ளை பூட்டிக் கொண்டு கிடக்கிறது ம் றோட்டிலை கை கோர்த்துக் கொண்டு ஊர்வலம் போவதும் தான் வாழ்க்கை என்று நினைச்சியே இப்ப கிடந்து அழு!

நீயும் தான் அப்படி நினைக்கிறியோ?

எப்படி?

அப்ப என்ரை கல்யாணம் முடிஞ்ச மறுநாள் இவர் சாப்பிடுக் கொண்டிருக்கும் போது பெரியம்மா என்னைக் குறை சொன்னதாலை வந்த வினை தான் இவர் என்னை என்னை போட்டுத் தள்ளுறது!

போதும் அழாதை அக்கா1 அதுவும் பிழைதான் அப்ப அவவினரை நாக்குப் பிழைச்சுது அதுக்கு உனக்குக் கிடைச்ச தண்டனை தான் இது நான் மறுக்கேலை . இப்ப ஒன்று சொல்ல விரும்புறன். ப்தர் மண்டிக் கிடக்கிற, இருளுக்கை நீ நீ காட்டில் எறித்த நிலா மாதிரி. ஆனால், யோகம் வெறும் நிழல், இப்படி, நீ மனதை தேற்ற வேண்டியது தான் .

அவள் சொன்ன வேதம் புரிந்து கொள்கிற அளவுக்கு அவள் ஒன்றும் அபார புத்திசாலியோ மேதையோவல்ல . ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது காட்டில் எறிக்கும் அந்த நிலா தான் தானென்று நினைவு கூரும் போது அவளின் முகம் பிரகாசமான ஒளியோடு களை கொண்டு நிற்பதாய் பட்டது தேவதைகள் இப்படித் தான் வாழ்கிறார்கள் போலும் யோகாவை அவள் நிழல் மீது நிற்பவள் என்று அறிந்தும் தப்புக் கணக்குப் போடுப் போடும் இந்த சமூகம் அவளை விட்டு வைத்திருக்கிறதென்றால், இதற்கு என்ன காரணம்? என் பாவக் கணக்கு இப்படித் தான் வந்து முடியும் போலும் என்று உள்ளுர மனம் வருந்தி, அவள் நினைக்கும் போது இந்தக் குறை மூழ்காத வெகு தூரத்தில் ஒளி விடும் ஒரு துருவநட்சத்திரம் போல, மதுராவின் முகம் அலாதியான களையோடு தன்னைப் பார்த்து சிரிப்பது போல உணர்வு தட்டிற்று. இப்படி வாழ்கையைக் கற்றுக் கொள்ள, இவள் போன்ற ஞானிகளால், தான் முடியும் என்று தோன்றியது.

அவள் சொன்ன வேதம் புரிந்து கொள்கிற அளவுக்கு அவள் ஒன்றும் அபார புத்திசாலியோ மேதையோவல்ல . ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது காட்டில் எறிக்கும் அந்த நிலா தான் தானென்று நினைவு கூரும் போது அவளின் முகம் பிரகாசமான ஒளியோடு களை கொண்டு நிற்பதாய் பட்டது தேவதைகள் இப்படித் தான் வாழ்கிறார்கள் போலும் யோகாவை அவள் நிழல் மீது நிற்பவள் என்று அறிந்தும் தப்புக் கணக்குப் போடுப் போடும் இந்த சமூகம் அவளை விட்டு வைத்திருக்கிறதென்றால், இதற்கு என்ன காரணம்? என் பாவக் கணக்கு இப்படித் தான் வந்து முடியும் போலும் என்று உள்ளுர மனம் வருந்தி, அவள் நினைக்கும் போது இந்தக் குறை மூழ்காத வெகு தூரத்தில் ஒளி விடும் ஒரு துருவநட்சத்திரம் போல, மதுராவின் முகம் அலாதியான களையோடு தன்னைப் பார்த்து சிரிப்பது போல உணர்வு தட்டிற்று. இப்படி வாழ்கையைக் கற்றுக் கொள்ள, இவள் போன்ற ஞானிகளால், தான் முடியும் என்று தோன்றியது.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *