கழுதையின் கடமை
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 220
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு கழுதை, உப்பு மூட்டையைச் சுமந்துகொண்டு ஆற்றைக்கடந்து சந்தைக்குப் போகையில் ஆற்றுப் பள்ளத்தில் ஒரு அடி ஆழமுள்ள தண்ணீரில் விழுந்து விட்டது. உப்பு பாதி கரைந்து போய்விட்டது. பாரம் குறைந்து விட்டது, கழுதைக்கு நிரம்பக் களிப்பு. மறு வாரமும் உப்பு மூட்டையைச் சுமந்து கொண்டு ஆற்றில் பள்ளம் இல்லாத வழியே வியாபாரி கழுதையை ஓட்டும்போது, முந்தின வாரம் உப்பு மூட்டை தண்ணீரில் விழப்பாரம் குறைந்ததைக் கண்ட கழுதை இப்பொழுதும் பள்ளமில்லாத இடத்தில் கொண்டுபோகையில் வேண்டுமென்றே மூட்டையைத் தண்ணீரில் விழச் செய்து படுத்துக்கொண்டு சண்டித் தனம் செய்தது. முக்கால்வாசி உப்பு கரைந்துவிட்டது. பறு மிகு லகுவானது. கழுதைக்குச் சொல்லி முடியாத மகிழ்ச்சி.
‘உனக்கு நான் பாடம் கற்பிக்கிறேன் பார்’ என்று வியாபாரி திட்டம் செய்து கம்பளித்துணிகளை மூட்டை யாகக் கட்டி கழுதை மேல் ஏற்றினான். நிரம்பப் பாரம். முன்போலவே கழுதை மூட்டையைத் தண் ணீரில் போட்டுப் படுத்துக்கொண்டது. கம்பளி மூட்டையை திரும்பக் கழுதை மேல் ஏற்றி அவதிப் படும்படி செய்துவிட்டான் வியாபாரி.
ஒரு கழுதை மூன்று கழுதைப் பாரத்தைச் சுமந்தது ஆண்டவரும் தமது அடியார் சிலருக்கு இவ்வாறு செய்வதுண்டு.
”பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்” [சங்கீதம் 37:10)
‘“நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடவுங்கள்” [எபேசியர் 4:1]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
