மு.பஷீர்

 

பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் – 12 May 2013

மு.பஷீரின் ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996), தலைமுறை இடைவெளி (2003), நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து 4வது வெளியீடாக ‘இது நித்தியம்’ இன்று கல்ஒழுவை மக்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்படுகின்றது.

மு.பஷீர் கடந்த 40 வருட காலமாக ஆற்றி வரும் இலக்கிய சேவைக்கு இன்று கல்ஒழுவை மக்களும் இலங்கை முஸ்லிம் இலக்கிய உலகும், தமிழ் பேசும் உலகும் ஒரு பெரிய பாராட்டை நடாத்துவது போல இவ்விழா சிறப்பாக அமைந்துள்ளது. இந்த நூலில் அடங்கியுள்ள கதைகளை மட்டும் அல்ல. நான்கு சிறுகதைத் தொகுதிகளிலும் ஏன் மு.பஷீரின் புனைகதை எண்ணங்களில் நிழலாடும் வாழ்வினதும் பாத்திரங்களினதும் உணர்வுகளை சொல்வது போன்ற அர்த்தமுள்ள அட்டைப் படம் ‘இது நித்தியம்’ தொகுதியை அழகுபடுத்துவதாக அமைந்துள்ளது. மேமன் கவியின் கற்பனைக்கு உண்மையில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

http://puttalamonline.com/2013-05-12/puttalam-special-articles/27174/

மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996 – என்னுரை

நீண்ட கனவொன்று இன்று நனவாகிறது. கதை சொல் லும் நுட்பத்தை அடைய நான், பல தசாப்தங்களாக தேடல் சுமந்த நதியாய், நீண்ட யாத்திரை செய்திருக்கிறேன். அகவயப் பட்ட வாழ்வுத் தாக்கங்கள், என்னை வீழ்த்திட முனைந்த போது இந்த எழுத்து ஒன்றுதான் தலைநிமிர்ந்து செயல்பட வைத்தது.

படைப்பாளியின் ஒவ்வொரு அவஸ்தையும், புடமிட்ட பொன்னாகப் பெறுமானம் மிக்கவை. அனுபவ அவஸ்தை களே, ஆழமான படைப்பு தரிசனத்தை தரவல்லன. வெறும் கற்பனையினால் மட்டும், ஒரு சிறந்த படைப்பை உருவாக்கி விட முடியாது. 20. காலம் எனக்கிட்ட கட்டளைகள் அனுபவ தரிசனங்க ளாகி, முதல் தொகுதியாக இன்று உங்கள் முன் தன்னைப் பதிவாக்கிக் கொள்கிறது. இளமை தொட்டே, சமூக ஈடுபாடு பற்றிய வியாபிப்பே என்னைப் பெரிதாய் ஈர்த்து வந்துள்ளது.

m_bashir23ஒரு படைப்பாளி என்கிற பக்குவம் வருவதற்கு முன்பே, என் ஆன்மாவை சமூகப் பிரக்ஞை தொட்டிழுத்திருக்கின்றது. பிரமுக அந்தஸ்துக்காகவன்றி மானுட நேசிப்புக்காக, அரசி யல், கலை, இலக்கியம், தொழிற் சங்கம், என்றெல்லாம் சுயலாபங்களின்றி இயங்கி, என்னைத் தாரை வார்த்திருக்கிறேன்.

அன்றாட வாழ்வில் பெற்ற அவஸ்தைகளே, அனுபவ வேர் பாய்ச்சி, என்னுள் படைப்பு கிளர்ச்சியைத் தருகின்றன.

உள் மனதை உறுத்தும் நிகழ்வுகள், உயிரணுக்களை உலுப்பும் அவலங்கள் என்னுள் அணை உடைத்துப் பாய, நான் ஒரு வடிகாலைத் தேடி அலைந்தேன்.

எழுத்து, எனக்கு வலுமிக்க கவசமாகியது!

படைப்பு, எனது சுயஞானக் குளியலாகியது! கதையும், கவிதையும், என் உள்ளார்த்தத்தை வருடி ஆத்மார்த்தமாகி உரிமை கொண்டாடின. நான் ஒரு படைப்பாளனாக, முகிழ்ந்தி ருக்க முடியாது போயிருப்பின், அன்றே ஒரு சிறந்த பாடகனாய் பரிணமிக்கும், திறமையும், சாத்தியமும் என்னிடமிருந்தன. இப்போதும் கூட என்னைப் பாடச் சொல்லி, கேட்டு ரசிப்பவர் கள் பலர் இருக்கிறார்கள்.

உண்மைதான்! ஒரு பாடகனால், சில கணங்களை மட்டும் பரவசத்தில் ஆழ்த்தி விடலாம். ஆனால் ஒரு படைப்பாளியி னால், மானுட மேன்மைக்கான மகோன்னதங்களை உயிர்ப் பித்து காட்ட முடியும். பெரிய அங்கீகாரங்களுக்காக, என்னை அலட்டிக் கொண்டதில்லை. பொய் முகங்கள் மீது நான் கொண்ட அதிர்ப்தி, சமூக விடியலுக்கான, புலர்வினைத் தேடி, என்னை எப்போதும் கிளர்ந்தெழச் செய்கிறது.

பரிமாணங்கள், பிரக்கியாதிகள், அணிந்து காட்டி, பெரு மைப்பட்டுக் கொள்ள, என்னிடம் எதுவுமே இல்லாத சாதார ணீயன் நான். எனது பலமும், பலவீனமும், என் படைப்புகளி லும் இருக்கும். நான் வேறு, படைப்பு வேறு என்று என்னால் பிரகடனப்படுத்த இயலாத வரை.

விமர்சனங்களை, திறந்த மனதுடன் வரவேற்பவன் நான். எந்த முரண்பாடுகளிலும் கூட, ஒரு சிறந்த படைப்பாளி, அவனது படைப்புகள் குறித்து, எளிதில் திருப்தியடைந்து விட முடியாது. மலையாள இலக்கிய ஜாம்பவான் வைக்கம் பஷீர் சொன்னார்:

“என்னுடைய அனுபவங்களை எல்லாம் எழுத்தில் வடிக்க எனது ஆயுள் போதவில்லை!” என்று. மற்றுமொரு சிறந்த படைப்பாளி, வாசுதேவன் நாயர், “என் சிறந்த படைப்பை, இனிமேல்தான் எழுத வேண்டும்!” என்றார்.

படைப்பாளியின் அடி, முடி தென்படாத சிருஷ்டித் தேடல்கள், காலத்தின் உயிர்த்துவத்தைப் போல, முற்றுப் பெறாமல், தொடருபவையே. எனக்குள்ளே, முனைப்பான கேள்விகள் ஜனிப்பதுண்டு. பொய் முகங்களுக்கு எதிரான, வலுவுள்ள அடிகளையேனும், கொடுக்கிற வீரியத்தை என் எழுத்துகள் பெற்றிருக்கிறதா?

மானுட நேயத்தின்மீது, வாழ்நிலை சிட்சைகளை, அனுப வமாக்கும் பக்குவத்தை எனது கதைகள் தொட்டிருக்கிறதா? சமூகப் பிரக்ஞையின் சாரங்களை உள் வாங்கிய தளத்தில் என் படைப்புகள் எந்த அளவு முன்னேறியிருக்கின்றன? இவைகள் – என் உள்ளத்தை உறுத்தும் கேள்விகள். விடைகளை அன் போடு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

இந்நூல் மல்லிகைப் பந்தலாய், வெளிவர பெருமுயற்சி எடுத்த, இலக்கிய நெஞ்சாளர் – திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு, நேசமுள்ள நன்றிகள்! 8 4. முன்னுரை வழங்கிய மூத்த எழுத்தாளர் சுபைர் இளங் கீரன் அவர்களுக்கும், எனது படைப்புகளை பெருமனதோடு வெளியிட்ட வீரகேசரி வார இதழ் ஆசிரியர் திரு இராஜகோ பால் அவர்களுக்கும் எனது உளம் நிறைந்த நன்றிகள்!

என் இலக்கிய பரிணாமத்தை உற்சாகப்படுத்தி வரும், இனிய இலக்கிய நண்பர்களான, எம்.ஏ.எம். நிலாம், நீர்கொ ழும்பூர் முத்துலிங்கம், எம்.எச்.எம். ஷம்ஸ், கமால், அல்ஆசூ மத், மனசார உதவிய மொயின் சமீம், ஜலாத்மரைக்கார், ஹஸீர், ஜின்னா சரீப்தீன், எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோருக் கும் நூல் வெளிவர ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

மு.பஷீர்
233 -D
கல்லொழுவை
மினுவாங்கொடை
ஸ்ரீலங்கா.

நிஜங்களின் வலி – சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005 – என்னுரை

அன்பிற்கினிய இலக்கிய நெஞ்சங்களே! காலம் தான், எத்தனை அசுர கெதியில் சுழன்றடித்து விரைந்து செல்கிறது. அத்தனை சுழற்சிக்கும், மனிதனால் ஈடுகொடுத்து நின்று பிடிக்க முடிகிறதா? என்பதுதான் இன்றைய பிரச்சினை. இழப்பு, துயரம், அதிர்ச்சி, அனர்த்தம் என்றெல்லாம் சுமைகளின் அழுத்தம் பெருகி, நம் வாழ்வும், இருப்பும், கேள்விக்குறியாகி, பதற்றத்தோடு நகர்கிறது.

தலையிலும், முகத்திலும், படரும் நரை, நமக்கு வயதாகி விட்டது என்று சமிக்ஞையை உணர்த்துகின்றது. வெள்ளை நரை ஒவ்வொருவருக்கும் அகவயப்பட்ட எச்சரிக்கைச் சவால் தான்! நமது இளமையை, எங்கே, எப்போது, தொலைத்தோம்? சட்டென ஞாபகத் தீட்சண்யத்தினுள் சிக்க மறுப்பது சங்கடம் தான்.

சுழன்றடிக்கும் இயந்திர உலகில், இன்று இளமைக்குத் தான், உச்சகட்ட மவுசு, தலைவாரிக்கொள்ளும் போதும், முகத்தை பிளேட் உழும் போதும், நரை பற்றிய கவலை பெரிதாய் அலைக்கழிக்கிறது. பிரசித்தி பெற்ற படைப்பாளர்களில் பலர், மூப்பை அணிந்தவர்களாகவே தோற்றம் தருகிறார்கள். என்றாலும் அவர்கள் மனதளவில் என்றும் இளைஞர்களே! எழுத்தாளன் தன் சிருஷ்டிப் படைப்புகளுக்கு இளரத்தம் பாய்ச்சுபவன். மனித வாழ்வில் அனுபவங்கள் தான், உறுதி மிக்க கவசங்கள்.

அவை தான் படைப்பாக்க வறுமையை, விரட்டி அடிப்பவை. தகழியும், வைக்கம் பஷீரும், புதுமைப்பித்தனும், இன்னும் சிலரும் அதற்கு உதாரண புருஷர்கள். வாழ்வனுபவம் இன்றி, ஒரு படைப்பாளியினால், கலைத்திறன் மிகக் சிருஷ்டியை யதார்த்த பூர்வமாக படைத்து விட முடியாது.

என் பிரிய நெஞ்சங்களே!

என் முன்னைய இரு தொகுதிகளின், என்னுரையிலே, எனது படைப்பாக்கங்கள் குறித்து, சுய விமர்சனங்கள் எதனையும் நான் செய்தவனல்ல. அவற்றின் சாதக, பாதகங்களை, தேர்ந்த வாசகர்களிடத்திலும், ஆய்வு செய்பவர்களிடத்திலும் விட்டு விட்டேன். அவை குறித்த சிறந்த விமர்சனப் பதிவுகள், என்னைப் பெரிதும் உற்சாகப்படுத்தின. இப்போது அவை பற்றிய எனது உள்ளுணர்வுகளை, உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

எனது இரு தொகுதிகளான, “மீறல்கள்”, “தலைமுறை இடைவெளி” ஆகிய நூல்களுக்கு நீங்கள் காட்டிய கரிசனையில் நெகிழ்ந்து போனேன். இப்போது எனது மூன்றாவது நூலான, “நிஜங்களின் வலி” உங்கள் கைகளில் தவழ்கிறது. உங்களின் பேராதரவு என் பக்கம் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை கொண்டவனாக நான் இருக்கிறேன். எனது சிருஷ்டிகள் என் சுய வாழ்வனுபவத்திலிருந்து பெயர்ந்தவை. நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்றைக்கும் இருந்ததில்லை. நான்கு தசாப்தங்களைத் தாண்டிய நிகழ்வுகள் கூட, என் மனப்பதிவில் இன்னும் அழியாச் சித்திரங்களாக, நிலைத்திருக் கின்றன.

ஒட்டகம் நீரைக் குடித்துச் சேமித்து வைப்பதைப் போல அவற்றை ஒரு தீவிர உள்வாங்கல்களில் சீரணித்திருக்கிறேன். அனுபவ யதார்த்தங்கள், ஆமை ஓட்டிலிருந்து நீளும், தலையினைப் போல், அடிக்கடி எட்டிப் பார்க்கும். தீவிர மன உறுத்தல்களில் உழன்று, படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

இத்தொகுப்பிலுள்ள, பாம்பு மனிதன், முஸ்தபா வாத்தியார், கேரளத்து, எர்ணாகுளத்தில், நான் நேரடியாகக் கண்டு பிடித்த மனிதர். பாம்பு வித்தையை வேடிக்கை பார்க்கப் போனதில், அவரெனக்கு, ஆத்மார்த்த நண்பரானார். நூற்றுக்கு எண்பது வீதம், பாம்பு மனிதனை, இலக்கியத்தில், பதிவு செய்ய நான் பெரிதும் சிரமப்பட்டேன். எனது தீவிரத் தேடலின் போது, அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயமிருந்தது. அவர் இல்லத்தில் நட்புணர்வோடு சாப்பிட்டிருக்கிறேன்.

கேரளத்து தமிழக, குக்கிராமத்து மனிதர்கள் பலர் எனக்கு நிறையவே பரீட்சயமானவர்கள். மலையாளிகள் மேசை சாப்பாட்டையே பெரிதும் விரும்புவார்கள். பலவகைக் கறிகளோடு, சுவைத்து உண்பார்கள். சோற்றில் நிறைய ஆணம் ஊற்றி, கையினால் பிசைந்து உருண்டை பிடித்து, அவசர அவசரமாக வாய்க்குள் வீசுவார்கள்.

நான் ஊர் திரும்புவதற்காக அவரிடம் விடைபெறப் போனேன். “உங்கள் பிள்ளைகளுக்கு நான் ஏதாவது பரிசுப்பொருட்கள் தந்தனுப்ப வேண்டுமே” எனக் கவலை தெரிவித்தார். நான் மறுத்துவிட்டு இவ்வாறு கூறினேன். “நீங்கள் என் பிள்ளைகளுக்கு விளையாடப் பாம்புக்குட்டிகளை, பார்சல் செய்து, பரிசாகத் தந்தீர்களென்றால், என்பாடு பெரும் சங்கடமாகிப் போகும்” என்றேன். எனது சிலேடையை ரசித்த முஸ்தபா வாத்தியார், வீரப்பா பாவனையில் தொந்தி குலுங்கக் கடகடவென்று அட்டகாசமாய் சிரித்தார்.

இத்தொகுப்பிலுள்ள “அக்னி மழை” எனது சொந்தக் கிராமத்தை கிடுகிடுக்க வைத்து அதிர்ச்சியூட்டிய உண்மைச் சம்பவம். தமிழ் நாட்டில் தூத்துக்குடிக்குச் சமீபத்தில், சில மாதங்கள், ஆத்தூர் எனும் கிராமத்தில் தங்கியிருந்தேன். இயற்கையெழில் கொண்ட அவ்வூர் என்னை வெகுவாக ஈர்த்தது. முற்றிலும் தமிழ் நாட்டு அனுபவங்களை வைத்து, “மானுஷ்யம், கதையினைப் படைத்தேன். அது 1995ஆம் ஆண்டில், வீரகேசரியிலும், பின்னர் எனது “மீறல்கள்” தொகுப்பிலும், 50வது சுதந்திர பொன் விழா சிறுகதைத் தொகுப்பிலும், இடம்பெற்றது. அப்படைப்பு பல மட்டங்களிலும் விதந்து பேசப்பட்டது.

திருவனந்தபுரத்து மலையாளச் சூழலில் படைக்கப்பட்ட “சிதைவுகள்” கதை, “மீறல்ககளில்” வெளிவந்தது. மூன்றாவது மனிதன் இதழில், அக்கதை உரத்த பாராட்டுக்குரியதாயிற்று. “தலைமுறை இடைவெளியில்” வெளிவந்த “நிர்ணயம்” முற்றிலும் மருத்துவமனைச் சூழலில், நோயாளிகளின் விசாரமான மன உணர்வுகளால் பின்னப்பட்டது. அக்கதையில் மனம் லயித்த ஒரு பிரபலமான கவிஞர், (தொழில்ரீதியில் டாக்டர்) தொலை பேசியில் உரையாடினார்.

“நீண்ட காலங்களாக அரச மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு. உங்கள் “நிர்ணயம்” கதை அச்சூழலை நேர்த்தியாகப் படம் பிடிக்கிறது. “இந்த அனுபவங்களை இவ்வளவு யதார்த்தபூர்வமாக எப்படி உள்வாங்கினீர்கள்? எனது பாராட்டுக்கள்!” என்று வியப்பு தெரிவித்தார். “ஜெர்மன் தாத்தா”, மிகவும் பிரபலம் வாய்ந்த கவிஞர்கள் இருவர், கலைத்துவமிக்க சிறந்த கதையென, மனம் திறந்து பாராட்டினார்கள்.

வட புலத்தைச் சேர்ந்த புனைகதைத் துறையில் மிகப்பிரசித்தி பெற்ற படைப்பாளி, கோகிலா மகேந்திரன் (நான் நேரடியாக இன்னும் சந்தித்ததில்லை) இவ்வாறு மடல் வரைந்தார்.

“உங்கள் “தலைமுறை இடைவெளி” நூலை முழுக்கப் படித்தேன். மொழி ஆளுமை சிறப்பாக உள்ளது. பிரதேச மண்வாசனையை அளவோடு கலந்து யாரும் ரசித்துப் படிக்கும் வண்ணம், கதைகள் அமைந்துள்ளன. நான் என்ற தன்மையில், நீங்கள் நின்று, கதை சொல்லும் போது, கதைகளில் ஒன்றிப் போவது இலகுவாய் உள்ளது. “தலைமுறை இடைவெளி”, “எதிர்பார்ப்பு”, “திசைகள்”, “பாறைக்குள் ஊற்று”, “ஈரம்” ஆகியவை நல்ல கதைகள். மல்லிகையில் உங்கள் கதைகளை அவ்வவ் போது படித்திருக்கிறேன். ஆயினும், தொகுதியினைப் படிக்கும் போது, உங்களை முழுமையாக அறிய முடிகிறது. பாராட்டுக்கள்.” (கடிதம் – 15.1.2005)

இவை சக படைப்பாளிகள் எனது படைப்புகள் மீது வைத்த பக்க சார்பற்ற பதிவுகள். இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதின் தாற்பரியம் சுயபுராணம் பேசி, தம்பட்டம் அடிப்பதற்கல்ல! விருதுகள், பட்டங்கள், பரிசுகள் என்பன வெறும் ஊக்குவிப்பு அடையாளங்கள் மட்டுமே இவற்றால் படைப்பாளி மனம் திருப்தி அடைந்துவிட முடியாது. இவற்றையும் தாண்டி அவனது சிருஷ்டிகள், பக்கச்சார்பற்று, திறந்த மனதுடன் பாசாங்கற்று விமர்சிக்கப்படும் போதுதான், உண்மைப் படைப்பாளி உற்சாகமடைய முடியும்.

“நிஜங்களின் வலி” என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு கதைகளும், மல்லிகை, தினக்குரல் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.

படைப்புக்கள் வெளிவரக் களம் அமைத்துத் தந்த நேசத்திற்குரிய, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும், தினக்குரல் துணையாசிரியை சகோதரி எம்.தேவகௌரி அவர்களுக்கும் அன்பின் நன்றிகள்.

நூலுக்கு காத்திரமான ஒரு முன்னுரையைத் தந்த, பிரபல இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள் உரித்தாகுக. அழகான அணிந்துரை நல்கி, நூலுக்குப் பெருமை சேர்த்து, உதவிய நேசத்துக்குரிய, முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர், அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், எம்.பி. அவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள்!

இந்நூல் வெளிவருவதில் மிகுந்த அக்கறை காட்டி உழைத்த கொழும்பு மீரா பதிப்பகத்தினருக்கு என்றும் எனது நன்றிகள் உரித்தானது.

பின் அட்டையில் என்னைப் பதிவு செய்த, பிரபல ஊடகவியலாளர், என் நீண்ட நாளைய உற்ற நண்பர் அல்ஹாஜ் எம்.ஏ.எம். நிலாம் அவர்களுக்கு என் இதய நன்றிகள். இந்நூல் வெளிவர எனக்கு ஒத்தாசை புரிந்த மருமகன் அல்ஹாஜ் எம்.டி.எம்.புஹாரி அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள். எனக்குப் பக்கபலமாக நின்று, ஆலோசனைகள் வழங்கிய என் இலக்கிய சகாக்கள் கவிஞர் மேமன்கவி, பாரதி கலா மன்றத் தலைவர் த.மணி, எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆகியோருக்கு எனது அன்பினை இத்தால் தெரியப்படுத்து வதோடு, நண்பர்கள், வாசகர்கள், அபிமானிகள், அனைவரையும் மனம் நெகிழ்ந்து நினைவு கூறியவனாக விடைபெறும்

தங்களன்புள்ள
மு.பஷீர்
121/23 நிவ் ரோட் கல்லொளுவை மினுவாங்கொடை
தொலைபேசி: 2298759

எம்.ஏ.எம்.நிலாம் (தினக்குரல்) – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு, மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

பஷீர் என்ற பெயரைக் கேட்டதும் இலக்கிய உலகின் எண்ணம் நேரடியாகச் செய்வது மலையாள இலக்கிய ஜாம்பவான் வைக்கம் முஹம்மது பணிரை நோக்கித்தான். அந்த பழரின் கேரனப் பரம்பரை பிலிருந்து, இலங்கை மண்ணுக்கு கிடைத்த சிறந்த படைப்பிலக்கியவாதி தான்.

மு.பஷர் சிறுகதை, கவிதை, ஆய்வு என முத்திரை பதித்துள்ள இவர், வாழ்வில் தொடரும், இடர்துன்பங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இலக்கியப் பங்களிப்பு செய்து வருகிறார். தந்தைவழி கேரளத்தோடு தொடர்புடைய பஷிரின் கதைகளில் மலையாள நெடி வீசுவதை நன்றாகவே உணரலாம். இவர் அறுபதின் முற்பரப்பில் இலக்கியப் பிரவேசம் செய்த போதும், 68ஆம் ஆண்டிலேயே முதற் சிறுகதை வீரகேசரியில் பிரசுரமானது. மு.பஷீர், 50க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், கவிதை, கட்டுரைகளென நூற்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். பஷீரின் படைப்புகள் தேசியரீதியிலும், சர்வதேசாதியிலும் பரிசுகளைச் சுவீகரித்துக் கொண்டன. இவர் மீறல்கள்” “தலைமுறை இடைவெளி” ஆகிய இரு சிறுகதை நூல்களின் சொந்தக்காரர்.

நிஜங்களின் வலி எனும் 12 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இப்போது வெளியாகிறது. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில், வாழும் கதைகள் எனும் நிகழ்ச்சியினை நான்காண்டுகளாக வழங்கி வந்துள்ளார். 1999இல் அரசின் கலாபூஷன் விருதைப் பெற்ற இவர், கொழும்பில் நடை பெற்ற உலகத் தமிழ் இலக்கிய இஸ்லாமிய மகா நாட்டில் சிறந்த படைப்பாளிக்கான விருதையும், பொற்கிளியையும் பெற்றார். மாதும் றேயப் படைப்பிலக்கியவாதியான மு.பஷீரின் கதைகள், கலைத்துவ மிக்கவை, யதார்த்தமானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *