

முனைவர் வா.நேரு..பிறந்த தேதி 31.05.1964. பெற்றோர்கள் க.வாலகுரு,சு.முத்துக்கிருஷ்ணம்மாள், இருவரும் ஆசிரியராகப் பணியாற்றி, இப்போது நினைவில் வாழ்பவர்கள்.
சொந்த ஊர் மதுரை மாவட்டம் சாப்டூர்.இப்போது வசிப்பது மதுரையில்.
தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றவர்.
1. பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்
2. சூரியக்கீற்றுகள் என்னும் இரண்டு கவிதைப்புத்தகங்களும்,
3. நெருப்பினுள் துஞ்சல் என்னும் சிறுகதைத்தொகுப்பும் இவரால் படைக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது.
பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, துறையின் அனுமதி பெற்று, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களை நெறியாளராகக் கொண்டு ‘இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ‘என்னும் தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
‘விடுதலை’ நாளிதழ், ‘உண்மை’ மாதமிருமுறை இதழ்களில் எழுதுபவர்.
நிறைய நூல்களை வாசிப்பது. வாசித்த நூல்களை அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் தனது வலைத்தளத்தில் vaanehru.blogspot.in பதிவிடுவது இவரது முக்கியமான பொழுதாக்கம்.