பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 – டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர்.
பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார்.
பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச் சென்றபின் பெரும்பாலும் அவற்றிலேயே எழுதினார். 1980 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் நான்கு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டார். பிரபஞ்சனின் சிறுகதைகள் அவற்றின் முற்போக்கு கருத்துக்களுக்காகப் புகழ்பெற்றவை
பிரபஞ்சன் பெரும்பாலான நாவல்களை தொடர்கதைகளாகவே எழுதினார். அவருடைய புகழ்பெற்ற முதல் நாவல் மகாநதி. தினமணிக் கதிர் இதழில் 1990-ல் தொடராக வந்த வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ 1995-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்ட நாவல் அது. `வானம் வசப்படும்’ அதன் தொடர்ச்சியாக அமைந்த நாவல்.
டிசம்பர் 21, 2018-ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்தது.
நாவல்கள்
மானுடம் வெல்லும்
வானம் வசப்படும்
மகாநதி
சந்தியா
காகித மனிதர்கள்
பெண்மை வெல்க
காதலெனும் ஏணியிலே
சுகபோகத்தீவுகள்
திரை
தீவுகள்
நீலநதி
பதவி
முதல் மழை துளி
மகாபாரத மாந்தர்கள்
பூக்களை மிதிப்பவர்கள்
பூக்கள் நாளையும் மலரும்
சிறுகதை தொகுப்புகள்
நேற்று மனிதர்கள்
விட்டு விடுதலையாகி
இருட்டு வாசல்
ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
அப்பாவின் வேஷ்டி
சித்தன் போக்கு
பிரபஞ்சன் – சிறுகதைகள்
தபால்காரர் பெண்டாட்டி
அந்தக்கதவு மூடப்படுவதில்லை
நாளைக்கும் வரும் கிளிகள்
குயிலம்மை
மரி என்கிற ஆட்டுக்குட்டி
யாசுமின் அக்கா
ருசி
ஒரு மனுஷி
கழுதைக்கு அஞ்சுகால்கள்
ஒரு சினேகத்தின் கதை
குறுநாவல்கள்
ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
முட்டை
அகல்யா