கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1]
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. [2]
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[3] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
படைப்புகள்
அகராதிகள்
- கரிசல் வட்டார வழக்கு அகராதி
சிறுகதைகள்
- கன்னிமை
- மின்னல்
- கோமதி
- நிலை நிறுத்தல்
- கதவு(1965)
- பேதை
- ஜீவன்
- நெருப்பு (புதினம்)
- விளைவு
- பாரதமாதா
- கண்ணீர்
- வேட்டி
- கரிசல்கதைகள்
- கி.ரா-பக்கங்கள்
- கிராமிய விளையாட்டுகள்
- கிராமியக்கதைகள்
- குழந்தைப்பருவக்கதைகள்
- கொத்தைபருத்தி
- புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
- பெண்கதைகள்
- பெண்மணம்
- வயது வந்தவர்களுக்கு மட்டும்
- கதை சொல்லி(2017)
குறுநாவல்
- கிடை
- பிஞ்சுகள்
நாவல்
- கோபல்ல கிராமம்
- கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது)
- அந்தமான் நாயக்கர்
கட்டுரை
- ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
- புதுமைப்பித்தன்
- மாமலை ஜீவா
- இசை மகா சமுத்திரம்
- அழிந்து போன நந்தவனங்கள்
- கரிசல் காட்டுக் கடுதாசி
தொகுதி
- நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்
ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்ஷன் குமார் இயக்கிய திரைப்படம்)