இராசேந்திர சோழன்

 

எழுத்தாளர் இராசேந்திர சோழன் ( ராஜேந்திர சோழன், அஸ்வகோஷ், அஸ்வகோஸ்)(டிசம்பர் 17, 1945 -மார்ச் 1, 2024) தமிழ் எழுத்தாளர். மார்க்ஸிய பார்வை கொண்டவர். பின்னர் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப்பார்வை என மாற்றிக்கொண்டார். வடதமிழகத்து அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். அடித்தள மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் பாலுணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதியமையால் விவாதங்களுக்கு உள்ளானவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர்.

‘உதயம்’, ‘பிரச்சனை’, ‘மண்மொழி’ ஆகிய இதழ்களை வெளியிட்டார்.

சிறிது காலமாக உடல்நலமின்றி இருந்த நிலையில், 2024 மார்ச் 1 அதிகாலையில் காலமானார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

சிறுகதைகள்

இராசேந்திரசோழன் பின்வரும் 79 சிறுகதைகளை எழுதியிருக்கிறார்: (அகரவரிசையில்)

  1. அவரோட லோகம் (இருபால் அத்துமீறல் கதை)
  2. அவுட்பாஸ்
  3. அன்பின் வழியது (தமிழினி இணைய இதழ்)
  4. இச்சை
  5. இசைவு (தமிழினி இணைய இதழ்)
  6. இடம்
  7. இணக்கம்
  8. இழை
  9. உளைச்சல் (தமிழினி இணைய இதழ்)
  10. ஊற்றுக்கண்
  11. ஊனம் (இருபால் அத்துமீறல் கதை)
  12. எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம் (1971) (ஆனந்த விகடன்) (மூன்றாவதுகதை)
  13. எதிர்பார்ப்புகள் (இருபால் அத்துமீறல் கதை)
  14. கடன்
  15. கரசேவை (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
  16. கழுதையின் வாயில் (தமிழினி இணைய இதழ்)
  17. காசுக்காக அல்ல
  18. காணிக்கை (தமிழினி இணைய இதழ்)
  19. கிட்டுதல் (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
  20. குருவிவர்க்கம்
  21. கொஞ்சம் இருட்டுக்கு வந்துபாருங்கள்
  22. கோணல்வடிவங்கள் (கசடதபற இதழ் எண் 10; 1971 சூலை, பக்.2-4, 13) (இருபால் அத்துமீறல் கதை)
  23. கைக்கிளை
  24. சடங்கு
  25. சவாரி (தீராநதி, 2006 பிப்ரவரி)
  26. சாம்பல் குவியலில்
  27. சாவி
  28. சிதைவுகள் (இருபால் அத்துமீறல் கதை) (விழிப்பு இதழில் வெளிவந்தது)
  29. சில சந்தர்ப்பங்கள் ((பாலியல் தொழிலாளி கதை) (செம்மலர்)
  30. சுழல்காற்றும் சருகுகளும் (தமிழினி இணைய இதழ்)
  31. சூரப்பன் வேட்டை
  32. சூழல் (இருபால் அத்துமீறல் கதை)
  33. சென்னையில் பார்க்க வேன்டிய இடங்கள்
  34. டெய்லர் கந்தசாமி
  35. தக்கார் தகவிலார்
  36. தனபாக்கியத்தோட ரவ நேரம் (தமிழினி இணைய இதழ்)
  37. தற்செயல்
  38. தாகம்
  39. தோது
  40. நாட்டம் (இருபால் அத்துமீறல் கதை)
  41. நாய்வேஷம் (தமிழினி இணைய இதழ்) (இருபால் அத்துமீறல் கதை)
  42. நாவன்மை (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
  43. நான் பண்ணாத சப்ளை
  44. நிலச்சரிவு
  45. நீதி
  46. பகல்தூக்கம்
  47. பக்கவாத்தியம்
  48. பக்தி மார்க்கம்
  49. பகை (தமிழினி இணைய இதழ்)
  50. பரிணாமச் சுவடுகள்
  51. பலவீனம் (இரண்டாவது கதை)
  52. பறிமுதல் (செம்மலர்)
  53. பற்று
  54. பாசிகள் (பாலியல் தொழிலாளி கதை), (பிரச்சினை இதழில் வெளிவந்தது
  55. பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்
  56. புரட்சிப் பயணம் (அரசியற்பகடி அங்கத உருவகக்கதை)
  57. புற்றில் உறையும் பாம்புகள் (கசடதபற)
  58. பெண் என்று சொல்லிடிலோ! (தமிழினி இணைய இதழ்)
  59. பைத்தியம்
  60. பொழுது
  61. பேதைமை
  62. மடை
  63. மதராஸும் மன்னார்சாமியும்
  64. மயக்கம்
  65. மனக்கணக்கு (முதற்கதை)
  66. முனைப்பு
  67. மையம்
  68. ருசிப்பு
  69. ரோதனை
  70. வரம்பு
  71. வன்மம் (தமிழினி இணைய இதழ்)
  72. வானம் வெளிவாங்கி (1972) ((பாலியல் தொழிலாளி கதை), (அஃக் இதழ்)
  73. விசுவாசம்
  74. விபத்து
  75. விருந்து
  76. விவஸ்தை
  77. வினை
  78. வெளிப்பாடுகள்
  79. வைபவம் (செம்மலர், 1973)

குறுநாவல்கள்

  1. உறவு பந்தம் பாசம்
  2. சிறகுகள் முளைத்து; முதற்பதிப்பு: 1988 சனவரி, சரவணபாலு பதிப்பகம், 33-இ, கீழ செட்டி தெரு, விழுப்புரம், பக்.146+54); இரண்டாம் பதிப்பு: 2018 தமிழினி, சென்னை
  3. சீட்டாட்டக்கலைஞன்
  4. மகாலட்சுமி (தமிழினி இணைய இதழ்)
  5. பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம் (1997)
  6. விதிகள் . . . விதிகள் . . .
  7. வேட்கை
  8. 21-வது அம்சம்

நாடகங்கள்

  1. தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
  2. நாளை வரும் வெள்ளம்
  3. மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்
  4. மீண்டும் வருகை
  5. வட்டங்கள்
  6. விசாரணை

(அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் எழுதிய இராசேந்திரசோழன் எழுதிய 12 நாடகங்கள் “அஸ்வகோஷ் நாடகங்கள்” என்ற நூலாக வெளிவந்துள்ளன.)

நாவல்

  1. காவலர் இல்லம், 2019, தமிழினி
  2. பதியம், 2023, பக்.224, தமிழினி

கட்டுரைகள்

  1. சிவப்பு காவிகள் (உதயம், சூன் 15,197?)
  2. தோப்புகளில் தனிமரமாய் (பின்னுரை)
  3. முக்காட்டு முகங்கள் (பின்னுரை)

சிறுகதைத்தொகுதிகள்

  1. எட்டுக் கதைகள், க்ரியா பதிப்பகம்
  2. சீட்டாட்டக் கலைஞன்,2022, தமிழினி
  3. தற்செயல் (1994)
  4. பறிமுதல் (1979)
  5. இராசேந்திரசோழன் கதைகள் (இருதொகுதிகள்), 2022, தமிழினி
  6. இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்; 2020; டிஸ்கவரி புக்பேலஸ்
  7. முத்துக்கள் பத்து இராசேந்திர சோழன், 2023, பக்.140, அம்ருதா

குருநாவல் தொகுதிகள்

  1. இராசேந்திரசோழன் குறுநாவல்கள் (தொகுப்பு)
  2. சிறகுகள் முளைத்து
  3. மகாலட்சுமி, 2021, பக்.191, தமிழினி
  4. சீட்டாட்டக்கலைஞன்