ஒழுங்கு





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைமை எறும்பு கூறியது:
‘ஒழுங்காகச் செல்லுங்கள்… பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது.’
ஓர் எறும்பு –
‘என்பாட்டில் நான் போவேன்…’ என்று வரிசையை உடைத்துக் கொண்டு தனிவழி போனது.
கொஞ்ச நேரத்தில் –
வரிசை குலையாமல் போன எறும்புகளெல்லாம் வாயில் அரிசியோடு திரும்பி வந்தன.
ஒற்றை எறும்பின் முகம் ஒடுங்கியது.
நிரை குழம்பாத எறும்புகளில் ஒன்று சொன்னது:-
‘வரிசை பிளப்பான்
பரிசை இழப்பான்’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.