கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 74 
 
 

மிகப் பெரிய கல்லூரி வளாகம் அது. மாலை நேரம். மலர் மரத்தின் கீழ் இறுதி ஆண்டு மாணவன் மகேஷ் அமர்ந்து இருந்தான். அவனுடன் பயிலும் மலர்விழி அவனைப் பார்த்து விட்டு அருகில் வந்தாள். பக்கத்தில் அமர்ந்தாள்.

‘கையை குடுய்யா…’

‘ஏன் எதுக்கு மலர்?’

‘எதுக்கா? ஹிஸ்ட்டரி புரொபசர் லீலா மேம் அடுத்து என்ன வேலை பார்க்கப் போறீங்கன்னு கேட்டதுக்கு நீ எங்களுக்கு கொஞ்சம் நிலம் இருக்கு குத்தகைக்கு விட்டு இருக்கோம். அதுல நானே பயிர் பண்ணப் போறேன்னு சொன்னியாமே… காலேஜ் புல்லா உன்னை பத்தி பேச்சு…’

‘பெருமைக்கு எல்லாம் சொல்லல ட்ரெண்ட் ஆகணும்னு அட்டென்ஷன் சீக்கிங் க்காக சொல்லல… அதுல இருக்கற கஷ்டத்தை எல்லாம் தெரிஞ்சு வாழ்க்கையில முன்னேற பார்க்கலாம்னு திட்டம்.. எண்ணம்’

‘உன் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் மகேஷ்’ என்று அவனுடைய கைகளைக் குலுக்கினாள் மலர்விழி.

(தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது – கொன்றை வேந்தன் – 46 – பயிர்த்தொழில் செய்து வாழ்க்கை நடத்துவது சிறப்பு)

– இலக்கிய வரிக் கதைகள் – ஔவைப் பாட்டியின் கொன்றை வேந்தன்…

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *