என்றும் குதூகலம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,869 
 
 

ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல. பல நாட்கள் சென்றோம். ஒவ்வொரு நாளும் முதல் நாள் போன்ற குதூகலத்தோடு வரவேற்றான் அதியமான்.

அவன் பரிசில் கொடுப்பதும் அப்படித்தான். நேரம் நீண்டாலும் சரி, குறுகினாலும் சரி, பரிசு கிடைப்பது என்னவோ உறுதி!

யானைக் கோட்டில் வைத்த கவளம், அதன் வாயிற் சென்று வீழ்வது தவறாதது போன்று, அதியமான் கைகளிலுள்ள பரிசில், எங்கள் கைகளை அடையத் தவறுவதில்லை .

பரிசுக்கு ஏங்கும் நெஞ்சப் பறவையே, பறந்து போ! அதோ, அதியமான் உன்னை எதிர்பார்த்து நிற்கிறான்!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *