உதவி செய்யும் போது எச்சரிக்கை தேவை
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 118

காட்டுப் பூனை ஒன்று வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்டு விட்டது. மரப் பொந்தில் இருந்த எலி இந்தக் காட்சியைப் பார்த்து, துணிச்சலாக வெளியே வந்து இங்கும் அங்கும் துள்ளிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தது.
பூனை எலியிடம் பேசியது ‘என்னுடைய துன்ப நிலையைப் பார்த்து உனக்கு இரக்கம் வரவில்லையா? இனிமேல் உன்னையும் உன் கூட்டத்தரையும் இரையாக்கிக் கொள்ள மாட்டேன். எனக்கு உதவி செய். இந்த வலையை அறுத்து என்னைக் காப்பாற்று’
பூனை மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டதால் எலி பூனையின் வலையை அறுக்க முன் வந்தது.
ஆனால், மெதுவாக வலையின் ஒவ்வொரு இழையை அறுத்துக் கொண்டிருந்தது. பூனை, வேடன் வந்து விடுவான் என்ற அச்சத்தில் சீக்கிரம் சீக்கிரம் என்று கூறிக் கொண்டே இருந்தது .
எலி, அவசரம் காட்டவில்லை. வேடன் வரும் ஓசை கேட்டதும் கடைசி இழையை அறுத்து விட்டு எலி ஓட்டம் பிடித்து தன்னுடைய பொந்துக்குள் சென்றது.
பூனையும் ஓடி ஒளிந்தது. இப்படியாக, பூனையிடம் சிக்கிக் கொள்ளாமல் அதற்கு உதவி செய்து தன் உயிரை எலி காப்பாற்றிக் கொண்டது.
நீதி – உதவி செய்யும் போது எச்சரிக்கை தேவை.
(நாட்டுப் புறக் கதைகளிலிருந்து)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
