இரு கால்சட்டைகள்!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 11,303
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரு போதகரின் மனைவியர் தையல் வேலை செய்து கொண்டே உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
முதல் அம்மா : நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறோம். உயிருள்ள சபையாகத் தெரியவில்லை. என் கணவர் மணிக்கணக்காக உட்கார்ந்து பிரசங்கங்களை ஆயத்தம் செய்கிறார். மக்கள் ஆராதனைக்கே வருவதில்லை. சபையோ கடனில் மூழ்கிக் கிடக்கிறது. சபை மக்களுக்குள் ஒரே சண்டை சச்சரவு. நாங்கள் சோர்ந்து போகிறோம்.
அடுத்த அம்மா : எங்கள் சபையில் ஆராதனைக்கு ஆண்கள் திரண்டு வருகிறார்கள். பிரார்த்தனைக் கூட்டங் களுக்கும் சபையார் படை திரண்டு வருகிறார்கள். என் கணவர் சபை மக்களை வீடு வீடாகச் சந்தித்துப் பிரச்சனைகளைக் கேட்டு – பரிகாரம் கண்டு பின்பு பிரார்த்தனை செய்து வருகிறார். மேலும் என் கணவர் ஜெபத்திலும்- வேதவாசிப்பிலும் அதிக நேரத்தைச் செலவிடுகிறார். கடவுள் எங்கள் ஊழியத்தை ஆசீர்வதித்து வருகிறார். நாங்கள் இறையருளால் மகிழ்ச்சியோடு இருக்கிறோம்.
இவ்விரு குடும்பங்களுக்கும் உள்ள வேறுபாட்டிற்குக் காரணம் இதுதான்:
முதலில் சொன்ன அம்மாள் கால்சட்டையில் இடுப்புக்குக்கீழ் இரு பக்கங்களிலுமுள்ள கிழிவுகளைத் தைக்கிறார்கள். அடுத்த அம்மாள் இரு முழங்கால்களிலு மிருக்கிற கிழிசல்களைத் தைக்கிறார்கள்.
”தானியேல் . – தமது வழக்கப்படியே மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு, நன்றி செலுத்தினார்”. [தானியேல் 6:11]
“உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவேண்டும்; ஆகையால் கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்”. [யோவான் 16:24]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
