இகழ்ச்சியாகக் கொண்டதனைப் புகழ்ச்சியாகக் காட்டியது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 74
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் இராயர் அரசசபையிலே ஆடல் பாடல்களிலே வல்லவர்களாகிய மூன்று பேர் தாசிகள் தெற்கேயிருந்து வந்து தங்கள் வித்தையினுடைய அருமை பெருமைகளை காண்பித்தார்கள்.
இராயர் அவர்களைப் பார்த்து மெச்சி வெகுமதிகள் செய்தார். அந்த மூன்று பேரில் ஒருத்தி இந்த மகாராசாவின் குணம் வேரும் விறகும்படி என்றாள்.
மற்றொருத்தி முள்ளும் முரடும்படி என்றாள்.
வேறொருத்தி கல்லும் கரடும்படி என்றாள்.
இராயர்தன் பெண்சாதி சிபாரிசு செய்த மனுசனை அழைத்து, “இவர்கள் சொன்னதற்கு நாம் செய்யவேண்டிய தென்ன?” என்று கேட்டார்.
“இராசாதிராசராகிய தங்களை இப்படித் தூஷணமாகச் சொன்னபடியால் இம்முன்று பேரையும் மொட்டையடித்துத் துரத்திவிடவேண்டும்” என்றான்.
அப்பாச்சியை அழைத்துக் கேட்டதற்கு, “சாமி அவர்கள் சொன்ன வாக்கியங்கள் தூஷணமல்லவென்றும், விறகு மென்றது விறகைப் போலவும் வேருள்ளதாயுமிருக்கிற அடிக்கரும்பைப் போல மதுரமுள்ள குணமென்றதாம். முள்ளு முரடுமென்றது முள்ளையும் முரட்டு ரூபத்தையுமுடைய பலாப்பழத்தைப் போல ருசியுள்ள குணமென்றதாம், கல்லுங் கரடுமென்றது கல்லு ரூபமாகவும் கரடாயுமிருக்கிற கற்கண்டைப் போலச் சுவையுள்ள குணமென்றதாம். ஆகையால் உங்களுடைய நிசமான சுகுணத்தைப் புகழ்ந்ததற்காக அதிக வெகுமதி செய்ய வேண்டும்” என்றான்.
இராயர் சந்தோஷித்து அவ்விருவர் சொன்னதையும் பெண்சாதிக்கறிவித்தார்.
அவள், இன்னும் ஒரே ஒரு பரீக்ஷை செய்தாலொழிய எனக்குச் சந்தேகந் தீராது என்றாள்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
