ஆள்களையே மாற்றுகிறார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 3,208 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமெரிக்காவைச் சேர்ந்த கேர் அம்மாள் முதன் முறையாக வட இந்தியாவுக்கு மிஷனரியாக வருகிறார்கள். அவர்களை அனுப்பி வைக்கும் சங்கத்தலைவர் கப்பலுக்கு வழி அனுப்ப வந்து முத்திரையிட்ட ஓர் உறை ஒன்றைக் கொடுத்து இவ்வாறு சொன்னார்கள்:

“இப்போது நீ இதனைத் திறக்கக்கூடாது, இரண்டாயிரம் மைல் சென்ற பின்புதான் திறக்கவேண்டும்”.

கப்பல் புறப்பட்டது.

மிஷனரி அம்மாள் அது என்ன கட்டளையாயிருக்குமோ என்று கவலை கொண்டார்கள். மனம் துடிக்கிறது. ஆயினும் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டுமே. குறிப்பிட்ட இடத்துக்கு வரவும் உறையைத் திறந்தார்கள்.

உறைக்குள் இன்னொரு உறை. அதைப் பிரித்தால் அதனுள் பிறிதொன்று. இப்படியாகப் பத்து உறைகள். பதினோராவது சிறு உறைக்குள் இரண்டு அங்குல சதுரமான ஒரு கடிதம் நான்கு மடிப்புகளாய் மடிக்கப்பட்டிருந்தது.

ஆத்திரம் ஆத்திரமாகப் பிரித்தாள். நான்கே வார்த்தைகளடங்கிய ஒரு வாக்கியம்:

‘ஜெபம் காரியங்களை மாற்றி விடுகிறது’

ஜெபம் காரியங்களை மட்டுமல்ல, ஆள்களையே மாற்றி விடுகிறது.

“ஆண்டவர் என் ஜெபத்தைக் கேட்டருளினார்; ஆண்டவர் என் மன்றாட்டை ஏற்றுக்கொண்டார்” கத்- [சங்கீதம் 6:9]

“சவுல் இப்போது ஜெபம் செய்து கொண்டிருக்கிறான்” [திருத்தூதுவர் 9:11]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *