அலைவு
கதையாசிரியர்: காசி ஆனந்தன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 373
(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆறு, கடலில் ஓடிக் கலப்பதையும் அலை கரையைத் தேடித் தழுவுவதையும் அன்றாடம் பார்த்து வந்த வானம் பாடி சிந்தனையில் ஆழ்ந்தது.
‘உலகம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதான்..’ என்றது வானம்பாடி.
பிறகு அது பாடியது :-
‘மண்ணில் இருக்கிற ஆற்றுக்கு
மண்ணில் வெறுப்பு; கடலில் ஆசை
கடலில் இருக்கிற அலைக்கு
கடலில் வெறுப்பு; மண்ணில் ஆசை’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.