கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 172 

(1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிலர் மக்காவுக்குப் போய் வந்தால் தீடீர்ப் பணக்காரராகி விடுகிறார்கள். சிலர் சமுதாயத்திலே செல்வாக்குப் பெற ஹாஜி யார்ப் பட்டம் சிறந்த வரப்பிரசாதம் என்றெண்ணி ஹஜ் யாத் திரை புரிகிறார்கள். வட்டிக்குக் கொடுத்ததாலும் பிறரை வஞ்சித் துச் சுரண்டியதாலும் திரண்ட அழுக்கைக் கழுவும் பொருட்டு வினைஞ் மக்கா யாத்திரை மேற்கொள்பவர் சிலர். அரபுநாட்டு வினை களின் கலைத்திறனைப் பிரலாபிக்கும் தொப்பி தொப்பியைச் சுற்றும் கட்டைத் துணி, முக்கோணமாய் மடித்துப் புயங்களைப் போர்த்தும் கைலி. இவை போன்ற பிறவும் தரித்தால்த்தான் ஹாஜிமாருக்கு மதிப்பு என்ற பிரத்தியட்ச மனோபாவம் பலரிடத்தில்.

அகமது லெப்பை ஹாஜியார் இந்தக் கோஷ்டிகளெதையுஞ் விட சேராதவர். புற அலங்காரத்தை அக அழகை விரும்புஞ் சுபாவம் அவருக்கு. எத்தனையோ ஹாஜிமார், போடிமார், தண்ட யல்மார், பதவிக்காய் ஆலாய்ப் பறக்கும் பிரபலஸ்தர்கள் எல் பள்ளிவாசல் சீப் மரைக்கார் பதவி லாரும் இருந்துங் கூட, ஹாஜியாரின் நிரந்தரச் சொத்து. குறுக நறுக்கிய சோளக்கதிர்த் தும்பு போன்ற தாடியை கையால் பொத்தி உருவி விட்டு, விர லிடுக்கிலே தொங்கும் ‘தஸ்பை’ மணிக்கோவையை ஒரு தரம் சுழற்றிய பின் பிறக்கும் அந்தக் கட்டளைக்கு ஊரே அசைந்து விடும். இத்தனைக்கும், கிராமத்தின் சாதாரண கதியிலுள்ளது தான் அவரின் பொருளாதாரம். வரம்பு மீறி எதுவும் கிடையாது. சீலத்தின் சுவடு பிறழாத தனது மேலான நடத்தையால் தேடிக்கொண்ட செல்வாக்குத்தான் அவரின் செல்வம் ஹாஜியாரின் செல்வாக்கிலே பொறாமை கொண்டவர்கள் இல்லாமல் இல்லை. எதிர் நீச்சலடிக்கும் துணிச்சல் ஆருக்கும் கிடையாது.

அக்கினிக் கோளம் உலகை ராட்சசத்தனமாகத் தகிப்பதாக ஒரு பிரமை முஸ்லிம்களுக்கு. சமயங்களில் ஆழவேரோடியிருக்கும் மூலாம் சத்தைப் பிரலாபிப்பது போன்று உஷ்ணப்பரி மாணத்தினிடையே மருதமுனை ‘ஜும்ஆப் பள்ளி வாயிலி னுள்ளே நிறைந்து வழியும் குளிர்ச்சியின் ‘ஜிலுஜிலு’.

பதினைந்து நாட்கள் விரதமிருந்து இளைத்துப்போன ஆகிரு தி யுடன், பள்ளிவாசல் இடப்பக்கத்து விறாந்தையில், சுருட்டி நான் காக மடித்த பழம்பாயைத் தலையணையாக ஏற்றி, ஆழ அரிந்த வேளாண்மைத் தாள்களாகக் குத்திட்டு நிற்கும் நரைமயிர்த் தலையை அதிற்கிடத்தி, சீமேந்துத் தரையின் சீதள சுகானந்தத் தைப் பருகிய வண்ணம் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பவர்தான் அகமது லெப்பை ஹாஜியார். வலக்கரத்தில் தஸ்பை மணிக் கோவை. விரல்கள் மணியை உருட்ட, வாய் பக்தி உச்சாடனங் களை மெல்லுகிறது.

‘ஹாஜியார் இண்டக்கிக் காழிக்கோடு நம்மட ஊரில், வாறயள போவம்.’

‘நீங்க காழிக் கோட்டுச் சாயிது, போகத்தான் வேணும்; எனக்கி அங்கென்ன வேல?’

‘இண்டக்கி மொதல் ‘தலாக்’கு ஒண்டிரிக்கி, நான் வாறன்.’

காதிக் கோட்டு ‘ஜூரி’யான அப்துல் றகுமான் ஆலிம்ஸாவின் தேய்ந்த மிரிதடியின் கடபுட-டக்-டக்-

‘தலாக்’ எனும் வார்த்தை ஹாஜியாரின் இதயக் குழியிற் சுழித்துச் சுழல, நினைவலைகள் கு திர்கின்றன. ஹறாமிச்சாதா, நோம்பு காலத்தில கடலய சப்புக்காய்?” என்ற ‘முஅத்தினா’ரின் அதட்டலையுங்கூடப் பொருட்படுத்தாமல் பள்ளிவாயிலின் வெளியே நின்று கொண்டு கடலை கொறிக்கிறான் பையனொருவன். ஹாஜியாரின் சிந்தனை ‘தலாக்’ என்னும் பதத்தை அசை போடுகிறதா?


ஹாஜியார் தன் இல்லறப் பூங்காவை உழுது பண்படுத் திப் பாத்தி கோரிப் பசளை இட்டு, விதை நட்டு அல்லும்பகலும் நீர் வார்த்துப் பாதுகாத்ததன் பயனாய் ஐந்து பெண்கொடிகள் பூர்பூரென வளர்ந்தன. பூத்துக் குலுங்கும் பெருவாழ்வுடன் நான் கு கொடிகள். ஒவ்வொரு கொடிக்கும், பருவ பக்குவங்களை அனுசரித்து உரியகார் காலங்களில், சோடை போகாத வகை யில், பற்றுக்கோடுகளைப் பொறுக்கிக் கொடுத்து விட்டார். ஐந்தாவது கொடிக்கும் படர் கொம்பு தேவையான பருவம்வந் ததும், முட்டுக் கொடுப்பதற்குக் கொழு கொம்புகளிடையே ‘நான் முந்தி, நீ முந்தி’ என்ற வகையில் போட்டி.

ஈற்றில், ஒருவன் நிச்சயிக்கப்பட்டான். பெயர் அப்துல் காதர். அப்துல் காதர் பசையுள்ளவன். அவன் குடும்பமே அப்படி. தன் பெண்களுக்கு வாக்கு வடிவான மாப்பிள்ளைகளைத் தெறித்துப் பார்த்தெடுப்பதில் ஹாஜிய ர் ய அனுபவஸ்தர். மாப்பிள்ளை, ஊரிலே ஆணழகன் தெரிவு நடந்தால் போட்டியே இருக்காது என்று துணிந்து கூறக் கூடிய கட்டழகன். புதுக் கிணற்றடியிலே செழித்து நிற்கும் செங்கதலி வாழை மாதிரி உயர்ந்து, சிவந்து, கொழு கொழென்று கொழுத்த மேனி.

காவின் புத்தகத்தில், ‘வொலி’காரனின் கட்டத்தில் ‘ஹாஜி அகமது லெப்பை. என்று ம் கையெழுத்திடும்போது, மலை போன்று இன்னல் குறுக்கிட்டாலுஞ் சரி, கடல்போல மகிழ்ச்சி பெருக்கெடுத்தாலுஞ் சரி, சாந்தம் ஒன்றைத் தவிர வேறு எந்த வி தமான உணர்ச்சியையும் பிரதிபலிக்காத ஹாஜியாரின் வசனத் தில் குதூகலக் குறியின் சுடர்க்கோடு படர்ந்து, பளிச்சிட்டு மறைந்தது.

“அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கு. களிப்பில் இதழ்ப் படலைகளைத் திறக்காமலே இறைவனுக்குச் சமர்ப்பித்த புகழ்மாலை!

விவாக அமர்க்களத்தில் ஹாஜியாரின் கஸ்பை மணிக் கோவை எங்கோ எங்கோ காணாமற் போய்விட்டது. துருவித் தேடியும் பலன் பூஜ்யம். இழக்கக்கூடாத ஒன்றை இழந்ததான தவிப்புணர் வைத் தன் மனத்திரையினின்று நீக்க அவர் எடுத்த பிரயத்தன மெல்லாம் வியத்தமாய் ஆனது ஏன்? வாப்பாவின் வாப்பாவெல் லாம் உபயோகித்தது அல்லவா அது?

கல்யாணத்தை அடுத்துக் கிராமச் சங்கத் தேர்தலும் வந்தது. செல்வாக்கான முகாமைச் சேர்ந்துவிட்டோம் என்ற எண்ணத்தின் பிடர்பிடிப்பு புது மாப்பிள்ளைக்கு. திரவியங்களை வாரி தரகர்களின் கைகளாகிய பள்ளங்களை நிரப்பும் தேர்தல் வெள்ளத்திலே குதித்துவிட்டார். தன் பணம், மாமனாரின் செல்வாக்கு ஆகிய துவித ஆற்றல்களின் சங்கமந் தந்த சக்தியின் முடுக்குக்கு முன்னால் இந்தத் தேர்தல் வெள்ளம் எம்மாத்திரம்?

‘அப்துல் காதருக்கு ஜே…!’

அடுத்து நடந்த தலைவர் தெரிவிலும் ஹாஜியாரின் சின்ன மரு மகனுக்கு அக்கிராசனர் பீடம். எவ்வளவு பெருவாழ்வு! இந்தப் பெருவாழ்வு ஒன்றுக்காகத்தானே ஆமினாவை மனைவியாக வரிக்க நேர்ந்தது. மரைக்கார் ஹாஜியாரின் வளவிலே உள்ள ஒட்டு மாமரம் ஊரெங்கும் பிரசித்தமானது கொத்துக் கொத்தாகக் குலுங்கும் செக்கர்நிறத் தோல் போர்த்த ‘வெலாட்’ மாங்கனிகள். ஆசையைப்பாரு கி வனுக்கு! ஒரு கனியைத் தனது பொக்கைவாயால் கடித்துச்சுவைத் துச் சூப்பி எறிய வேண்டுமாம்! ஊரார் வளவு மாமரங்களு க் கெல்லாம் குறிதவறாமற் கல்லெறிந்த பால்யப் பருவத்து அனுப வத்தை இந்த வயதிலுமா மீட்கவேண்டும்? அவ்வளவு அழகான மாங்கனிகளுக்குள் என் று மில்லாதவாறு புழு நுழைந்ததேன்? ஹாஜியார் எறிந்த மாங்கனியை துள்ளிக் குதித்து வந்த அணி லொன் று  ே காதியது. ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. மாங்கனி கிடந்த இடத்தில் மாங்கொட்டை,

நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரன். கறுப்பு றோட்டிலே பல மெத்தைக் கடைகள். கடற்கரையிலே தோணிவலை. கிராமச் சங்க அக்கிராசனர். ‘ஜே. பி.’ இரண்டாந் தாரமாகப் பெண் கொண்டால் என்ன வந்துவிடும்? தலையாலே வரும் சீதேவியைக் காலாலே தட்டிவிட சேர்மன்’ ஒன்று பழைய சாதாரண மனிதனல்லன் பெண் தந்து சொத்தோடு சொத்தணைக் கக் குபேர சம்பந்திகள் தவமிருக்கும்போது பாரியான ஆமினா – ஹாஜியாரின் புத்திரி – ஒரு தடையா? ஒரு தடையா? ‘ஷெய்த்தா’ னுக்கு ச் சிரக் கம்பம் செய்ததால்தானே மானுட ஜாதிக்கு இத்தனை த்தனை துயர வாழ்வு. சொர்க்கந் தந்த சொகுசைக் கெடுத்தவனல்லவா ‘இப் லீஸ்’. சேமனி’ன் மாமனார் என்று அதிக நாளைக்குச் சொல்லிக் கொள்ள ஹாஜியார் கொடுத்து வைக்காதது யார் குற்றம்?

“இன்று இரவு ‘தாஜ்மஹால் சினிமா’வில், ‘குரங்கு மரம்’ எனும் தமிழ் பேசும் படம் காண்பிக்கப்படும்.” விளம்பர மோட் டாரில் கட்டியிருந்த ஒலிபெருக்கியின் பூதாகரத் தொனிக்கு ஹாஜி யாரின் சிந்தனைக் குதிரை சரண்புகுந்து விட்டதா? வாரிச் சுருட்டி எழுந்திருந்து விறாந்தைக் கிறாதியினூடாக, ‘புளிச்’ சென்று உமிழ் கிறார். ஒரு சிறங்கை எச்சிலால் மணற்தரையின் வெம்மையைத் தணிக்க முடியாவிட்டாலும், ஹாஜியாரின் மனக் கொதிப்பின் பாதியை வெளியேற்ற முடிந்தது. மதியத் தொழுகைக்கான முஅத்தினா’ரின் அன்பழைப்பு. தொழுகையை முடித்துவிட்டு விறாந்தையின் அதே இடத்தில் அமளிகொள்கிறார்.

‘ஹாஜியார் அசனார்ர மகன் மீராமையதீன் அந்தப் பொடிச் சியத் திலாக்குச் செல்லிப் போட்டான்.’

‘எல்லானுந்தான் சொல்லித் தொலையட்டும்; ஏந்தான் கலியாணத்தையும், திலாக்கையும் ஏற்படுத்தினாங்களோ?’

ஆதங்கண்டு மரைக்கார் அவர் பாட்டுக்கு நடையைக் கட்டு கிறார். ஹாஜியாரின் பெருமூச்சு அவரைத்தொடவில்லை. பள்ளி வாசல் வளவில், நிழல் படாத இடத்தில், தோட்டுப் பாயிலே நெல் துழாவிக் காய வைக்கும் மனுஷியை மரைக்கார் தாண்டி விட்டார். விறாந்தைக் கட்டிலே சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய் கீழே விழுந்து சுருள் குலைந்து விரிகிறது பாய்ச் சுருளுக்குள் குடி கொண்டிருந்த கரப்பத்தான் பூச்சி ஊர்ந்து செல்கிறது. ஹாஜி யாரின் மனத்திலே மறைந்திருந்த கடந்த கால அனுபவ விம் பங்களும் நகர்கின்றன.


ஊமை ஒளி சிந்துகின்ற, வெட்டி எறிந்த கட்டை விரல் நகம் போன்ற ஷஃபான் மாதத்து ஐந்தாம் பிறை. கன்னியரின் கன்னமாய்ச்சிவந்து, கனிந்த பழப்பாக்கை பாக்கு வெட்டி கெவ ரில் வைத்து ‘நறுக்’கென்று வெட்டினாள் ஹாஜியாரின் மனைவி அலிமா நாச்சி. நாச்சி. தோற்குழியை விட்டுப் பிதுக்கி எடுத்த பாதிப் பழப்பாக்கு, காம்புகிள்ளி புறப்பக்கம் சுண்ணாம்பு தடவிய நீர் வெற்றிலைகள், யாழ்ப்பாணத்துப் புகையிலைக்கிள்ளுத் துண்டு, சைப்புச் சிதர்கள், நாறப்பாக்குப் புளகுகள் வரிசைக் கிரமமாகத் திணிக்கப்பட்ட துவயல் உரலின் “டொக் டொக்’ துவயல் உரலைப் ‘பக்’கென்று உள்ளங் கையிற் கொட்டி எடுத்த வெற்றி லைத் துரு அரைவாசியை, தன் ந்து விரல்களாலும் இடுக்கி எடுத்து ஹா ஹாஜியாரின் வாய்க்குள் ‘தீற்றி’ விட்டுத் தன் பங்கையும் நிறைவேற்றினாள் அலிமா நாச்சி.

‘ஹாஜியார் ரிக்கயள? அஸ்ஸலாமு அலைக்கும் ‘

‘வஅலைக்குமுஸ்ஸலாம், மரக்கார? வாங்க’

மஃமூது லெப்பை மரைக்காரைத் தொடர்ந்து இரண்டொரு பெண்கள். நின்ற நிலையிலே அரிக்கன் லாம்பை அணைத்து விட்டு, தனக்காகப் போடப்பட்ட மடிப்புக் குலையாத கற்பன் பாயின் இரண்டொரு மடிப்புகளை விரித்துக்கொண்டு மரைக்கார் அமர்ந்தார் பெண்கள் ஆல வீட்டுத்திண்ணைப் பக்கமாக நகர்ந் தார்கள். வட்டா உள்ளே சென்று நிறைவோடு திரும்பியது. பளபளக்கும் வெண்கலப் படிக்கம் பக்கத்தில் வைக்கப்பட்டது. முலாம் பூச்சுக் கோப்பையில் வாய்கழுவத் தண்ணீர். சீனட்டி நெற்குற்றிப் பட்டுப்போல் இடித்தெடுத்த பச்சரிசி மாவோடு, கற்கண்டுப் பாகெடுத்துக் கலந்து சுட்ட எண்ணெய்ப் பலகாரங் கள், பீங்கான்களிலே பொலிந்தன. வந்திருந்த பெண்களில் ஒருத்தி ஏந்தி வந்த, வெள்ளைத்துணி ணி சுற்றிய பனையோலைப் பெட்டிக்குள் இருந்தவை தான் பலகாரம். பலகாரத்தை அடுத் துத் தேனீர் பரிமாறப்பட்டது.

மரைக்கார் தன் பழைய சம்பந்திகள் ஒரு சாரார் சகிதம் வந்ததானது ஹாஜியாரின் மனதிலே கேள்விக்கணைகளை கார்த் திகை மாதத்துப் புற்றீசல்கள் போலக் கிளப்பியது.

‘ஹாஜியார், ஒங்கட எளய புள்ளக்கிக் கலியாணங் கார வட்டியைப் பத்தி யோசிக்கல்லய.’

மஃமூது லெப்பை மரைக்கார் இப்படிக் கலியாணத் தரகராக வந்திருப்பார் என்பது ஹாஜியார் எதிர்பார்க்காத செய்தி யாகையால், வியப்பும், வெறுப்பும் அவரை ஆட் கொண்டன.

‘பொண்ணப் படச்சவன் அதுக்கொரு சோடியையும் படச் சித்தான இருப்பான். தூரத்து ஒறவு எண்டாலும் அந்த மர் சூக்குப் பொடியன் மருமகன் மொற தான். முடிக்கிறேன் என் கான், கையில் கையில மடி யில் ல்லாதவணெண்டாலும், என்னோட நெருங்கிப்பழகி என்ர நலவு ஏறடுகளிலே பங்கு கொள்ளுகவன்.’

வெள்ளிக்கிழமை இரவான படியால் வீடெல்லாம் சாம் பிராணிப் புகை பிடித்துவிட்டுத் தீச்சட்டியை ஹாஜியாருக்குப் பக்கத்திலே வைத்து விட்டு, பெண்கள் பக்கமாய் காலை நீட்டிப் போட்டு அமர்ந்துகொண்டு சம்பாஷணையில் புலனைத் திருப்பி விட்டாள் அலிமாநாச்சி.

‘என்ன இருந்தாலும் நம்மட நெலவரத்துக்கு ஏத்தவனாக இருந்தாத்தானே நமக்கு அழகு. கையில இல்லாதவனைக் கட்டி வெச்சா கொமர் கண்ணீர் வடிக்குமே.’

‘திலாக்குச் சொல்லிப் போட்டு ஓடுக பணக்காரன உட, எது வந்தாலும் தாக்குப் புடிச்சி நிக்கக் கூடிய ஏழ நல்லம்.’

ஹாஜியார் இஸ்டப்பட்டா நல்ல ஒரு மாப்புள்ள இரிக்கான், கலந்தர் போடியார்ர மகன் அவுத்துக்கரீன் ஒ ங்கட புள்ளய முடிக்கப் போறானாம். சம்மதங் கேட்டுவரச் சொல்லித்தான் எங்கள் அனுப்பினான்.’

நீரில் கல் விழுந்த சுவடுவிரிவது போல ஹாஜியாரின் சொக் குச் சுருக்கங்கள் விரிய அதிலிருந்து, ஒரு மெல்லிய புன்னகை நிழலாடி மறைந்தது. அந்தமுறுவலுக்குத் தான் எவ்வளவு பொருள்.

“முந்தி வந்தது மொழங்கால் மட்டு, பிந்தி வாறது பெருந் தொடைமட்டு. பெரிய உம்மாட மகன் கழிச்சிற்றுப் போனது சாச்சிரமகனுக்கு என்னத்துக்கு மரக்கார்?”

‘ஆதனம் பிரிச்ச தகராறில் அவிய ரெண்டு தெறத்தாரும் வாளும், மரமும் மாதிரி, காக்கா செஞ்ச தொரோகத்துக்குப் பாடம் படிப்பிக்கத்தான் தம்பி இந்த முடிவுக்கு வந்திருக்கான்’.

‘அந்தக் குடும்பத்துக்க இனியும் மாப்புள்ள னியும் மாப்புள்ள எடுக்க எனக்கு விருப்பமில்ல.’

‘இந்தாங்க மரக்கார் செல்லுகத்த லோசிச்சிப் பாருங்க. நெட்டூரஞ் செஞ்சவன்ர தம்பிய எடுத்தா நமக்குத்தான பொகழ்ச்சி?’

உள்ளே இருந்துமகள்குரக்கன் அரைத்தாள். ஹாஜியாருக்கும் தன்தலை குரக்கன்கல்லாகச் சுழல்வதாகவும், மனைவிபோட்ட சம்மட்டியின் தாக்கத்தால் பலஹீனம் தன்னைச் சூனியப் பிராந்தியத்துக்கு இழுத்துச் செல்வதாகவும் பிரமை தட்டியது.

‘யோசிச்சிப் பார்த்து இன்னொரு நாளக்கி முடிவு செல்லுகன்.’

குடும்பத்தினர் ஒரு பக்கமும், தான் பக்கமும், தான் மறுபக்கமுமாக நின்று புரிந்த சொற்போரில் ஹாஜியார் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றாகியது.

மாப்பிள்ளையின் வீட்டிலிருந்து சலவாத்து முழக்கத்துடன் ஆரம்பித்த கல்யாண ஊர்வலத்தில், படலைகளிலே படலைகளிலே மொய்த்து நின்று, முக்காட்டுத் திரை நீக்கி, முகமதியை வெளிக்காட்டி, செங் காந்தட் கைகுவித்து, செங்கமல இதழ்திறந்து, கோகிலக் குர லெடுத்துக் குரவை இட்டனர் மங்கையர்கள், நபி பெருமான் புகழ் கூறும் அரபிக் கீதங்களை லயம் திரியாது பாடினர் ஆண்கள். ஊர்வலம் பூராவும், தேர்ந்த ஜோடிகளின் சிலம்ப வீச்சுத் தொ வரிசை டர்ந்தது. சீனடிக்காரர்கள் சந்திகள் தோறும் தங்கள் யைக் காட்டினர். கிராமத்துப் புலவர்களும், அண்ணாவிமாரும், முக்கிய திருப்பங்களிலெல்லாம் வாழ்த்துப் பதம்பாடிக் கட்டியங் உயர்ந்து கூறத் தவறவில்லை. வகைவகையான வாணங்கள். மெலிந்த மர்சூக் பிடித்த கார்நிறக் குடைநிழலில், அப்துல் கரீம் பவனி சென்ற அழகே அழகு. தமயனை உரித்துவைத்தது போன்ற ஆகிருதி. பட்டாசு கொளுத்தியவர்களுக்கு வேறு இடங் கிடைக் காமலா ஹாஜியாரின் சாரத்திலே எறியவேண்டும்? நல்ல வேளை யாகச் சாரன் உள்ளங்கையளவு கரியானதைத் தவிர ஆபத் தொன்றுமில்லை.

மணக்கோலம் மாறிய கையோடு கிராமச் சங்கத் தேர்தலும் ம் வந்ததுதான் வந்தது. புது மாப்பிள்ளையும் தேர்தற் களத்திலே குதித்துவிட்டார். இப்பொழுது தனக்கு வைரியாக மாறிவிட்ட தமையன் அப்துல் காதரை – சேர்மனை, வீழ்த்தி தான் அக்கிரா னர் ஆகிவிட வேண்டுமென்பதுதான் புதுமாப்பிள்ளையின் லட்சியம். தேர்தலில் ஈடுபடும் அபிப்பிராயத்தை மாமனார் பலமாக எதிர்த்தால், மருமகனால் அவரை வழிக்குக் கொண்டுவர முடி யாதா? புகுந்த வழி உறவினர்களையும் சேர்த்துக் கொண்டால் காரியம் லேசாகி விடுகிறது. முதல் பரீட்சையில் அப்துல் காதர் பிறந்த வட்டாரத்தைத் தஞ்சம் புகுந்ததே அப்துல் கரீமின் வெற் றிக்குக் கோடி காட்டிவிட்டதே! அக்கிராசனர் தெரிவில் ஹாஜி யாரின் முன்னாள் மருமகருக்கும், இன்னாள் மாப்பிள்ளைக்கும் போட் டாப் போட்டி. அண்ணனுக்கும் தம்பிக்கும் மோதல். இடையி லுள்ள அங்கத்தவர்களுக்குக் குபேர மழை! காக்காவின் தோல்வி யும் தம்பியின் வெற்றியும் காலத்தின் படிப்பினையா?

பள்ளிவாசல் சீமேந்துத் தரையை நனைப்பது ஹாஜியாரின் கண்களிலிருந்து அருவி எடுக்கும் கண்ணீர் தான்.

புதிய ‘சேமனி’ன் பிரியமான காலை உணவு குழல்பிட்டு குழ லிலே புடங்கொண்டு அவிந்த பிட்டு சில சமயங்களில் சிதைந்து போவதுமுண்டு. பிட்டு, தான் சிதைந்து சிதறியதோடு நின்று கொண்டால் என்ன? ன்னைச் சரியாகப் பாகம்படுத்தாத குற் றத்திற்காகக் குழலையுமா சேதப்படுத்தவேண்டும்? முந்தின வாழ்க் கையில் ஆமினாவுக்குச் சூல்தரிக்கவில்லை. இரண்டாம் வாழ்க்கை யில் கருத்தரித்தும், உதரக் குகையில் பத்து மாதம் தரித்திருக்க முடியாத அவசரப் பிண்டமாகவா அமையவேண்டும்? கருச்சிதைவு காரணமாய் ஆமினா பாயும படுக்கையுமாகப் படுத்துவிட்டாளே!

தன்மகள் இரண்டாந் தடவையும் தாலி அவிழ்த்துக்கொண்டு ந்தத் தள்ளாத வயதில் தனக்குப் பாரச்சுமையாக இருக்கிறாள் என்பதைவிட, காக்கா நடந்த அடிச்சுவட்டில் தம்பியும் நடை பயின்ற செயல்தான் செயல்தான் ஹாஜியாரின் ஹாஜியாரின் இதயத்தைச் சாம்பச் செய்தது.

‘ராத்திரி முறுகம் வலப்பக்கத்து அதரால வந்து கால் மாட்டு வரவய அழிச்சிப் போட்டுது’ என்ற முல்லைக்காரனின் முறையீடு ஹாஜியாரைச் சுயநிலைக்குக் கொண்டுவந்தது. சுதாரித்து எழுந்து கன்னத்து ஈரத்தைச் சால்வையால் துடைத்துக் கொண்டார். பூரண தண்ணீர்க் கர்ப்பத்துடன் அலையெற்றிக் கிடக்கும் ‘ஹவ் லை’த் தழுவிய தென்றலின் ஸ்பரிசம் இதத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ‘ஹவ்லை’த் தாண்டிப் படிகளில் இறங்குகிறார்.

– ரசிகர் குழு போட்டிக் கதைகள், பதிப்பாசியர்: எம்.ஏ.ரஹ்மான், முதற் பதிப்பு: மே 1966, அரசு வெளியீடு, கொழும்பு.

சமர்ப்பணம் அரிவரி வகுப்பில் ஏடு தொடக்கி வைத்து, சி. பா. த. பரீட்சையில் தேறியபின்னர் தன் கைப்பட விடு கைப் பத்திரமும் எழுதித்தந்த ஷரிபுத்தீன் வாத்தியார் (புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள்) முதலாக எனக்குக் கல்வி புகட்டிய, என் ஆற்றல்களை இனங்கண்டு ஊக்கு வித்த ஆசிரியப் பெருமக்களுக்கு இந் நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன். - மருதூர்க்கொத்தன். அவனது கதை வங்காப் ஊரில் அவனும் அவனது கூட்டாளிப் பையன்களும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *