அணுகுண்டு ஆனந்த்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 5,252 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? எங்க அப்பாவும், எங்க அம்மாவும் எங்க தங்கச்சியும் தீடிரென மருந்து கடித்துத் தற்கொலை பண்ணிக்கொண்டார்கள். நான் மட்டும் தனியாக இருக்கிறேன். பயமாக இருக்கிறது. எங்கள் வீடு அண்ணா நகரில் ஆறாவது தெருவில் உள்ள ஆனந்த் மேன்ஷன்” என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதுகொண்டே பேசினான் 19வயது ஆனந்த்.

மறுநொடியில் மப்டியில் வந்து இறங்கிய போலீசார் ஆனந்தைப் பார்த்து பரிதாபப்பட்டனர். வாசல் கதவைத் திறந்து பார்த்தனர். தகப்பன் தன் காலிலுள்ள ஷவோடும், தாய் தன் கையில் கரண்டியோடும், தங்கை தன் கையில் மீன் துண்டோடும் சாப்பாட்டு அறையில் செத்துக் கிடந்தார்கள். சாப்பாட்டு மேஜையிலிருந்த மீன் குழம்பு இன்னும் சூடு ஆறாம லிருந்தது. தோட்டத்தில் வீட்டுப் பூனையும் செத்துக்கிடந்தது.

போலீஸ் நாய் அங்குமிங்கும் ஓடி, வீட்டு வாசற்படி தாண்டி காரின் அடியில் போய்ப் படுத்துக்கொண்டது.

அதற்குள் போஸ்ட்மார்ட்டம் ரிசல்ட் வரவே, மீன் குழம்பில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கிடைத்த ஏழு தடயங்களை வைத்து இது தற்கொலையல்ல என்று தீர்மானித்த போலீஸ் அதை இரகசியமாய் வைத்துக்கொண்டு, நியூஸ் நிருபர்களுக்கு சிறுகதைகள் மாற்று செய்தி கொடுக்கவே, மறுநாள் காலையில் செய்தித்தாளிலும், இன்டர்நெட்டிலும், பிரபலத் தொழிலாளர் தனராஜ் குடும்பம் தற்கொலை என்ற செய்தி, படங்களுடன் வெளியானது.

போலீசார் ஆனந்த் குடும்பத்தைப்பற்றி விசாரிக்கவும், ஆனந்த் சொன்னான்; எங்கப்பாவுக்கு குவைத்தில் வேலை. மாதாமாதம் வந்து விடுவார்கள். எங்கப்பாதான் ஆனந்த் ஸ்பின்னிங் மில் முதலாளி. எங்கம்மா ஆனந்தி சோப் கம்பெனி முதலாளி. நானும் என் தங்கையும் இரட்டைப் பிள்ளைகள். நான் இஞ்சினியரிங் கல்லூரி மாணவன்.

என் தங்கை ஆனந்தி மெடிக்கல் கல்லூரி மாணவி.

“உங்க அப்பாவுக்கு தொழில் ரீதியாக எதிரி யாரும் உண்டா ?” என்று போலீஸ் கேட்கவும், உடனே ஆனந்த், ஆமாம் எங்க சோப் கம்பெனிக்குப் பக்கத்து சோப்புக் கம்பெனி முதலாளி செல்வசீலனுக்கும் எங்கப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று சொன்னதும், செல்வ சீலனைக் கைது செய்து அடித்து உதைத்தும் துப்பு துலங்கவில்லை.

ஆனந்த் இன்னும் அநேகர் மீது சந்தேகப்படவே, சமையல் காரி, வேலைக்காரன், டிரைவர், பால்காரன், பேப்பர்காரன், கேபுள்காரன் மற்றும் ஆட்டோமேன் அனைவரையும் போலீஸ் அடித்து உதைத்தும் துப்பு கிடைக்கவில்லை.

முக்கொலை நடந்து முப்பது நாளாகியும் துப்பு துலங்காத தால், மூன்று சப் இன்ஸ்பெக்டர்கள் அணுகுண்டு ஆனந்த் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அந்த மூன்று பேரில், சபாபதி என்பவர் ஆனந்த் அப்பாவைப் பெற்ற பாட்டிக்கு பாத்து சொந்தம். அந்த பாட்டி சபாபதியைக் கூப்பிட்டு, எனக்கு என்னமோ என் பேரன் ஆனந்த் மீதும் கொஞ்சம் சந்தேகம் வருகிறது என்று சொல்லவும், போலீசார் மாறுவேடத்தில் ஆனந்த் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.

ஒருநாள் ஒருநைட்கிளப்பில், ஆனந்த் உல்லாசமாக ஒரு கவலையுமில்லாமல் தண்ணீர் அடித்துக்கொண்டு, சிகரெட் புகைத்துக் கொண்டு, இரண்டு கல்லூரிப் பெண்களுடன் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அதில் ஒன்று இரகசியப் பெண் போலீஸ் என்பது ஆனந்துக்கு தெரியாது.

திடீரென போலீஸ் உள்ளே நுழைந்து, டார்ச்லைட் வெளிச்சத்தில் ஆனந்தைக் கண்டு பிடித்து கைது செய்து விசாரித்தனர். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று சொல்லும் அளவுக்கு ஆனந்த் அழுது கொண்டே, “தான் ஒரு நிரபராதி” என்று நிரூபித்துக்கொண்டிருந்தான்.

போலீசார் ஆனந்தை தனி அறைக்கு அழைத்துச் சென்று சட்டை பேண்டைக் கழற்றி ஆறு போலீசார் அடி பின்னவும், அடிக்காதீங்க, அடிக்காதீங்க வலி எலும்பு வரைக்கும் போகுதே, உண்மையை சொல்லி விடுகிறேன் என்று நடந்ததை நடித்துக் காட்டினான் ஆனந்த.

எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு. ஒன்று வக்கீல் மகன். மற்றொன்று போலீஸ் மகன். பொன்பிரியா கரு காதலியும் உண்டு. எனக்கு துன்மார்க்க டானிக் பாட்டலாகிய, மது, சிகரெட் மற்றும் கஞ்சா வாங்கிக் கொடுத்தது என் நண்பர்கள்தான். ஒருநாள் என் காதலியும், நண்பர்களும் என்னைப் பார்த்து, “உங்கப்பா ஒரு கோடீஸ்வரர். உங்கப்பாவுக்குத் தெரியாமல் உங்கம்மா தினமும் பணம் தருகிறார்கள். ப அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டால், அப்புறம் நீதான் கோடீஸ்வரன்”, . என்று ஆலோசனை சொல்லி, விஷமும் வாங்கித் தந்தது என் நண்பர்கள்தான்.

தினமும் நண்பர்களோடு அரட்டை அடித்துவிட்டு, வெளியில் சாப்பிட்டுவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வரும்போது, என் இஷ்டப்படி விடாமல், என்னை என் நண்பர்கள் முன்னிலையில் திட்டியதால் அவர்களைக் கொன்றேன், என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

தீர்ப்பு நாள் வந்தது. தன் உடன் பிறந்த இரட்டைச் சகோதரி என்று கூடப் பார்க்காமல் ஈவு இரக்கமில்லாமல் கொன்றதால், ஆனந்துக்கு மரணத்தண்டனையும், அவனது பெற்றோர் சொத்து, பணம் அத்தனையும் இன்று முதல் அரசாங்கத்துக்கு சொந்தம் என்றும், அடுத்த மாதம் ஆறாம் தேதி அதிகாலையில் ஆறுமணிக்கு முன்பு ஆனந்தைத் தூக்கிலிடவும்” என்று தீர்ப்பு ஆனது.

தூக்கிலிடுமுன் உன் ஆசை என்ன? என்று அதிகாரிகள் கேட்க, ஆனந்த், என் அப்பாவைப் பெற்றப் பாட்டியைப் பார்க்க ஆசை என்று கூறினான்.

பாட்டி, தலையில் அடித்துக்கொண்டே, “அடப்பாவி, நீ அணுகுண்டாய்மாறி என் குடும்பத்தையே அழித்து விட்டாயேடா. வெளியில் தலை காட்டவே வெட்கமாக இருக்கிறதே” என்று ஒப்பாரிவைத்துக்கொண்டு ஓடி வந்தாள் பாட்டி.

அருகில் நின்ற அதிகாரிகளைப் பார்த்து ஆனந்த் அழுதுகொண்டே சொன்னான்.

“நான் பிறந்த வீட்டில் ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதும் ஓடிவந்து, என்னைக் கையில் ஏந்தி, எவ்வளவு அழகாக இருக்கிறான். என்னா ஆனந்தமாக இருக்கிறது என்று சொல்லி எனக்கு ஆனந்த் என்று பெயர் வைத்தது இந்தப்பாட்டிதான்; இப்போ இன்று எனக்கு அணுகுண்டு என்று பெயர் சூட்டியதும் இந்தப்பாட்டிதான்.

ஆண்பிள்ளை, ஆண்பிள்ளை என்று எனக்கு அளவுக்கு மிஞ்சி செல்லம் கொடுத்து, தப்பு செய்யும் போது என்னைத் தண்டிக்காமல், கண்டிக்காமல், அடிக்காமல் வளர்த்ததும் என்னைக் கண்டித்த என் தாத்தாவை ஏசியதும் இந்தப் பாட்டிதான்.”

“அதிகாலை ஆறுமணிக்குப் பிந்தி எழும்பினாலும் சரி, பல் விளக்காமல் காப்பி சாப்பிட்டாலும் சரி, ஹோம் ஒர்க் பண்ணாவிட்டாலும் சரி, பள்ளிக்குக் கட் அடித்தாலும் சரி, நாள்முழுதும் கார்ட்டூன் பார்த்தாலும் சரி, ஊர்சுற்றிவிட்டு இரவில் பிந்தி வந்தாலும் சரி, எங்கம்மாவைப் பார்த்து, அடிக்காதே, அவன் இஷ்டப்படி விட்டுவிடு. அவன் ஆண்சிங்கம்” என்று சொன்னதும் இந்தப்பாட்டிதான். ஸ்டேட் பாங்க் ATM இரகசிய நம்பர் எனக்குச் சொல்லித் தந்ததும் இந்தப் பாட்டிதான்.

இப்போ மட்டும் வாலிபனான பிறகு என் இஷ்டப்படி விடாமல், அரியர்ஸ் போட்டதற்கு ஏச்சு, இரவில் பிந்தி வந்தால் ஏச்சு. நண்பர்களுடன் சேர்ந்தால் ஏச்சு.

“பிள்ளையின் பெஞ்சில் மதீயீனம் ஒட்டியிருக்கும். அதைத் தண்டனையின் பிரம்பு அகற்றும்” என்று அறிவுரை கூறும் பைபிளை எங்க பாட்டி, எங்க அப்பா, எங்க அம்மா ஒரு நாள் கூட வாசித்தது இல்லை. குடும்ப ஜெபமும் கிடையாது.

“வீட்டில் அம்மா பிரம்பு எடுக்காதபடி பாட்டி அதைத் தீயில் போட்டு எரித்துவிட்டார்கள். பள்ளியில் ஆசிரியர் பிரம்பு எடுக்காதபடி அரசாங்கம் ஆசிரியர் கைகளைக் கட்டிப் போட்டு விட்டது. ஆலயத்தில் பிரம்பின் அவசியம் பற்றிப் போதிக்காமல் போதர்கள் பைபிளின் ஒன்பது வகை பிரம்பையும் எடுத்து ஒளித்து வைத்துவிட்டார்கள். இன்று போலீசாரிடம் ஆயிரம் அடி வாங்கியதற்கு, அன்று எங்க அம்மாவிடம் ஐம்பது அடி வாங்கி யிருந்தால், இன்று நான் அணுகுண்டாக மாறியிருக்க மாட்டேன்” என்று சொல்லவும், கழுத்தில் கயிறு சுருங்கவே “அம்மா” என்று அலறினான் ஆனந்த்.

அருகிலுள்ள ஆலயக் கோபுரக்கடிகாரம் காலை 6 மணி அடித்து ஓர் வசனம்சொல்லிற்று.

“பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும். தன் இஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்.” (நீதி29:15)

உடனே பாட்டி கையிலுள்ள போன் ஒரு பாடல் பாடிற்று.

சிறுவர்கள் என்னிடம் சேரத்
தடை செய்யாதிருங்கள் என்றார் மனதார

(பெயர்கள் யாவும் கற்பனையே)

– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012, சாம் குருபாதம் பதிப்பகம், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *