அடி கிஸ்ஸால….




கமலியும், விவேக்கும் அழகான நல்ல ஜோடி.
மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணமாயிற்று.
ஜாதகம் பார்த்து மிகவும் முறையாக நடத்தி வைக்கப்பட்ட கல்யாணம். இருவரும் முரட்டுப் பணக்காரர்கள். கவலையே இல்லாமல் வளர்ந்தவர்கள்.
கமலியின் அப்பா ஈரோட்டில் மூன்று தொழிற்சாலைகளுக்கு அதிபர்.
விவேக்கின் அப்பா சேலத்தில் நான்கு தியேட்டர்களும், ஒரு ஆயில் மில்லும் வைத்திருப்பவர்.
இருவரும் பி.ஈ கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்துவிட்டதால் பொழுது போவதற்காக தற்போது சென்னையில் வெவ்வேறு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குப் போகிறார்கள். நங்கநல்லூரில் ஒரு புதிய கட்டிடத்தின் மூன்றாவது தளத்தை விலைக்கு வாங்கி அங்கு அவர்களின் தனிக்குடித்தனத்தை நல்ல புரிதலுடன் நடத்துகிறார்கள்.
இருவரும் ரொம்ப ரொமான்டிக்காக எப்போதும் பேசிக் கொள்வார்கள்.
அடிக்கடி பேச்சின் நடுவில் ஏகப்பட்ட சில்மிஷங்கள் செய்து கொள்வார்கள்.
பல நாட்கள் திடீர் திடீரென லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே கொஞ்சியபடி அடைந்து கிடப்பார்கள். எப்போதும் சிரிப்பும், கும்மாளமும்தான்.
கல்யாணம் ஆன புதிது என்பதால் இருவரும் தம் உடற்கூறுகளை பற்றி நீண்ட நேரம் பேசி ஆராய்ச்சி செய்வார்கள். அவ்விதம் ஆராயும்போது ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்கொண்டு சிரித்துக் கொள்வார்கள். அவர்களின் கொஞ்சலுக்கு நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. பல இரவுகள் தொடர்ந்து தூங்காது கொஞ்சுவார்கள்.
ஒருமுறை விவேக் கமலியிடம் “இந்த இயற்கையின் நியதியைப் பாரேன்…ஒரு ஆணைப் படைத்து, அவனை எதோ ஒரு பெண்ணுடன் சேர்த்துவைத்து, அவர்களை ஒன்றாக கட்டிலில் தாச்சுக்க வைத்து, அவர்கள் இருவரையும் புரிதலுடன் பண்ண வைத்து….”
கமலி அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, “என்னத்தை பண்ண வைத்து?”
உடனே விவேக் தன் கைவிரலை அவள் வாய்க்கருகில் நீட்ட, இருவரும் பெரிதாக சிரித்துக் கொண்டனர்.
‘வாய்ல விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத பாப்பா’ என்று கமலியை அவன் கிண்டல் செய்கிறானாம். அதற்காகத்தான் அந்தச் சிரிப்பு.
அவர்கள் அடிக்கடி பெட் கட்டுவார்கள். அந்த பெட் என்பதில் பணம் விளையாடாது. அதற்கு மாறாக யார் தோற்றுப் போனார்களோ அவர் தன் நாக்கை நீட்டி, ஜெயித்தவரின் உடம்பில் அவர் காட்டும் இடத்தில் இரண்டு நிமிடங்கள் நக்க வேண்டும். புதிதாகத் திருமணமான இளசுகளின் இந்த விளையாட்டு ரொம்ப ரொம்ப ரொமான்டிக்காக இருக்கும். சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். அன்னியோன்யம் ஊற்றெடுக்கும்.
அப்படித்தான் ‘செஸ்’ விளையாட்டில் ஒருமுறை கமலி தோற்றுவிட, தோல்வியை ஒப்புக்கொண்டு நாக்கை நீட்டினாள். விவேக் தன் வலது கையைத் தூக்கி, அக்குளைக் காண்பித்தான்.
“நாயே….அடி கிஸ்ஸால” என்று கமலி அவனை தலைகாணியால் ஓங்கி செல்லக்கோபத்துடன் அடிக்க, தலையணை கிழிந்து வீடு முழுக்க பஞ்சுகள் பறந்து ஒரே களேபரமாயிற்று.
அவர்கள் செல்லமாக கோபத்தில் ஒருவரையொருவர் திட்டும்போது “அடி செருப்பால” என்பதற்கு பதிலாக “அடி கிஸ்ஸால” என்று திட்டிக் கொள்வார்கள்.
கமலி அடிக்கடி டி.வியில் வரும் விளம்பரங்களை நடித்துக் காண்பிப்பாள்.
வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டு, சோப்புத் தூளை கலக்கையில் “வாஷிங் பவுடர் நிர்மா” என்று சொல்லிச் சிரிப்பாள்.
முதுகுவலி என்று பொய் சொல்லி குப்புறப் படுத்துக்கொண்டு, விவேக்கிடம் ஐயோடெக்ஸ் தேய்த்து விடச் சொல்வாள். அப்புறம் முதுகுக்கு கீழும் வலிக்கிறது என்பாள். விவேக் அப்பாவியாக நடிப்பான். அங்கேயும் தேய்த்து விடுவான்.
இவள் “ஊ…ஆ…அவுச்” என்பாள். பிறகு என்ன, ஐயோடெக்ஸ் பாட்டில் கட்டிலுக்கு அடியில் எங்கோ உருண்டு சென்றுவிடும். இவர்கள் இருவரும் கட்டிலுக்கு மேல் உருளுவார்கள்.
பல நேரங்களில் குறும்பாக இவள் உடையை அவனும், அவள் உடையை இவனும் அணிந்துகொண்டு லூட்டி அடிப்பார்கள். அதற்கு அப்பா, அம்மா விளையாட்டு என்று பெயர். அதாவது உடையை மாற்றியதால் இவள் அப்பாவாம்; அவன் அம்மாவாம்.
சனி, ஞாயிறுகளில் இவர்களின் அலப்பறை தாங்காது. கதவைச் சாத்திக்கொண்டு வீட்டினுள்ளேயே அடைந்து கிடப்பார்கள். ப்ரிட்ஜில் இருக்கும் அல்வா, தேன், வெண்ணை போன்றவைகளை எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை உடம்பில் அப்பி அப்பி நாக்கால் நக்கி விளையாடுவார்கள். பசிக்கும்போது போனில் சொமாட்டோ ஆப்பில் (zomato app.) நுழைந்து வேண்டியதை ஆர்டர் செய்து கொள்வார்கள்.
சில சனி, ஞாயிறுகளில் அருகிலுள்ள லீ மெரிடியனுக்கு சென்று நிறைய பணம் செலவழித்து சூட் எடுத்து தங்குவார்கள்.
வாசமுள்ள ரோஸ் பெட்டல்களை நிறைய வாங்கி, அவைகளை பாத்டப்பின் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, அனைத்து லைட்டுகளையும் அணைத்துவிட்டு, கேன்டில் விளக்கு ஏற்றி அந்த வெளிச்சத்தில் இருவரும் நீண்டநேரம் வாசனையாக குளிப்பார்கள். பிறகு ஷவரில் வெகுநேரம் சேர்ந்து நிற்பார்கள். சிலசமயம் ஜாக்கூசியில் திளைவார்கள். இருவரும் ஹோட்டல் தங்குதல்களில் ரொமான்டிக் பீலிங்கை ரொம்ப வித்தியாசமாக உணர்வார்கள்.
அவனுக்கு கமலி மாதிரி ஒரு பெண்ணின் அருகாமையும், அன்பும், ஆதரவும் இருந்தால் இந்த உலகத்தையே ஜெயித்துக் காட்டலாம் என்று தோன்றும். கமலி தன் வாழ்வில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்கிற இன்பத்தில் லயித்தான்.
கமலிக்கும் இவன் மேல் கொள்ளை ஆசை. தன் வாழ்நாள் முழுவதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
அன்று திங்கட்கிழமை. இருவரும் அவரவர் கம்பெனிகளுக்கு வேண்டா வெறுப்பாக கிளம்பிச் சென்றார்கள்.
அன்று மதியம் கமலியை ஹெச்.ஆர் டிபார்ட்மென்டில் அழைத்து பிங்க் ஸ்லிப் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆள் குறைப்பு நடவடிக்கை என்றார்கள். கமலி அலட்டிக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு கார் ஓட்டி வரும்போது விவேக்கிடம் தான் டெர்மினேட் செய்யப்பட்ட விஷயத்தை சொன்னாள். அவனும் உடனே கிளம்பி வீட்டுக்கு வந்தான்.
இருவரும் பழைய குருடி கதவைத் திறடி கதையாக சந்தோஷமாக கொஞ்ச ஆரம்பித்தார்கள்.
அன்று இரவு கமலி தன தந்தைக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, “ரொம்ப நல்ல விஷயம்மா….நீ இனிமே வேலைக்கு காரில் அலைய வேண்டாம்…உடம்ப பாத்துக்க. மாப்பிளைய நல்லா பாத்துக்க” என்றார்.
அன்று இரவு முழுவதும் எப்போதும்போல கொட்டமடித்தார்கள்.
மறுநாள் காலை விவேக் எழுந்திருக்காமல் கமலியோடு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.
“ஏண்டா, ஆபீஸ் கிளம்பல?”
“வேணாம் ராஜாத்தி….உன்ன விட்டுட்டு எனக்கு எங்கயும் போகப் பிடிக்கல.
என் கம்பெனிக்கு நான் பிங்க் ஸ்லிப் கொடுத்துட்டேன்.”
“நீதாண்டா என் செல்லம்..” கமலி அவனை இறுக்கி கட்டியணைத்தாள்.
“அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாமா?”
“வாவ்… நல்ல ஐடியா.”
விவேக் படுக்கையிலிருந்து எழுந்து அவளுக்கு ஐப்ரோ பென்ஸிலால் மேல் உதட்டில் மீசை வரைந்தான். தன் உடைகளை அவளுக்கு அணிவித்தான்.
இரண்டு பேருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. கமலி அவனை மறுபடியும் படுக்கையில் தள்ளி அவனருகே உஷ்ணமாக உரசிக்கொண்டு படுத்தாள்.
பின் சிரித்துக்கொண்டே அவன் புடவைக்குள் தன் வலது கையை நுழைத்து, குர்குரே விளம்பரப் பாணியில், “கோணலாக இருந்தாலும் அது என்னோடது” என்றாள்.
இருவரும் வெடித்துச் சிரித்தனர்.
இவ்வளவு பயங்கரமான செக்ஸ் கதையை நான் படித்ததில்லை. இருப்பினும் கணவன் மனைவியிடையே இந்த செக்ஸ் ரொமான்ஸ் நடப்பதால் அவர்களின் செயல் பாட்டில் ஆபாசம் சிறிதும் இல்லை. லாவண்யா, மேட்டூர் டேம்