அகப்பட்டவனைவிட்டுவிட்ட அரக்கன்
கதையாசிரியர்: நாரா.நாச்சியப்பன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 1,465
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நண்டகாரணீயம் என்ற காட்டில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் அங்கு வந்த பார்ப்பனன் ஒருவனைப் பிடித்து, அவன் தோள்மேல் ஏறிக் கொண்டான். பார்ப்பனன் அந்த அரக்கனைச் சுமந்து கொண்டு திரிந்தான். அவனுக்கு இது பெரும் வேதனையாய் இருந்தது. எப்போது இந்த அரக்கனிடமிருந்து தப்புவோம் என்று காலத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான்.

அந்த அரக்கனுடைய காலடிகள் மிகவும் மென்மையாக இருக்கக் கண்ட பார்ப்பனன் ஒரு நாள் அரக்களைப் பார்த்து, ‘உனக்கு ஏன் காலடி இவ்வளவு மெல்லியதாய் இருக்கிறது?” என்று கேட்டான்.
அதங்கு அந்த அறிவில்லாத அரக்கன் ‘நான் நீராடிய பின் என் காலில் இருக்கும், ஈரம் முழுவதும் காய்ந்தபின் தான் நடப்பேன். அதனால் தான் என் காலடிகள் மெல்லியனவாக அமைந்துள்ளன’ என்று கூறினான்.
ஒரு நாள் அரக்கன், பார்ப்பனன் தோளி லிருந்து இறங்கி நீராடச் சென்றான், குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு பொய்கையில் அவன் நீராடிக் கொண் டிருந்தான். அவன் நீராடிய பின் காலில் ஈரம் காயும் வரை நிலத்தில் காலூன்றி நடக்க மாட்டான் எபன்தை அறிந்த பார்ப்பனன், அப்பொழுதே ஓடி விட்டால் நல்லது என்று எண்ணினான். அவ்வாறே அரக்கன் நீராடி முடிக்கு முன்பே அவன் ஓடி மறைந்து விட்டான். நீராடி முடித்துக் காலீரம் காய்ந்தபின் அரக்கன் பார்ப்பனனைத் தேடிக் கொண்டு வந்தான்.
பார்ப்பனனைக் காணாத அரக்கன் தான் அறி வில்லாமல் தன்னைப் பற்றிய உண்மைகயைக் கூறியதால் அன்றோ அந்தப் பார்ப்பனன் தப்பி யோடிவிட்டான் எனறு எண்ணி வருந்தினான்.
யாரிடம் எதைச் சொல்லுவது என்று ஆராய்ந்து சொல்லாதவர்கள் இப்படித்தான் துன்பமடைவார்கள்.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை
![]() |
நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க... |
