கதையாசிரியர் தொகுப்பு: வண்ணநிலவன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

துன்பக்கேணி

 

 “ஏடே!… இது ஆரு?… இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டி மலைச்சியில்லாடே?… இவ எங்கன கெடந்துடே ஆம் புட்டா?…” என்று ஆச்சரியத்தோடும், பிரியத்தோடும் கேட்டார் நம்பித்தேவர். பட்டப்பகல் மாதிரி நிலா வெளிச்சம் இருந்தாலும் நம்பித்தேவர் உட்கார்ந்திருந்த இடத்தில் பூவரச மர நிழல் விழுந்து அவரை மறைத்திருந்தது. அவளுடன் அந்த ஆட்கள் பதில் சொல்வதற்கு முன்பாகவே வண்டி மலைச்சி, “என்ன மாமோவ்…பொம்பளையின்னா வேண்டானிட்டு அனுப்பி வச்சிருவீயளா?…” என்று சொல்லிக் கொண்டே நம்பித்தேவரின் கால்மாட்டில் போய் உட்கார்ந்தாள். ’ஏ பெயபுள்ளே!


கரையும் உருவங்கள்

 

 தலையைக் குனிந்த படியே நடந்து வந்து கொண்டிருந்தான். அந்தத் தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டது. ஒரு வீட்டுக்குள்ளிருந்து. ‘ராதையின் நெஞ்சமே…’ கேட்டது. வழக்கமாக எந்த இடத்தில் அந்தப் பாடலைக் கேட்டாலும் நின்று ரசித்துக் கேட்பவன். இன்று நிற்காமல் போகிறான். தெருவின் திருப்பத்தில் மட்டும் ஒரு டியூப்லைட் எரிந்து கொண்டிருந்தது. டீக்கடைக்காரன் சாமான்களையெல்லாம் ரொம்பச் சொந்தத்துடன். தெருவில் பரப்பிவைத்துக் கழுவிக் கொண்டிருந்தான். “என்ன அண்ணாச்சி… படத்துக்குப் போய்ட்டு வர்றீங்களா?” “இல்லேப்பா…” என்று தேங்கிக்கிடந்த கரித் தண்ணீரைத் தாண்டிக் குதித்தான். செருப்பு


பயம்

 

 டாக்டர் சார், எனக்குப் பயமா இருக்கு சார். என்னுடைய நடவடிக்கைகளை யாரோ கண்காணிக்கிற மாதிரி இருக்கு. என்னைக் கண்காணிச்சு யாருக்கு என்ன ஆகப் போகிறதுன்னு கல்யாணி கேட்கிறாள். ஆனால், எனக்குப் பயமா இருக்கு சார். என் வீட்டிலேயும், ஆபீஸ்லேயும் ஓட்டுக் கேட்கிற கருவியை வைச்சு ஒட்டுக் கேட்கிறாங்கன்னு தோணுது. நான் பேசறதை ஒட்டுக் கேட்டு யாருக்கு என்ன லாபம்னு மனைவி கேட்கிறாள். ஆனால், இப்படி நினைக்கிறதைத் தவிர்க்க முடியலை சார். நான் எங்கே போனாலும் போலீஸ் வருது.


மழைப் பயணம்

 

 ”அங்க போயி மரம் மாதிரி நிக்காதீங்க… ஒங்க தங்கச்சிகிட்டவும் அம்மாகிட்டவும் பேசுங்க!” ”என்னய போகச் சொல்லுதியே… நீயே போயிட்டு வந்தா என்ன?” ”ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு? பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் அப்பிடிப் பேச முடியுமா? என்ன இருந்தாலும் நான் அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவதான?” என்றாள் சிவகாமி. பேச்சியப்பனுக்குத் தன் தங்கச்சியிடமும் அம்மாவிடமும் இதைப் போய்ப் பேசுவதற்கு இஷ்டம்


இதோ, இன்னொரு விடியல்!

 

 ஆறு மணிக்குக் கூட்டம். இன்னும் இஷ்யூ ரெடியாகவில்லை. முப்பத்திரண்டே பக்கங்கள்தான். இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை, எட்டுக் கவிதைகள்! ஆறு கவிதைகளை முள்ளுக்காடு ராஜுவே எழுதியிருந்தான். ஆசிரியர் முகில், இரண்டு கவிதைகள் எழுதியிருந்தார். இவை தவிர, தரமான பட்டுச் சேலைகளுக்கு கே.வி.சில்க்ஸ், நாவிற்கினிய இனிப்புகளுக்கு மீனா ஸ்வீட்ஸ், ஓட்டல் ஆனந்தா, ராஜா ராணி காபி பார், கீர்த்தி ஸ்டோர்ஸ் என உள்ளூர் விளம்பரங்களால் மற்ற பக்கங்களை நிரப்பியிருந்தார் முகில். ‘வாசல் கதவும் ஜன்னல்களும் திறந்துகிடக்கின்றன, உன்னை எதிர்பார்த்து’