கதையாசிரியர் தொகுப்பு: ரேணுமோகன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

குழல்

 

  அந்தி சாய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது, கடற்கரையின் மணற்பரப்பின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக தணியத் தொடங்கியது. கடல் அலைகள் சற்றும் அடங்கவில்லை. அதனுடன் இராட்டினம் சுற்றும் சத்தம், ஈரக் காற்றோடு சேர்ந்து அடிக்கும் மிளகாய் பஜ்ஜியின் வாசம், கையில் எட்டும் உயரத்தில் பறக்கும் வண்ணக் காற்றாடி, பஞ்சு மிட்டாய்க்காரன் அடித்துச் செல்லும் வெண்கல மணியின் மெல்லிய ஓசை, குறி சொல்ல கேட்கும் வரும் அந்த பெரியப் பொட்டு அம்மாவின் மங்களப்பேச்சு, திருநங்கைகள் கைத்தட்டி


சுழியம்

 

  கார்த்திகை மாதம், மிதமான காலைப் பொழுது. எப்பவும் எட்டு, ஒன்பது மணிக்கு எழும் சக்தி, அன்று ஐந்து மணிக்கெல்லாம் எழரானா காரணமில்லாமலா.? அதுவும் விடுமுறை நாளில்..! ஆமாங்க, புதுசா வாங்கன `டூ வீலர்`, அவனை இரவு முழுவதும் தூங்க விடாம தொல்லை செய்தது. இத்தனிக்கும், பண்ணிரெண்டு மணி வரை, அந்த வண்டியை இயந்திர பாகங்களை நுணுக்கமாக நோட்டமிட்டிருந்தான். பின், அதன் கையேடு (மேனுவெல்) எடுத்து ஒன்றுக்கு இரண்டு முறை படித்தபடி வண்டியில் அந்தந்த பாகங்களை பார்த்து


கொக்கு

 

  என்றும் இல்லாத அளவுக்கு அன்று, வெயில் சற்று அதிகமாகவே வாட்டி யெடுத்தது. மணி மூணு இருக்கும். எதிர் வெயில் கண்ணை பிளக்கத் தொடங்கியது, சரி வீட்டுக்கு கெளம்பலாம்னு பாத்தா, அன்னிக்குன்னு பாத்து எப்பவும் விக்கற ஒன்னு ரெண்டு புஸ்தகம் கூட விக்கல. வேலுக்கு என்ன பண்றத்துன்னு தெரில., சரி, பத்து நிமிஷம் பாக்கலாம், பத்து நிமிஷம் பாக்கலாம்ன்னு ஒரு மணி நேரம் ஆனது தான் மிச்சம். நாலு மணிக்கெல்லாம் வேலுக்கு கண் இருண்டது. தலை சுற்றி,


தாமரைக் குளம்

 

  எப்பொழுதும் போல் அன்றும் பள்ளி முடிந்தவுடன் தோழிகளுடன் மிதிவண்டியில் வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள் கலைச்செல்வி, பள்ளியில் இருந்து அவளது வீடு சுமார் 9.5 கிலோமீட்டர் இருக்கும்.ஆம்,அவள் வசிப்பது கிராமம் தான், படிப்பது பண்ணிரெண்டாம் வகுப்பு என்பதால், சிறப்பு வகுப்பு எல்லாம் முடிய எப்படியும் மாலை ஆறாகிவிடும். அதைப்பற்றி அவளுக்கு கவலையோ பயமோ இல்லை, தோழிகள் துணைக்கு இருக்க..!! ஆம், தோழிகளின் துணையுடன் பாதைகள் பளிச்சிட்றது, நாலு கிலோமீட்டர் வரை. அதன் பிறகு அவள் தனிமையில் அவளது

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: