Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: செ.இராசேட் குமார்

7 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்மைன்னா என்ன?…

 

  “அவன் அவன் வாயக்கட்டி வயித்தக்கட்டி, ஒரு இன்ஷியல் அமௌண்ட்டக் கட்டி, அதுக்கு டியூவையும் கட்டி, கண்ணுக்கு கண்ணா ஒரு பைக்கு வாங்கி வச்சிருந்தா, இவனுங்க மாசாமாசம் கவர்மென்ட்டுக்கு கணக்குக் காட்றதுக்கும், மாசக்கடைசில கட்டிங் வாங்குறதுக்கும், நோ பார்க்கிங்னே போடாத முட்டுச்சந்துக்குள்ள விட்டுருக்க பைக்கக்கூட… கசாப்புக்கடையில கறிய வெட்டித்தூக்கிப் போட்றமாதி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, ஃபோர்க் லாக்கை, ஹேண்டில்பாரை, சைடு மிரரையெல்லாம் உடச்சி நம்ம பைக்க வண்டியில ஏத்திக்கிட்டு வருவானுங்களாம்… அதைப் போயி கேட்டா டோயிங்


சுலோச்சனா

 

  “ஏசப்பா…” என்று அம்மா முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டாலும் கேட்காதபடி இருந்தான். மங்களகரமான ஒரு நாதஸ்வர ஓசை. ஆனால் அது அலறியடித்துக் கொண்டு ஒலித்ததால், ஸ்ரீகாந்தும் அவன் அம்மாவும் லேசாக அதிர்ந்தபடி பார்க்க, எதிரில் உட்கார்ந்திருந்த பெண் பழகிப்போன ரிங் டோன் என்பதால் எந்த பதற்றமும் இல்லாமல் சாவகாசமாகத் தன் மொபைலை எடுத்துப் பார்த்தாள்.. போனை எடுத்து, “ஹலோ…” “……………….” “ஆங்… சொல்லுங்க…” “………………..” “மேடம்… இது வந்து சுபயோகம் மேட்ரிமோனியல்ன்னு சொல்லிட்டு ஒரு திருமண


கைப்பேசி எண்

 

  டாக்டர் செல்வராஜ் – 9841108211 அந்த மொபைல் நம்பரையே ரொம்ப நேரமாக உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. ஒரு ஆறு, ஏழு நிமிடம் இருக்கலாம். என் நண்பர்கள் சிலர் எனக்கும் அவர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் இனிமேல் என்னுடன் பேசப்போவதில்லை என்று முடிவு செய்து என் நம்பரை மொபைலிலிருந்து அழித்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு அனுபவம் எனக்கு முதல் முறை. என் வாழ்க்கையில் ஒரு சில


அன்புடன்…

 

  பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின் கைக்கும் மாறி மாறிச் சென்றது. வகுப்பறையிலிருந்த சிறுவர்கள் வாசுவை வெறுப்பேற்றுவதற்காக அவனுடைய நோட்டை மாற்றி மாற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் இந்த முத்துவால் வந்தது, என்று மனசுக்குள் திட்டிக்கொண்டு கண்களில் லேசாக ஈரம் கசிய, “குடுங்கடா…” என்று கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டும், இயலாமையால் முகம் கோண, அழும் தோரணையில் எல்லோரின் கைகளை


தங்கச்சி மடம்

 

  சென்னையில் நான் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த பரோட்டா வித்தியாசமாக இருந்தது. இதைச் சப்பாத்திக் கட்டையால் தேய்த்து, தோசைக்கல்லில் சுடுவதில்லை. மாறாக, தேய்க்காமலேயே உருண்டை வடிவத்தில் எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு வடை சுடுவதுபோல் சுட்டு எடுக்கிறார்கள். நல்ல சுவை. நான் இந்த ஊருக்கு மூன்றாவது முறையாக வந்திருக்கிறேன். தங்கச்சி மடம். இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பகுதி. புதிதாக யார் வந்தாலும் அந்த ஊரில் கால்சட்டை போடாத குழந்தைக்குக் கூட தெரிந்துவிடும். முதல் முறை வந்தபோது எல்லோரும்