கதையாசிரியர் தொகுப்பு: கந்தர்வன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

சீவன்

 

  கூழுப் பிள்ளைக்கு ஒரு வாரமாகவே மனது சரியாயில்லை. விரட்டி விரட்டி பார்த்தும் இந்த கிறுக்கு பிச்சைக்காரன் மறுபடி மறுபடி கோயிலடியில் வந்து படுத்துக் கொள்கிறான். நிற்கவே பயப்பட வேண்டும். அந்த இடத்தில் போய் இவன் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்கிறான். ஊருக்கு வெளியே அத்துவானமாய் பரவிக்கிடக்கிறது அந்த பொட்டல். நடுவில் ஆகாயத்திற்கு வளர்ந்த ஒற்றை அரசமரம். அதன் கீழ் ஆயுதபாணியாய் முனியசாமி சிலையும் அருகில் கடல் போல் கிடக்கும் ஊருணியின் நீரும் யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.


ஒவ்வொரு கல்லாய்

 

  அந்த வீட்டில் இவன் குடும்பத்தோடு குடியேறியபோது பக்கச்சுவர் பின் சுவரெல்லாம் பூசியிருக்கவில்லை. வீட்டிற்குள் எப்போதும் சிமிண்ட்வாசம். அறுத்த மரம் வாசம். பெயிண்ட் வாசம். கழுவக் கழுவ சிமிண்டும். தூசியும் வெகுநாளைக்கு வந்து கொண்டிருந்தன. ஜில்லென்றதரையும் சுவர்களும் அளித்த குளிர்ச்சி. கெடு பிடியான வாசனையெல்லாம் சேர்ந்ததில் அவளுக்கும். பிள்ளைகளுக்கும் ஒரு வாரத்திற்குக் கடுமையான ஜலதோஷம் கண்டது. “வீடு புதுசு’ என்று காட்டவும். போகிறவருகிறவர் நின்று பார்க்கவுமென்று பலவற்றைவீட்டுக்காரர் செய்திருந்தார். “குமார் இல்லம்’ என்று தன் மகனின் பெயரை


உயிர்

 

  ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக. சேதி கிராமத்தின் வழியாகச் செல்லும் பஸ்களிலும் லாரிகளிலும் நகரத்திற்கு அன்று மாலைக்குள் வந்து சேர்ந்துவிட்டது. நகரத்திலிருந்தும் வேறு எங்கிருந்தும் போட் ஜெட்டிக்கு பஸ்களில் வரவேண்டும். பிறகு முக்கால் மணி நேர படகு சவாரிக்குப் பின் தீவிற்குப் போகலாம் என்றார்கள். முதலில் சில ஆண்கள்தான் பஸ் பயணம். கடல் சவாரி வெறித்துக்


கதை

 

  மரியம்மா டீச்சர் வீடு ஒன்றுதான் இந்த ஊரிலேயே வேதக்கார வீடு. டீச்சருக்கு இது ஒன்றும் சொந்த ஊரில்லை. பக்கமாயிருக்கும் கிடாரத்திலிருந்து பெரிய ஸாரும் மரியம்மா டீச்சரும் புருஷன் பெஞ்சாதியாய் இங்கு வேலைக்குவந்தவர்கள்தான். கிடாரம் ஊரே வேதக்கார ஊராம். பெரிய ஸாருக்கு அவ்வளவாய் வேதக்கார வழக்கமெல்லாம் பிடிக்காது. இந்த ஆள்களா உள்ள ஊரில் பள்ளிக்கூடம் நடத்தவேண்டியிருந்தாலோ என்னவோ ஸார் ரொம்ப நீக்குப் போக்காயிருப்பார். ஆனால் இந்த மரியம்மா டீச்சர்தான் மூச்சுக்கு முன்னூறு முறை ‘கர்த்தரே கர்த்தரே’ என்று


மைதானத்து மரங்கள்

 

  இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் போயிருந்தது.