கதையாசிரியர் தொகுப்பு: அனுராதா ரமணன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

அக்னி

 

 வயிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல… காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் நாலு பேரும், தங்கள் தாயின் திதியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்பாவைப் பட்டினிப் போட்டுவிட்டு, எப்பொழுதோ செத்துப்போன அம்மாவுக்கு வடை பாயசத்தோடு பரிந்து பரிந்து சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இது என்ன அக்கிரமம்…? ‘இவர்கள் இப்படிப்


குற்றால டூரும்…கஷ்டமித்ர பந்துக்களும் !

 

 சுற்றுலாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். இந்தக் காலம் போல அரையாண்டு விடுமுறைக்கு ‘பிக்னிக்’, கோடை விடுமுறைக்கு ‘லாங் டூர்’ என்று போவதெல்லாம் என்னவென்றே தெரியாது எங்களுக்கு! ஆக, டீன்–ஏஜில் எனக்கும் என் சகோதர, சகோதரிகளுக்கும் டூர் என்பது ஒரு அந்நிய வார்த்தை… அவ்வளவுதான்! எப்போதாவது அப்படி புறப்பட்டால்… சென்னையில் பாட்டியிடம் வளர்ந்த நான், பெட்டி படுக்கை கட்டிக் கொண்டு மேட்டூரில் இருந்த என் பெற்றோர் வீட்டுக்குப் போவேன். வருஷம் தவறாமல்… ஏப்ரல், மேயில் என் அம்மா,


கதவைச் சாத்து…காதோடு பேசணும்

 

 முதலில் வாசற்கதவைச் சாத்தி விட்டு வருகிறீர்களா… ஏனென்றால், இது நமக்குள் பேச வேண்டிய விஷயம்… நண்டு, சிண்டுகள் கேட்டால் போச்சு… தெரு முழுக்க ஒலிபரப்பி, நம்மை பீஸ் பீஸாக்கி விடும். புருஷர்களுக்கா… ஊம்ஹ§ம்… மூச்சு விடக் கூடாது. ஏற்கனவே வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு ‘பாப்கார்ன்’ கொடுத்த மாதிரி. ‘அப்படி என்ன ரகசியம்’ என்கிறீர்களா… எல்லாம் நம்மைப் பற்றித்தாங்க! நமக்கு என்ன குறைச்சல்? எதுலேதான் குறைச்சல்? கைவேலையாகட்டும்; கம்ப்யூட்டர் ஆகட்டும்… நம்மை அடிக்க யாரும் இல்லை. நேற்றுகூட ஒரு


இரவல் தொட்டில்

 

 இன்னும் அன்னம் வரவில்லை. வாசல் இரும்புக் கிராதியின் சத்தம் கேட்கும்போது எல்லாம் விசுவம் எட்டிப் பார்த்து ஏமாந்தான். அப்பா இடை ரேழியில் இருந்து செருமினார்… ”இன்னும் அவ வரல்லே போல இருக்கே?” ”வந்துடுவா.” அதற்கு மேலும் அங்கே நிற்கச் சக்தி அற்றவனாகக் கூடத்துக்கு வந்தான். ஊஞ்சல் பலகையில் ஒரு காலை மடித்து, ஒரு காலைத் தொங்கவிட்டபடி, குறுக்குவாட்டில் அமர்ந்து, ஒற்றையாய் பல்லாங்குழி ஆடிக்கொண்டு இருந்த அம்மா இவனை நிமிர்ந்து பார்த்து, ”ஒரே ஊர்லேயே பிறந்த வீடு இருந்தா,


விறைத்த சோறும் பக்கோடாத் தூளும்!

 

 ஆட்டோவில் இருந்து முத்துலட்சுமி இறங்குவதைப் பார்த்துவிட்டு, வீட்டு வாசலில் மற்ற சிறுசுகளுடன் கதை பேசிக்கொண்டு இருந்த பாவாடை தாவணி உள்நோக்கி ஓடியது. உள்ளே போனவள், தன்னைப் பெற்றவளிடம் என்ன சொல்லிஇருப்பாள் என்று முத்துலட்சுமிக்குத் தெரியும். “அம்மா… ஓடிப் போன அத்தை வந்திருக்கா!” பட்டு, சங்கரிக்குப் பிறகு பிறந்தவள் முத்துலட்சுமி. அவள் தன் பதினேழு வயசில் காதலினாலோ அல்லது காதல் போன்றதொரு பிரமையினாலோ, தலித் இளைஞன் ஒருவனுடன் ஓடிப் போக, அந்தக் குடும்பத்து அங்கத்தினர் பெயர் அட்டவணையிலிருந்து அவள்