Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 23, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

பிரதிபிம்பம்

 

 அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக அதற்குச் சம்மதித்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது அவளுக்கு தன் வயதென்ன, அனுபவம் என்ன, முதுமை என்ன? – யாரோ ஒரு முந்தாநாள் கத்துக்குட்டி நடிகையைத் தான் எதற்காகச் சந்தித்து அவளோடு சரிசமமாக எதிரும் புதிருமாய் உட்கார்ந்து பேசுவது என்று எண்ணிய போது முதலிலேயே சரி என்று சொல்லியிருக்க வேண்டாமோ என்று இப்போது பட்டது அவளுக்கு. ஒரு


மனதின் மடல்

 

 என்ன செய்வதென்றே தெரியவில்லை ரேவதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச் சென்ற தோழிகள் வரக் காத்திருந்தாள். விடிந்தால் அமெரிக்க மாப்பிள்ளை ஆனந்திற்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம்…. இந்த நேரத்தில் ஆறு மாதமாக காணாமற்போன விஜய் திடீரென்று வந்து … எத்தனையோ சொல்லிவிட்டு… கையிலே ”என்னை… என் நிலைமையை விவரித்திருக்கிறேன். அலை பேசி… நண்பர்கள்… ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்று கோபப்படுவாய்… அந்த அளவிற்கு கோபப்படாவிட்டால் நீ… நீயாக இருக்க


மாமனிதர்கள்!

 

 எங்க எங்க இருந்தோ அள்ளிகினு வந்ததையும், நசுங்கி போனதையும், செதஞ்சு போனதையும், நாக்கு தள்ளுனதையும், கண்ணு பிதுங்குனதையுமுலாம் அறுத்து பார்த்த கையி. அப்போலாம் கூட எந்த உணர்ச்சியும் இல்ல ஒரு மண்ணுமில்ல. எங்க இருந்துடா குமாரு வந்துச்சு இம்மாம்பெரிய ஃபீலிங்கு. ஆனா சும்மா சொல்ல கூடாதுடா குமாரு நீயும் காதல் மன்னன்டா யப்பா. எத்தனையோ பேரு அழுதுகினும் கத்திகினும் வந்து பாத்திருக்கேன், ஆனா அவ அழுதது மட்டும் என்னைய இன்னா பண்ணுச்சுனு தெரில. அவ அழுதது எனக்கு


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 வாத்தியாரை கேட்டு ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராகவன் அப்பா,அம்மா,பாட்டி,சிதம்பரத்தில் இருந்த மாமா,மாமி எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போய் ‘ஆர்டர்’ வந்த IT கம்பனியிலே வேலைக்கு சேர்ந்தான்.அன்று சாயந்திரமே ராகவன் ஒரு ‘ஆண்கள் ஹாஸ்ட லில்’ ஒரு ‘ரூம்’ எடுத்துத் தங்கி வந்தான். ராகவன் அம்மா,அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி,தான் வேலைக்கு சேர்ந்த சந்தோஷ சமாசாரத் தை சொல்லி விட்டு.அவன் தங்கி வந்த ‘ஹாஸ்டல்’ பேரை அம்மா, அப்பாவுக்கு


தெளிந்த மனம்

 

 சொன்னா கேளுடா..இன்னும் மூணு நாளைக்கு அம்மாகிட்ட தூங்க கூடாது. ஏன் பாட்டி? என்றான் நகுல். “அவ தீட்டுடா..கிட்ட போனா உன் துணியிலயும் ஒட்டிக்கும். நீ வேற வீடு பூரா அலைவ..” என்றாள் குணவதி. “அவ்ளோ தான” என்று மட மடவென்று ஆடைகளை களைந்து விட்டு ஓடிச் சென்று அம்மாவை கட்டி பிடித்து கொண்டான் நகுல். சிரித்து கொண்டே தன் நான்கு வயது மகனை வாஞ்சையாய் அணைத்தாள் சுபா. சுகவனம்! அந்த வட்டாரத்தில் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்த வீடு.


காதல்

 

 அணன்யா மனம் விரும்புதே உன்னை…. என்ற பாடலை முனுமுனுத்தப்படியே மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கும்,இனியனுக்கும் திருமணம் ஆகி ஒரு வாரமே ஆகிறது நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி குடியேறிய புது வீட்டில் இன்று சமையலையும் தொடங்கி விட்டாள் அவள்,என்னதான் வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து சமைத்து பழகியிருந்தாலும்,தனியாக சமைக்கும் போது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது அவளுக்கு,முதல்முதலாக இன்று தான் அவள் சமையலை இனியன் சாப்பிடப்போகிறான்,அதுவே அவளுக்கு பரபரப்பாக இருந்தது இனியன் எழுந்து குளித்து சமையலறை பக்கம் வந்தான்.என்ன


வெற்றிக்கு பின்னால்

 

 மீண்டும் ஒரு கடைக்குட்டியின் கதைதான். ஐந்தாவதாக பிறந்ததால், கல்யாணமாகாமலே அப்பனுமானான் வெற்றி. தன் சகோதிரிகள் மூவரை வெற்றிகரமாக கட்டிகொடுத்த கதையை எழுத நீல வானமும், வெண்பஞ்சு மேகமும் பற்றாது. தாய் தலைசிறந்த சமையல்காரி, தகப்பன் ஆகச்சிறந்த சாராயக்காரன். இவ்ளோதான் குடும்ப பிண்ணனி. கணக்கில் ஒன்று இடிக்குமே, மூத்த சகோதரி, எதாவோ இருந்த தன் பெயரை “கதா”வாக மாற்றி கொண்டாள்.முதலில் பிறந்ததால் மூளையோடு பிறந்து விட்டதாக எண்ணம் அவளுக்கு. அதனால்தான் என்னவோ திருமணதில் நாட்டமில்லை. எல்லாவிதத்திலும் குடும்பத்திற்கு தனி


எதிர்வினை!

 

 திருமணம் முடிந்து நான்கைந்து மாதங்களில் கடந்த ஒரு மாத காலமாக மனைவி நடப்பில் மாற்றம்! – கவனித்த சுரேசுக்குச் சின்னதாய் ஒரு நெருடல். திருமணமான புதிதில் அழகு மனைவியோடு உல்லாசமாக ஊர் சுற்ற வேண்டும் என்கிற நினைப்பில் அலுவலகம் விட்டு வந்த கையோடு…. கடற்கரை, பூங்கா, சினிமா, உணவு விடுதி என்றெல்லாம் அழைப்பான். லேசில் சம்மதிக்க மாட்டாள். அப்படியே வற்புறுத்தி அழைத்துச் சென்றாலும் தலைவலி, கால்வலி, குளிர் என்று ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரை மணி


பாவத்துக்கு ஒரு பரிகாரம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அலட்சியமாகப் பத்து ரூபாய் நோட்டைச் சரளா நீட்டியபோது, ”முப்பது பைசாவா இருந்தால் கொடும்மா – இல்லாட்டி இறங்கிடு!” என்று கறாராகச் சொன்னான் கண்டக்டர். அவன் எழுப்பிய விசில் ஒலியில் பஸ்ஸின் வேகம் குறையலாயிற்று. சரளா தன் அடிவயிற்றில் ஒருவிதக் கலக்கம் தோன்றி நொடியில் உடல் முழுவதும் பரவுவதாக உணர்ந்தாள். இததனை பேர் பார்க்கும் போது. பஸ்ஸிலிருந்து இறங்குவது எத்தனை அவமானம் என்னும் உணர்வு


‘பதிவிரதை’ காந்தாரி

 

 (இதற்கு முந்தைய ‘வாத்ஸ்யாயனர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஒருபெண் காதல் கடிதம் எழுதும் சிலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கியவர்கள் இந்தியர்கள், அதுவும் ஒரு கோவிலில்!! ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ஆங்கில நாவல்கள் எழுதும் காலம்வரை இதைப் பற்றிப் பேசக்கூட அஞ்சினர் மேலைநாட்டார். வாத்ஸ்யாயனரோவெனில் தனக்கு முன்னால் இந்த சாத்திரத்தை எழுதிய பலருடைய பெயர்களைக் குறிப்பிடுகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நாற்பொருளையும் மனிதனுக்குத் தேவையான இன்றியமையாத நான்கு பகுதிகளாகவே கருதினர்.