கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 27, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

பாலம்

 

 நிதானமாகப்பரந்துகொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்கு மான இடை நிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள். காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது. தூரத்தில், பின்னால் தாமரைக்குண்டு விலக்கில் மட்டும் சில்லறை யாய் சில விளக்குகள். முன்னால் தூரத்தில் மாங்குளத்தில் விளக்கேதும் வெளித் தெரியா வண்ணம் சுற்றிலும் அடைத்துக்கொண்டு வாழைத் தோட்டங்கள், தென்னந் தோப்புக்கள். நிலவொளியில் காங்கிரஸ்காரன் போட்ட தார் ரோடு மெல்ல மினுங்கியது. ஏராளமான நொடிகள். இரண்டு பக்க வயல்காரர்களும் ஏதோரோட்டில்


பிரபஞ்ச நூல்

 

 1 இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான்


வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம்

 

 முந்தின விடுமுறை நாளின் மகிழ்வை நினைத்து ஏங்கி, மறு நாள் பிறந்தும் விடுபடாத துயரில் மூழ்க்கிக் கிடக்கும் இந்தத் திங்கட்கிழமை, பல சமயங்களில் இவளுக்கு வெகு துயரம் மிக்கதாய் இருந்திருக்கிறது. அவற்றைப் போலில்லாமல் இந்தத் திங்கட்கிழமை மாலை உற்சாகம் நிறைந்ததாய்த் தொடங்கியிருப்பது போலவே, உற்சாகம் நிறைந்து முடியவேண்டும் என்று அவள் மனதார விரும்பினாள். இறைவனை வேண்டினாள். இலை துளிர் காலத்து அறிகுறியாய் மைதானத்தைச் சுற்றியிருந்த பெரு மரங்கள் யாவும் பூத்து நிறைந்திருந்தன. அருகே நிற்பவர்களை மணம் வீசி


தராசு

 

 கைத்தறி லுங்கியை , செம்மண் நிறத்துப் பேண்ட்டால் அகற்றிவிட்டு, பாடாவதி பனியனை வெளுத்துப்போன வெள்ளைச் சட்டையால் மறைத்துக் கொண்டு, ஒப்புக்குத் தலையை வாரியபடியே கண்ணாடியை வேண்டா வெறுப்பாய்ப் பார்த்த விசுவநாதனை, செந்தாமரையும் அவனை மாதிரியே பார்த்தாள். ஸ்டவ்வில் பூனை குத்துக் காலிட்டு உட்கார்ந்திருப்பதை சொல்லத்தான் போனாள். ஆனால் – அதற்குள், வீட்டிற்கு வெளியே நடுரோட்டில் டெப்டி டைரக்டரின் கார், கரடுமுரடாய்ச் சத்தம் போட்டபடியே நின்றது. காருக்குக் குறைச்சலில்லை. வழக்கமாய் வருவதுதான். ஆனால் அன்று ஏனோ, காரின் குரல்


குதிக்கும் இருப்புச் சட்டி

 

 பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி. பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும் நல்ல அரசாட்சியும் இருந்ததால் அந்த நாட்டு மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார்கள். நாடு நன்றாக இருந்ததால் அரசனுக்கு வேலை யும் குறைவாகவே இருந்தது. திருட்டு என்றும், அடிதடி என்றும், மோசடி என்றும்


கடவுள் வாழ்த்து

 

 திருக்குறள் கதைகள் முகவுரை இந்த இருபதாம் நூற்றாண்டில் மற்றகாட்டு அறி வுடை மக்கள் அடைந்திருக்கின்ற ஆட்சி நலவுரிமையை இந்தியரும் அடையப் பெருமுயற்சி யெடுத்தவர் மகாத்மா காந்தியடிகள். பிரிவுற்ற இந்தியா முறிவற்று ஒருமையுற உழைத்த அடிகளின் தூய உட்கோளைத் தன் மனக் கோளுக்கு மாறென்று எண்ணி வெறிகொண்ட விநாயக நாதுராம் கோட்ஸே, இறைவனைத் தொழும் தூய வேளை யிலே சுட்டுக் கொண்றான். அந்நாள் 1948 ஜனவரி 30s வெள்ளி மாலை. இந்நாள், நாட்டு வரலாற்றில் சிவப் பெழுத்தாற் பொறித்து


பரிசு – ஒரு பக்க கதை

 

 அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை. ஆனால் கும்பகோணத்தில் மட்டும் ஐந்து பேர் நல்ல சுவையுடன் தயாரித்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது குழம்பித்தான் போனாள். ஐந்து பேரில் நான்கு இளம் பெண்கள், ஒருவர் வயதான பெண்மணி. அவருடன் வந்திருந்த கணவர் “ இதற்கு போய் என்ன குழப்பம் ஐந்து பேரிடமும் தனித்தனியாக இந்த


புதுச்சட்டை

 

 நாளைக்குப் புதுவருடம். அவனுக்கு அழுகைதான் வருகிறது! அதோ …… குமார் தனது தந்தையுடன் காரிலே செல்கிறான். அவன் பெரிய கடைக் குச் செல்வான். புதுச்சட்டை , சப்பாத்து எல்லாம் வாங்குவான். பள்ளிக்கூடத்துக்கும் அதைப் போட்டுக் கொண்டு வருவான். ‘ஐயா வேண்டித்தந்த புதுச்சட்டை’ என்று புளுகுவான். அவனுக்கு அழுகைதான் வருகிறது. அவனுக்கும் ஐயா வீட்டில் இருந்தால் எவ்வளவு நல்ல தாய் இருக்கும். அவர் சைக்கிளிலே சென்று புதுச்சட்டை வேண்டிவருவார். அவன் போடுவான்; “ஆனால் ஐயாதான் பொலீஸ் ஸ்டேசனில் இருக்கிறாரே…..


ஒதெல்லோ

 

 முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இப்பதிப்பில், சிறுவர்கட்குக் கதைகள் நன்றாய் மனத்திற் பதியும் பொருட்டுக் கதை உறுப்பினர்களையும்