பாத்தேளா, அது நடந்துடுத்தது…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 3,861 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

காலையிலேயே எழுந்துக் குளித்து விட்டு,நெத்தியில் பட்டை பட்டையாக விபூதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனத்தை பண்னி விட்டு,எழுத்து சுவாமிக்கு மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு வக்காலாத்திலே நடக்கப் போற சுவாமி சமாராதணைக்குக் கிளம்ப ரெடி ஆனார் சாம்பசிவ கன பாடிகள்.

அவர் கிளம்பும் போது அவரை எது கேட்டாலும் அவருக்கு பிடிக்காது.அதை அவர் ஒரு அபச குனமாக நினைப்பவர்.

அதனால் கொஞ்ச நேரம் ஆனதும் “ஏன்னா,நீங்கோ சாப்பிட ஆத்துக்கு வந்து விடுவேளோன் னோ.இல்லேநான் ஏதாவது சமைச்சு வக்கட்டுமா”என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் அவர் தர்ம பத்தினி காமாக்ஷி.

”ஏண்டீ,என்னை கேக்கறயே.நோக்கு தெரியாதோ.அவாத்து ‘பங்க்ஷனுக்கு’ அவா எப்பவும் யாரோ சமையல் காரன் கிட்டே தானே சாப்பாடு பண்ண ஆர்டர் கொடுப்பா.நான் கண்ட சமையல்காரன் சமைக்கிறதை எல்லாம் சாப்பிடுவேனா.நோக்கு நன்னா தெரியுமே.ஒரு வேளை அவாத்து மாமி மடியா சமைக்கிறதா இருந்தா சாப்பிட்டு இருப்பேன்.ஆத்துக்கு வந்து தான் நான் சாப்பிடப் போறேன். நீ ஏதாவது ‘சிம்பிளா’ சமைச்சு வை.நான் கிளம்பறேன்.நேக்கு ரொம்ப நேரமாடித்து.நான் இன்னும் பத்து கிலோ மீட்டர் இந்த ‘டிராபிக்லே’ போயாகணும்”என்று சொல்லி ‘ஸ்கூட்டரை’ உதைத்து ‘ஸ்டார்ட்’ பண்ணி பறந்தார் பரமசிவ கனபாடிகள்.

பரமசிவம் பதினாலு வருஷம் கும்பகோணம் வேத பாடசாலையிலே படித்து விட்டு சென்னை க்கு வந்தார்.சென்னையிலே அவர் பரமசிவ கனபாடிகள் ஒரு வாத்தியார் இடம் ஒரு உதவி வாத்தியா ராகச் சேர்ந்து வாத்தியார் வேலையை நன்றாகக் கற்றுக் கொண்டு வந்தார்.

ஐந்து வருஷம் ஆனதும்,அவர் தனியாகவே ஒரு வாத்தியாராக வேலை செய்து வந்தார்.

பரமசிவ கனபாடிகளுக்கு தன்னுடைய ஒரே பெண் காமாக்ஷியை வாத்தியார் வேலை கற்றுக் கொடுத்த வாத்தியார் கல்யாணம் பண்ணீ வைத்தார்.
கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆனதும்,கனபாடிகள் தம்பதிகளுக்கு ஒரு பெண் பிறந்தாள் அந்தப் பெண்ணுக்கு கமலா என்று பேர் வைத்து செல்லமாக வளர்ந்து வந்தார்கள் கனபாடிகள் தம்பதிகள்.

கமலா ஐந்தாவது படித்துக் கொண்டு இருக்கும் போது கனபாடிகள் தம்பதிகளுக்கு ஒரு பை யன் பிறந்தான்.அந்தப் பையனுக்கு மாதவன் என்று பெயர் வைத்து,அவனையும் கமலா படித்துக் கொண்டு வந்த பள்ளிக் கூடத்திலேயே படிக்க வைத்தார் கனபாடிகள்

இருவரும் நன்றாகப் படித்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு நாள் இரவு காமாக்ஷி தன் கணவரைப் பார்த்து “ஏன்னா,கமலா பத்தாவது ‘பாஸ்’ பண்ணீன பிற்பாடு அவளை பள்ளிக்கூடம் அனுப்பாம ஆத்லேயே வச்சுண்டு வரலாமா.அவளுக்கு வயசு ஆயி ண்டு வறது.கமலா படிச்சது போதும்ன்னு,நாம அவளுக்கு காலா காலத்திலே ஒரு கல்யாணத்தேப் பண்ணீ வச்சுடலமா.நீங்கோ என்ன அபிப்பிராயப் படறேள்.இல்லே அவ இன்னும் மேலே படிக்கணும்ன்னு நீங்கோ ஆசைப் படறேளா.நீங்கோ என்ன பண்ணலாம்ன்னு இருக்கேள்” என்று பயந்துக் கொ ண்டே கேட்டாள்.

கனபாடிகள்“காமாக்ஷி,நீ எதே மனசிலே வச்சுண்டு அப்படி பேசறேன்னு நேக்குத் தெரியாதா என்ன.எனக்கும் அந்தப் பொறுப்பு இருக்குன்னு,நீ யோஜனைப் பண்ணவே இல்லையா.எனக்கும் அவ நல்லபடி பத்தாவது ‘பாஸ்’ பண்ணீட்டா,ஒரு நல்ல பையனாப் பாத்து அவளுக்கு ஒரு கல்யா ணத்தே பண்ணீ வச்சுட்டோம்ன்னா தான் எல்லாத்துக்கும் நல்லது.அவ முதல்லே பத்தாவது ‘பாஸ்’ பண்ணட்டும்.மெல்ல அவ கிட்டே சொல்லி அவளே ஒரு கல்யாணத்தே பண்ணிக்கச் சொல்லலாம். ஆனா அவ கல்யாணம் பண்ணிக் கொள்ள ஒத்துக்கனுமே” என்று இழுத்தார்.

“நீங்கோ பிடிவாதமா அவ கிட்டே‘தோ பாரு கமலா.நீ ஒரு பொம்மணாடிப் பொண்ணு உனக்கு. காலா காலத்லே ஒரு கல்யாணத்தே நாங்க பண்ணி வச்சோம்ன்னா நல்லது.காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கறது’ன்னு ஒரு அதட்டல் போட்டு சொன்னா கமலா கேக்க மாட்டாளா என்ன.எதுக்கு எடுத்தா லும் என்னே அதட்டறேளே”என்று இது தான் சாக்கு என்று காமாக்ஷி தன் கணவனை கிண்டல் பண்ணீனாள்.

உடனே கனபாடிகள் “நீ என்னே கிண்டல் பண்றது இருக்கட்டும்.நான் கமலா கிட்டே கொஞ்ச ம் அதட்டி சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன்.அதுக்கு அப்புறமா அந்த பகவான் விட்ட வழி. நேக்கு ரொம்ப துக்கம் வறது” என்று சொல்லி திரும்பிப் படுத்துக் கொண்டார்.

கமலா பத்தாவது பாஸ் பண்ணினதும் குருக்கள் தம்பதிகள் அவளை மேலே படிக்க வைக்காமல் வீட்டிலேயே வைத்துக் கொண்டு வர நினைத்தார்கள் கனபாடிகள் தம்பதிகள்.ஆனால் கமலா “நேக்கு மேலே படிக்க ரொம்ப ஆசையா இருக்கு.என்னே பதினோராவது, பன்னாடாவது இருக்கிற ஒரு பள்ளீ கூடத்திலே சேத்து படிக்க வையுங்கோ.என் ‘ப்ரெண்ட்ஸ்’ எல்லாம் மேலே படிக்கப் போறா”என்று கெஞ்சினாள்.

உடனே கனபாடிகள் “இதோ பார் கமலா,நீ ஒரு வாத்தியார் ஆத்துப் பொண்ணு.உன்னே நானும் காமுவும் ஒரு நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணீக் குடுத்து விட்டா நிம்மதியா இருந்துண்டு வரு வோம்.நீ வேறே ஒரு பள்ளீக் கூடத்லே சேந்து படிக்க ஆரம்பிச்சா, நீ பன்னாடாவது ‘பாஸ்’ பண்ணி முடிக்கறதுக்குள்ளே,உனக்கு வயசு ரொம்ப ஆயிடும்.நான் உனக்கு ஒரு நல்ல பையனா பாத்து ‘ஜாம்’ ‘ஜாம்’ன்னு கல்யாணத்தே பண்ணீ வக்கிறேன்.நீ பிடிவாதம் பிடிக்காம கல்யாணத்தே பண்ணிக்கோ” என்று தீர்மானமாக சொல்லி விட்டார்.

ரெண்டு வாரத்திற்கெல்லாம் கனபாடிகள் தன் குரு வாத்தியாரிடம் தன் பெண் கமலா ஜாதக த்தைக் கொடுத்து,அவர் பையனின் ஜாதகத்தை வாங்கி பொருத்தம் பார்த்தார்.ரெண்டு ஜாதகமும் மிக நன்றாக பொருந்தி இருக்கவே,தன் ஆசாரத்திற்கு ஏத்தாற் போல தன்னுடைய பெண்ணை.தன் குரு வாத்தியார் பையனுக்கே கல்யாணம் பண்ணிக் கொடுத்தார் கனபாடிகள்.

ஆனால் காமாக்ஷிக்கு இந்த கல்யாணத்திலே துளிக்கூட இஷ்டமில்லை.என்ன பண்ணுவது. கனபாடிகள் பிடிவாதம் பிடிச்சார்ன்னா அதை நடத்தியே தீருவார்.

அதனால் காமாக்ஷி ஒன்றும் அவரை எதிர்த்து சொல்லாமல் சும்மா இருந்து விட்டாள்.

காமாக்ஷியின் தாத்தா ஒரு குருக்களாக இருந்தவர்.காமாக்ஷியின் அப்பாவும் ஒரு குருக்கள். ரெண்டு அண்ணன்களும், ஒரு தம்பியும்,இதே ‘வாத்தியார்’ தொழில் தான் செய்து வந்தார்கள்.இப்படி மூன்று தலை முறையாக வாத்தியார் குடும்பத்திலேயே,இருந்து வந்த அவளுக்கு தினமும் இந்த குடிமித் தலைகளையும்,பஞ்ச கஷ்டி வேஷ்டிகளையும்,தர்ப்பை கட்டுகளையும் பார்த்து பார்த்து அலுத்து விட்டது.

தன் பெண்னுக்கு ‘இந்த ‘வாத்தியார்’ குடும்பமா இல்லாமல் மற்றவர்கள் போல ஒரு’ஆபீஸ்’ க்கு போய் வர புருஷர்களாக இருக்கணும்’ என்று மிகவும் ஆசை பட்டாள்.ஆனால் கமலாவுக்கும் ஒரு வாத்தியார் குடும்பம்தான் அமைந்து விட்டது.

கனபாடிகள் பையன் மாதவன் ‘ட்வெல்த்’ பாஸ் பண்ணி விட்டு B.A.’கோர்ஸ்’ சேர்ந்தான்.

இரண்டு வருடம் ஆனதும் மாதவன் B.A.பாஸ் பண்ணீனான்.அவன் ரொம்ப சுமாரான மார்க் தான் வாங்கி பாஸ் பண்ணி இருந்தான்.மாதவன் பல கம்பனிகளுக்கு ‘அப்லிகேஷன்’ போட்டு அவர் கள் அழைத்த ‘இண்டர்வியூக்கு’ போய் வந்தானே ஒழிய அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்க வில்லை.மனம் ஒடிந்துப் போனான் மாதவன்.
மாதவன் இப்படி மனம் ஒடிந்துப் போய் உட்கார்ந்துக் கொண்டு இருந்ததைப் பார்த்த காமாக்ஷி, தன் கணவரைப் பார்த்து “ஏன்னா,நம்ப மாதவன் நிறைய கம்பனிகளுக்கு எல்லாம் ‘இண்டர்வியூக்கு’ போய் வந்தும்,அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கலேயே.அவன் ரொம்ப மனசு ஒடிஞ்சுப் போய் இருக்கான்.நீங்கோ ‘உபாத்யாயம்’ பண்ற பெரிய கமபனி முதலாளீ யார் கிட்டேயாவது கொஞ்சம் சொல்லி மாதவனுக்கு ஒரு வேலேயே கொஞ்சம் போட்டுக் குடுக்க சொல்றேளா.கொஞ்சம் முயற்சி பண்ணித் தான் பாருங்களேன்.அவன் ஒரு புருஷ பையன்.எத்தனை நேரம் ஆத்லே சும்மா இருந்து ண்டு வருவான்.கொஞ்சம் மும்முறமா ‘ட்ரை’ பண்ணுங்கோ” என்று கொஞ்சம் அதட்டலாச் சொன் னாள்.

உடனே கனபாடிகள் ”நான் கேட்டுப் பாக்கறேன் காமு.நான் சில பெரிய கம்பனி முதலாளீ ஆத்லே ‘உபாத்யாயம்’ பண்ணிண்டு வறேன்.அவா யாரையாவது நான் இன்னிலே இருந்து கேட்டுப் பாக்கறேன்.அவா நிச்சியமா நான் கேட்டா பண்ணுவா” என்று சொல்லி விட்டு அவருடைய ‘ஜொலி’ க்குக் கிளம்பினார்.

ஒரு மாதத்திற்கு எல்லாம் கனபாடிகள் ‘உபாத்தியாயம்’ பண்ணும் இடத்தில் இருந்த ஒரு பெரிய கம்பனி முதலாளி கிட்டே சொல்லி மாதவனை ஒரு ‘கிளார்க்’ வேலைக்கு சேர்த்து விட்டார்.

மாதவன் மிகவும் நல்ல குணம் உடையவனாக இருந்தான்.நிறைய உலக விஷயம் எல்லாம் தெரிந்து வைத்து இருந்தான்.அவன் நல்ல அறிவாளியும் கூட.தன் அப்பா அம்மாவிடம் பேசும் போது அறிவு பூர்வமாக தான் பேசுவான்.ஆபீஸிலும் தன் வேலைகளை ஒழுங்காக பண்ணி ஒரு வருஷதிற்கு எல்லாம் முதலாளியின் நன் மதிப்பைப் பெற்று விட்டான் மாதவன்.

அவன் வயதில் இருக்கும் எல்லா வாலிபர்களுக்கும் ஏற்படும் காதல் அவனுக்கும் ஏற்பட்டது. மாதவனும் ஒரு அழகான பெண்ணை மனதார காதலித்து வந்தான். சமயம் கிடைக்கும் போதெல்லாம் மாதவன் தன் காதலை ஜாடை மாடையாக அந்தப் பெண் கிட்டே வெளிப்படுத்தி வந்தான்.

அந்த பெண்ணும் தன் பங்குக்கு அவள் காதலை தெரிவித்து வந்தாள்.

அந்த பெண் பார்ப்ப தற்கு மிகவும் அழகாகவும் நல்ல நிறத்துடனும் இருந்தாள்.இப்படி வெறும் பார்வையிலும்,ஜாடை மாடையிலும்,வளர்ந்த அவர்கள் காதல் ஒரு நாள் அவர்களை ஒரு பூங்காவில் சந்திக்க வைத்தது.

இருவரும் பேச்சில் தங்கள் பெயர்,வேலை,வயது எல்லாம் ஒருவருக்கு ஒருவர் பறி மாறிக் கொ ண்டார்கள்.தான் காதலிக்கும் பெண்ணின் பேரைக் கேட்டதும் கொஞ்சம் திடுக்கிட்ட மாதவன் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவளிடம் பேசி வந்தான்.

ஆறு மாதம் ஒன்றாகப் பழகின பிறகு,இவர்கள் காதல் மொட்டு மெல்ல விரிந்து முழு மலராக மாறி வாசம் வீசத் தொடங்கி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டார்கள்.

மேரி ஜோசப்புக்கு ஒரே மகள்.ஜோஸப் ஒரு சர்ச்சில் பாதிரியாக இருந்து வந்தார்.மேரி எட்டு வயதாய் இருக்கும் போது அவள் அம்மா ஒரு சாலை விபத்தில் காலமாகி விட்டாள்.தன் மணைவி இறந்த பிறகு ஜோசப் மறு விவாகமே பண்ணிக் கொள்ளவில்லை.

மேரியை கவனித்து வர தன் அம்மாவை கூட வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார் ஜோஸப்.

மேரி எதைக் கேட்டாலும் ‘சா¢’ என்று சொல்லி அதை நிறைவேற்றி வந்தார் ஜோஸப்.

மேரிக்கு சின்ன வயதில் இருந்தே பிறருக்கு உதவி பண்ணுவது என்றால் ரொம்ப பிடிக்கும். ரோடில் யாராவது வயாதானவர்கள் ரோடை கடக்க கஷ்டப்பட்டால்,மேரி அவர்கள் கையைப் பிடித்து ரோடை கடக்க உதவுவாள்.தன் கண்ணில் படும் பிச்சைக் காரர்களுக்கு தன் கையில் இருக்கும் பணத் தில் சிறிது தொகையைப் போடுவாள்.யாராவது அதிக பளு தூக்கி வந்தால்,மேரி அவர்கள் பளுவை கொஞ்சம் வாங்கி கொண்டு உதவுவாள்.மேரிக்கு பிற உயிர்களை கொன்று அதை சாபிடுவதும் பிடிக் காது.அவள் வெறும் காய்கறி உணவு தான் சாப்பிட்டு வந்தாள்.
ஒரு நாள் மேரியின் அம்மா விளையாட்டுக்கு“ஜோ,ஒரு வேளை நம்ப மேரி போன ஜென்மத் லே ஒரு ‘ஐயர் ஜாதியிலே’ பொண்ணா பொறந்து இருப்பா போல இருக்கு.அதான் அவளுக்கு இந்த ‘கவுச்சி’ எல்லாம் பிடிக்கறதேல்லேன்னு நான் நினைக்கிறேன்” என்று தமாஷாகச் சொன்னாள்.

உடனே ஜோஸப் “ஆமாம்மா.நீங்க சொல்றது ரொம்ப சா¢.இந்த ஐயர் ஜாதிகாரங்க தான் ‘கவுச்சி’ எல்லாம் சாப்பிட மாட்டாங்க.அதேத் தவிர மேரி பாக்க ஒரு ஐயர் பொண்ணு மாதிரி நல்ல வெளுப்பா கலரா இருக்கா” என்று சொல்லி சிரித்தார்.

‘மெட்ரிக் பாஸ்’ பண்ணினவுடன் மேரி தன்னை ஒரு ‘நர்சிங்க் கோர்ஸில்’ சேர்க்கும் படி அவள் அப்பாவிடம் பிடிவாதம் பிடித்தாள்.ஜோசப் அவளை ஒரு ‘நர்சிங்க் கோர்ஸில்’ சேர்த்து விட்டார்.

மேரி ‘நர்ஸிங்க் கோர்ஸ்’ பாஸ் பண்ணி முடிந்தவுடன் ஜோசப் சிபாரிசால் ‘இஸபெல்ஸ் ஹாஸ்பி டலில்’ ‘நர்ஸ்’ வேலைக்க்கு சேர்ந்தாள் மேரி.தான் ஆசைப் பட்ட ஒரு ‘நர்ஸ்’ வேலைக் கிடைத்தவுடன் மேரி சந்தோஷமாக அந்த ‘நர்ஸ்’ வேலையை செய்து வந்தாள்.

மாதவனுக்கு தான் காதலிக்கும் பெண் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவள் என்ற ஒரு சிக்கல் இருந்ததே தவிர அவளிடம் வேறு ஒரு குறையையும் அவனுக்குத் தெரியவில்லை.மாதவன் மேரியின் போ¢ல் உயிராய் இருந்தான்.மேரியும் மாதவனின் நல்ல குணங்களையும்,நல்ல எண்ணங்களையும், எதையும் மறைக்காமல்,பேசி வரும் வெளிப்படையான மனதையும் நினைத்து மிகவும் வியந்தாள்.

‘இவ்வளவு நல்ல குணசாலயான ஒரு ஆண் மகன் இந்த கொடிய உலகத்தில் கூட இருப்பாங்களா’ என்று வியந்தாள் அவள்.

மாதவன் மேரியைப் பார்த்து “மேரி,நீ உங்க அப்பாவுக்கு ஒரே பொண்ணு.உங்க அம்மா சின்ன வயசிலே இறந்துப் போனதால்,உங்க அப்பாவும் பாட்டியும் உன்னே ரொம்ப செல்லமா வளத்து வறா.

அதனால்லே நீ அவாக் கிட்டே நம்ம காதலைச் சொன்னா,அவா மறுப்பே சொல்லமாட்டா. அவா நிச்சியமா நம்ம காதலே ஒத்துண்டு கல்யாணத்துக்கு கல்யாணத்துக்கு சம்மதம் குடுப்பா. இதிலே எனக்கு சந்தேகமே இல்லே.நான் தான் எப்படி என் அப்பா,அம்மா கிட்டேநம்ம காதலைச் சொல்லி அவா சம்மதத்தே பெறப் போறேன்னு நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு” என்று சொல்லி வரு த்தப் பட்டான்.

உடனே மேரி “வீணா கவலைப் படாதீங்க.அவங்க நிச்சியமா நம்ம காதலுக்கு சம்மதம் குடுப்பா ங்க.நம்ம கல்யாணம் நிச்சியமா நடக்குங்க.நீங்க நிம்மதியா இருந்துக் கிட்டு வாங்க” என்று சொல்லி மாதவனுக்குத் தேத்தறவு சொல்லி வந்தாள்.

ஒரு நாள் மாதவன் மேரியிடம் “மேரி,நான் நிச்சியமா என் அப்பா,அம்மா கிட்டே உன்னைப் பத்தின எல்லா உண்மைகளையும் மறைக்காம சொல்லப் போறேன்.சொல்லி விட்டு ‘எனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு ஆனா,அது மேரியுடன் தான் இருக்கணும்’ என்று தீர்மானமா சொல்ல போறேன். அவா ஒத்துக் கொண்டா நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்றேன்.ஒரு வேளை அவா ‘முடி யாது’ன்னு சொல்லிட்டா,நான் உன்னுடன் பழகின இன்பமான நாட்களை நினைச்சி என் காலத்தை கழிக்கப் போறேன்.நான் நிச்சியமா வேறு ஒரு பெண்ணையும் நான் கண் எடுத்தும் பாக்க மாட்டேன். அவா ஒரு வேளை நம்ம கல்யாணத்துக்கு மறுப்பு சொன்னா,,நீ உனக்கு பிடிச்ச ஒருத்தரை கல்யா ணம் பண்ணிக்கோ மேரி” என்று சொல்லும் போதே அவன் கண்களில் நீர் துளித்தது.

இருவர் கண்களும் குளமாயின.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

குருக்கள் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது அங்கே வந்த மாதவன் அப்பா மூடு நன்னா இருக்கவே மெல்ல தன் பேச்சைத் தொடங்கினான்.

“அப்பா,அம்மா, நான் ஒரு பெண்ணே மனசார காதகிக்கறேன்.நான் கல்யாணம் பண்ணிண்டா அவளைத் தான் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.அந்த பொண்ணு ரொம்ப நல்லவ.பாக்க ரொம்ப அழகா,நம்ப பிராமண ஜாதி பொண்ணு மாதிரி நிறமாவும் இருப்பா.ஆனா அவ கிஸ்துவ ஜாதியைச் சேர்ந்தவ.அவ சின்ன வயசிலே இருந்து நாம சாப்பிடறா மாதிரி வெறுமனே காய்கறிகளேத் தான் சாப் பிட்டுண்டு வறா.என்னைக் கல்யாணம் பண்ணிண்டா,நம்ம ஆத்து வழக்கம் போல,நம்ம ஆத்து ஆகா ரம் போல சாப்பிட்டுண்டு வற அவ சம்மத்திச்சு இருக்கா.நான் அவளை கல்யாணம் பண்ணிண்டா நீங்களும்,அம்மாவும் அவளை நம்மாத்து மாட்டு பொண்ணா ஏத்துப் பேளா” என்று கேட்டு நிறுத்தி னான்.

“ஏன்னடா சொன்னே,அந்த பொண்ணு கிருஸ்தவ ஜாதியை சேர்ந்த பொண்ணா. ஏண்டா உனக்கு பயித்தியம் கியித்தியம் பிடிச்சுருக்கா என்ன.நம்ப ஜாதி என்ன,அவ ஜாதி என்ன.நம்ம ஆசாரம் எங்கே.நம்ப ஆகாரம் எங்கே.நம்ப சுவாமி என்ன.அவா சுவாமி என்ன.நம்ம கலாசாரம் என்ன,அவா கலாசாரம் என்ன.எப்படிடா உனக்கு என்னேயும்,அம்மாவையும் பார்த்து அந்தப் பொண் ணை நம்ம ஆத்து மாட்டுப் பொண்ணா ஏத்துப் பேளான்னு கேக்கத் தோன்றது.அது முடியவே முடி யாத காரியம்.நீ இந்த ‘காதல்’ ‘கத்திரிக்கா’ கதை எல்லாம் இனிமே இங்கே சொல்லிண்டு இந்த ஆத்துக்கு ஊள்ள்ற் வராதே, தெரியறதா” என்று கத்தினார் கனபாடிகள்.

மாதவன் ஒன்னும் சொல்லாமல் சும்மா நின்றுக் கொண்டு இருந்தான்..

கொஞ்ச நேரம் ஆனதும் ”நான் ஒரு நல்ல குருக்கள் ஆத்து பொண்ணா உனக்கு பார்த்து சொல்றேன்.அவளை உனக்கு ‘ஜாம்’,’ஜாம்’ என்று கல்யாணம் பண்ணி வக்கிறேன்.அவளை நீ கல்யாணம் பண்ணின்டு,சந்தோஷமா குடுத்தனம் பண்ணிண்டு வா.தெரியறதா.மறுபடியும் அந்த காதல் பேச்சை இந்தாத்லே இனிமே எடுக்காதே”என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார் கனபாடிகள்.

ஒரு பத்து நிமிஷம் கழித்து மாதவன் மெதுவா “அப்பா, நீங்க எனக்கு வேறு எந்தப் பெண்ணை யும் பாக்க வேணாம்.நான் வேறு எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டேன்.நான் காலம் பூராவும் ஒரு பிரம்மச்சாரியாவே இருந்துண்டு வறேன்” என்று சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் “அப்பா,அம்மா நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்” என்று சொல் லி விட்டு செருப்பை காலில் மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பிப் போனான் மாதவன்.

மாதவன் வெளியே கிளம்பிப் போனதும் “என்னடி காமு,இந்த மாதவன் சொல்றது அநியாயமா இருக்கே.அவன் அந்த கிருஸ்தவ பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பிடிக் கிறான்.அவன் கோவில்லே இருந்து ஆத்துக்கு வந்ததும்,நீ செத்தே அவனுக்கு விவரமா எல்லாம் சொல்லி,அவனை அந்த கிருஸ்தவப் பொண்ணே மறந்துட்டு, நல்ல ஒரு பிராமணப் பொண்ணாப் பாத்து காதலிக்கச் சொல்லேன்.நான் போனாப் போறதுன்னு சொல்லி அந்தப் பொண்ணே அவனுக்கு கல்யாணம் பண்ணி வக்கிறேன்.நீ கொஞ்சம் ‘ட்ரை’ பண்ணேன்” என்று சொன்னார் கனபாடிகள்.

“எனக்கே இப்பத் தான் இந்த விஷயமே தெரியும்.மாதவன் நல்ல பையனாச்சே.ஏன் இப்படி சொல்றான்.எதுக்கும் நீங்க தீ£ர விசாரியுங்கோ.அவசரபடாதீங்கோ.நமக்கு இருக்கறது அவன் ஒரு பை யன் தான்.அவன் சந்தோஷம் நமக்கு முக்கியம் இல்லயா சொல்லுங்கோ.இந்த விஷயத்லே நீங்கோ சித்தே பிடிவாதம் பிடிக்காம இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னாள் காமாக்ஷி.

“என்ன சொல்றே காமாக்ஷி.நம்ம பழக்க வழக்கம்வேறே.அவா பழக்க வழக்கம் வேறே.எல்லாம் அவாளை விட வித்தியாசமானதே.தவிர மாதவனுக்கு இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டு , ஒரு கிருஸ்தவ பொண்ணை நம்ம ஆத்திலே வச்சுண்டு,அந்த கிருஸ்தவ பொண்ணை என் மாட்டுப் பொண்ணுன்னு வேறே சொல்லிண்டு,நான் போய் மத்தவா ஆத்துக்கு எல்லாம் போய் அவாளிடம் நேமம்,நிஷ்டை,பூஜை,எல்லாம் பத்தி பேசினா என்னை காரித் துப்ப மாட்டாளா.என்னை ஒரு புரோகி தர்ன்னே மத்த பிராமணா ஒத்துக் கொள்ள மாட்டாளே.எப்படி இந்த கல்யாணத்தை நான் ஒத்து கொள் ள முடியும்.நீயே சொல்லு காமு“ என்று வருத்தத்துடன் கேட்டார் கனபாடிகள்.

”நீங்க சொல்றதும் சா¢ தான்.எதுக்கும் அவசரப் படாம நாம் நிதானமாக யோஜனை பண்ண லாம்ன்னு தான் நான் சொன்னேன்”என்று காமாக்ஷி சொல்லிக் கொண்டு இருக்கும் போது கனபாடிக ள் “இதை நான் நிச்சியம் ஒத்துக் கொள்ளவே முடியாது” என்று சொல்லி விட்டு சந்தியாவந்தனம் பண் ண எழுந்து போய் விட்டார்.

காமாக்ஷிக்கு தன் பையனுக்கு அவன் ஆசைப் பட்ட பெண்ணைக் கல்யாணம்பண்ணி வைக்க முடியவில்லையே என்ற குறை மட்டும் மனதில் நெருடிக் கொண்டு இருந்தது.
அடுத்த நாள் மாதவன் மேரியை சந்தித்த போது “மேரி நான் சந்தேகப் பட்டது போல் நம்ம கல்யாணத்தை என் அப்பா ஒத்துக் கொள்ளலே.அதனால் நான் என்ன சொல்கிறேன்ன்னா,நாம இரு வரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி சந்திச்சு பேசி,மகிழ்ந்து வரலாமா மேரி” என்று கெஞ்சி னான் மாதவன்.

“நிச்சியமா மாதவன்.நீங்க சொல்றது போல் நாம் இருவரும் இப்படியே நேரம் கிடைக்கும் போது பேசி பழகி வராலாம்.நீங்க கவலை படாம இருந்து வாங்க.ஆனா நமக்கு நிச்சியமா கல்யாணம் நடக் கும்ங்க.நீங்க வேனா பாருங்க” என்று சொல்லி அவனுக்கு உறுதி அளித்தாள் மேரி. மாதவன் மேரி சொன்னதைக் கேட்டு வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்தான்.அவன் தன் மனதில் ‘மோ£க்கு பாவம் நம்ம அப்பாவின் பிடிவாதம் தெரியாது.அவ நம்ம வீட்டையும் அவ வீடு போல நினைச்ச்சுண்டு இருக்கா” என்று சொல்லிக் கொண்டான்.

மேரியும் மாதவனும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சந்தித்து வந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.மாதவன் வீட்டில் இருந்தான்.கனபாடிகளுக்கு தன் ஒரே பையன் இப்படி கல்யாணம் பண்ணிக்காம பிரம்மசாரியா இருந்து வருவதைப் பார்க்க விடிக்கவில்லை.அவர் மாதவனைப் பார்த்து “மாதவா,நாங்க காலா காலத்லே கமலாவுக்கு ஒரு கல்யாணத்தே பணி வச்சு ட்டோம்.அவ குடியும் குடிதனத்தமா,அவ குழந்தைகளுடனும்,ஆத்துக்காரரோடமும்.மாமனார், மாமி யாரோடவும் சந்தோஷமா இருந்துண்டு வறா.உனக்கு கல்யாண வயசு ஆயும் நீ ஒரு பிரம்மசாரியேப் போல இருந்துண்டு வறே.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

மாதவனும் காமாஷியும் கனபாடிகள் ஒரு வழியா அந்த கிருஸ்தவ பொண்ணே கல்யாணம் பண்ணீக் கொள்ள சம்மதம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்து அவர் மேலே என்ன சொல்லப் போகிறார் என்று அவர் வாயையயேப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

கண்ணைத் துடைத்துக் கொண்ட கனாபாடிகள்”மாதவா,நீ இப்படி வேணும்ன்னா பண்ணேன்.நீ ஒரு ஐயங்கார் பொண்ணையோ,இல்லே ஒரு தெலுங்கு பிராமணப் பொண்ணையோ, இல்லே ஒரு மாத்துவ பிராமணப் பொண்ணையோப் பாத்து காதல் பண்ணு.நான் போனாப் போறது ன்னு அந்த பொண்ணை இந்த ஆத்து மாட்டுப் பொண்ணா ஏத்துண்டு, உனக்கு கல்யாணத்தே பண்ணீ வக்கிறேன்.அது வரைக்கும் ஒரு பிராமண பொண்னே நீ கல்யாணம் பண்ணீடேன்னு நான் நினைச்சு சந்தோஷப் படுவேன்” என்று சொன்னார்.

உடனே மாதவன் ”நான் அப்படி எல்லாம் இனிமேலே யாரையும் பாத்து காதல் எல்லாம் பண்ண மாட்டேன்.நீங்கோ சம்மதப் பட்டு மேரியே எனக்குக் கல்யாணம் பண்ணீ வச்சா வையுங்கோ. இல்லாட்டா நான் இப்படியே ஒரு பிரம்மசாரியாவே இருந்துண்டு வறேன்” என்று சொன்னதும் காமாக்ஷி “மாதவா,நீ இப்படி பிடிவாதம் பிடிச்சுண்டு இருக்காதே.அப்பா சொல்றது ரொம்ப நியாயமான பேச்சு.நானும் அந்த பிராமணப் பொண்ணே என் மாட்டுப் பொண்ண ஏத்துக்கறேன்.அந்த கிருஸ்தவ பொண்ணு வேணாமே.கொஞ்சம் பெரியவா சொல்றதே கேளுடா” என்று மாதவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.

“பண்ணிண்டா,நான் மேரியேத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.நான் வேறே எந்த பொண்ண யும் இனிமே காதலும் பண்ண மாட்டேன்.கல்யாணமும் பண்ணீக்க மாட்டேன்.நான் ஒரு பிரம்மசா ரியாவே இருந்து வறேன்” என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டு வெளியே போய் விட்டான்.

“நான் இவ்வளவு தழைஞ்சு வந்தும்,என் பேச்சேக் கேக்காம மாதவன் அந்த கிருஸ்தவப் பொண் ணைத் தான் பண்ணிப்பேன்னு ஒட்டாரம் பிடிச்சுண்டு வறானே மாதவன்.அவன் பண்றது சா¢யா சொல்லு காமு” என்று விரக்தியுடன் கேட்டார் கனபாடிகள்.

உடனே காமாக்ஷி “எனக்கும் மாதவன் பண்றது கொஞ்சம் கூடப் பிடிக்கலே.பண்ணீன்டா அந்த கிருஸ்தவப் பொண்ணைத் தான் பண்ணிப்பேன்.இல்லாட்டா நான் ஒரு பிரம்மசாரியாவே இரு ந்துண்டு வருவேன்னு ஒரு கால்லே நிக்கறானே.அந்த பகவான் தான் நாம ரெண்டு பேரும் பட்டு ண்டு வர கஷ்டத்தை அவனுக்கு புரிய வக்கணும்.அவன் மனசே எப்படியாவது மாத்தணும்” என்று சொல்லி வருத்தப் பட்டு,பகவானை வேண்டிக் கொண்டாள்.

ஒரு வாரம் ஆயிற்று.அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும்”அம்மா, அப்பா,நான் ஒரு ‘டெண் டர்’ விஷயமா கொல்கத்தாவுக்கு நாளைக்குக் கிளம்பணும்.நீங்கோ ரெண்டு பேரும் ஜாக்கிறதையா இருந்துண்டு வாங்கோ.நான் திரும்பி வர பத்து நாளுக்கு மேல் ஆகலாம்.கொல்கத்தாவிலே எல்லான் வேலையும் சீக்கிரமாவே முடிக்க மாட்டா” என்று சொன்னான் மாதவன்.

மாதவன் அடுத்த நாள் காலையிலே எழுந்து குளித்து விட்டு,சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு அம்மா கொடுத்த ‘டிபன் காபியை’ குடித்து விட்டு ‘கோரமாண்டல்’ துரித வண்டியில் கொல்கத்தா கிளம்பினான்.

மாதவன் கிளபிப் போய் ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது கனபாடிகளுக்கு ‘போன்’ வந்தது.’போனை ஆன்’ பண்ணிப் பேசினார் கனபாடிகள்.”சாம்பு,மன்னிக்கு திடீர்ன்னு நெஞ்சை ரொம்ப வலிக்கறதுன்னு சொல்றா.இந்த நேரம் பாத்து ரகுராமன் டில்லிக்குப் போய் இருக்கான்.நீ சித்தே எங்காத்துக்கு வந்துட்டுப் போக முடியுமா” என்று கேட்டதும் கனபாடிகள் “சா¢ண்ணா,நான் காமுவே அழைச்சுண்டு உடனே உங்காத்துக்கு வறேன்”என்று சொல்லி விட்டு காமாக்ஷிக்கு அவர் அண்ணா ‘போன்’ பண்ண சமாசாரத்தே சொல்லி விட்டு,அவளையும் அழைத்துக் கொண்டு மயிலா ப்பூரில் இருக்கும் அண்ணா வீட்டுக்குக் கிளமபினார்.

மயிலாப்புர் வந்து கனபாடிகள் அவர் அண்ணா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.கனபாடிகள் ஒரு கால் ‘டாக்ஸியை’ ஏற்பாடு பண்ணிக் கொண்டு,அண்னாவையும் மன்னியையும் காமாக்ஷியையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்தார்.அங்கு இருந்த டாக்டர் பார் வதியை நன்றாக பா¢சோதனைப் பண்ணி விட்டு “இந்த அம்மாவுக்கு ‘ஹார்ட்லெ’ ஒன்னும் ‘ப்ராப் லெம்’ இல்லே.இவங்களுக்கு ரொம்ப ‘காஸ்’ ஆகி இருக்கு” என்று சொல்லி சில மாத்திரைகளைக் கொ டுத்தார்.பார்வதி அந்த மாத்திரைகளை சாப்பிடதும் அவள் நெஞ்சு வலி சா¢யாகி விட்டது.

ஒரு மணி நேரம் ஆனதும் பார்வதி நார்மலாக இருக்கவே கனபாடிகள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு அண்னா வீட்டுக்கு வந்தார்.

அண்ணா,மன்னியுடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,மன்னிக் கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு அண்ணா மன்னியிடம் சொல்லிக் கொண்டு,காமாக்ஷியை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி தன் வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தார்.

அவர் ஏறின ஆட்டோ டிரைவர் ஆட்டோவை ரொம்ப வேகமாக ஓட்டிக் கொண்டு வந்துக் கொ ண்டு இருந்தான்.பல கார்களையும்,’ஸ்கூட்டர்’களையும் ’ஓவர் டேக்’ பண்ணி வந்துக் கொண்டு இருந் தான்.’சிவப்பு சிக்னல்’ விழும் போது ‘சடன் ப்ரேக்’ போட்டான்.அந்த டிரைவர்.கனபாடிகளுக்கு அந்த ஆட்டோ டிரைவர் ஓட்டி வந்தது பயத்தைக் கொடுத்தது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *