பாத்தேளா, அது நடந்துடுத்தது…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 4,044 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

கனபாடிகள் அந்த ஆடோ டிரைவரைப் பார்த்து “இதோ பாருப்பா டிரைவர் எனக்கு ஒன்னும் அவசரமில்லே.நீ நிதானமா ஆட்டோவை ஓட்டிண்டு வா. ஏன் இவ்வளவு வேகமா உன் ஆட்டோவை ஓட்டறெ.சித்தே மெதுவாத் தான் ஓட்டேன்”என்று சொல்லிக் கொண்டே வந்தார்.ஆட்டோ டிரைவரோ ஒரு வயசுப் பையன்.அவன் கனபாடிகளைப் பார்த்து “பயப்படாதே சாமி. உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆவாது” என்று சொல்லி முடிக்கக் கூட இல்லை,அதற்குள் ஒரு ‘பஸ்’ பின்னாலே போய் கொண்டு இருந்த இவர்கள் ஆட்டோ,பஸ் டிரைவர் திடீரென்று ‘பிரேக்’ போட்டு நிறுத்தவே,பஸ்ஸூக்கு மிக நெருக்கமாக வந்து கிட்டு இருந்த ஆட்டோவையும் ‘சடன் பிரேக்’ போட்டு நிறுத்த வேண்டியதாய் போயிற்று அந்த ஆட்டோ டிரைவருக்கு.

பஸ்ஸில் மோத இரண்டு அங்குலம் இடை வெளி தான் இருந்தது.கோவம் அடைந்த ஆட்டோ டிரைவர் பஸ் டிரைவரை திட்டிக் கொண்டே,ஆட்டோவை விட்டு கிழே இறங்கிப் போய் அந்த பஸ் டிரைவா¢டம் சண்டை போடப் போனான்.இதற்கிடையில் பின்னாலே வந்த ஒரு தண்ணி லாரி ஆட் டோ நிறுத்தினதை சமயத்தில் கவனிக்காததால்,’ பிரேக்’ போட முடியாமல் ஆட்டோ மேலே வேகமாக மோதி விட்டான்.

பஸ்ஸூக்கும் லாரிக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட ஆட்டோ நசுங்கி அப்பளம் போல் நொறு ங்கி விட்டது.கனபாடிகளுக்கும்,அவர் மனைவிக்கும்,உடலில் பலமாக அடிப்பட்டு,இருவரும் ஆட் டோவை விட்டு வெளியே வந்து விழுந்தார்கள்.இருவருக்கும் இடுப்புக்கு கீழே பலத்த காயம்.

‘ஸ்கூட்டரி’ல் போய்க் கொண்டு இருந்த ஒரு மனிதாபிமானம் படைத்த பாதர்’ உடனே ‘ஸ்கூட்டரை’ எதிரில் இருந்த வெத்திலை பாக்கு கடையில் நிறுத்தி,அதைப் பூட்டி விட்டு,அந்த கடை க்காரரை தன் ‘ஸ்கூட்டரை’ கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு,அடிப்பட்ட இரண்டு பேரையும்,கனபாடிகள் பக்கத்திலே விழுந்துக் கிடந்த ‘ஹாண்ட் பாக்கை’யும் கையிலெ எடுத்துக் கொ ண்டு,அப்போது காலியாக வந்துக் கொண்டு இருந்த ஒரு ‘கால் டாக்சி’ யிலே இருவரையும் ஏற்றிக் கொண்டு வந்து, பக்கத்திலே இருந்த ‘இஸபெல்ஸ் ஹாஸ்பிடலில்’ கொண்டு வந்து சேர்த்தார்.

‘சீப் டாக்டரிடம்’ ரோடில் நடந்தவற்றை எல்லாம் சொல்லி “டாக்டர் என் கிட்டே இப்போ ரெண் டாயிரம் ரூபாய் இருக்கு.இதை வச்சுக் கிட்டு நீங்க இவங்களுக்கு சிகிச்சை ஆரம்பியுங்க.நான் இவங்க உறவுக்காரர்களுக்கு விஷயத்தை சொல்லி மீதி பணம் கட்ட ஏற்பாடு பண்றேன்,ப்ளீஸ்” என்று கெஞ்சி னார் அந்த ‘பாதர்’.

டாக்டரும் இந்த ‘பாதரின்’ மனிதாபிமானத்தை வியந்து “சரி நான் இவங்களுக்கு வைத்தியம் ஆரம்பிச்சு விடறேன்.நீங்க இவங்க உறவுக்காரர்களுக்கு போன் பண்ணி, பணத்துக்கு ஏற்பாடு பண் ணுங்க.இவங்க ரெண்டு பேருக்கும் உடனே ரத்தம் செலுத்தி ஆகணும்” என்று சொல்லி விட்டு கன பாடிகளையும்,அவர் மனைவியையும் ‘வீல் சேரில்‘ ‘எமர்கென்சி’க்கு அழைத்துப் போனார்.

இருவரும் மயக்கமாய் படுத்துக் கொண்டு இருந்தார்கள்.இருவர் உடம்பில் இருந்தும் நிறைய ரத்தம் கசிந்துக் கொண்டு இருந்தது.இருவருக்கும் உடனே ரத்தம் தேவைப் பட்டது.

‘எமர்ஜென்ஸி’யிலே இருந்த டாகடர் முதலில் காமாக்ஷ¢ ரத்த ‘க்ரூப்பை’ சோதனைப் பண்ணீ கண்டு பிடித்தார்.காமாக்ஷ¢க்கு O+ரத்தம் தேவைப் பட்டது.உடனே அந்த டாக்டர் தாங்கள் நடத்தி வரும் ‘ரத்த பாங்குக்கு’ போன் பண்ணி உடனே O+ ரத்தம் கொண்டு வருமாறு சொன்னார்.

ஆனால் அந்த ‘ரத்த பாங்கின்’ ‘இன்சார்ஜ் “சார், இப்போ தான் ஒரு பேஷண்டுக்கு ‘ஹார்ட் சர்ஜரின்னு’ நடக்க்கப் போவுதுன்னு சொல்லி,மூனு பாட்டில் O+ ரத்தம் வேணுன்னு கேட்டாங்க.நான் குடுத்து அனுப்பினேன்.’ஸ்டோரில்’ O+ ரத்தம் இப்போ ‘ஸ்டாக்’ இல்லே.நான் வேறே ‘ப்ளட் பாங்கு’ க்குப் போன் பண்ணி இருக்கேன் சார்.வந்ததும் நான் உடனே உங்களுக்கு அனுப்பறேன் சார்” என்று சொன்னார் அந்த ‘ரத்த பாங்கு இன்சார்ஜ்’.

டாகடர்ரும் ‘ரத்த பாங்கு இன்சார்ஜும்’ பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டா ‘பாதர்’,உடனே “டாகடர் என் ப்ளட் குரூப் ரத்தம் O+ ரத்தம் தான்.நீங்க உடனே எடுத்துக்குங்க” என்று சொன்ன வுடன் டாக்டர் உடனே ‘பாதரி’ன் ரத்தத்தை ‘டெஸ்ட்’ பண்ணி அது O+ தான் என்று தொ¢ந்ததும் அவா¢டம் இருந்து அவர் ரத்தத்தை எடுத்து காமாக்ஷ¢க்கு ரத்தத்தை செலுத்த ஆரம்பித்தார்.

கனபாடிகளுக்கும் உடனடியாக ரத்தம் தேவைப் பட்டதால் அவா¢ன் ரத்ததையும் ‘டெஸ்ட்’ பண்ணினார் டாக்டர்.கனபாடிகள் ‘ரத்த க்ரூப்’ A+ என்று தொ¢ய வந்தது.
உடனே அங்கு இருந்த ‘நர்ஸ்’ “டாக்டர் என் ரத்தமும் A+ தான்.நீங்க ‘டிலே’ பண்ணாம என் ரத்தத்தை அவங்களுக்கு செலுத்துங்க.நான் ரத்தம் தரேன்” என்று சொல்லவே டாக்டர் நர்ஸின் ரத்தத் தை ‘டெஸ்ட்’ பண்ணி அந்த ரத்தம் A+ என்பதை ஊர்ஜிதம் பண்ணி விட்டு,’நர்ஸி’ன் ரத்தத்தை உடனே கனபாடிகளுக்கு செலுத்த ஆரம்பித்தார்.
ரத்தம் இருவர் உடம்பிலும் ஏறவே ரெண்டு மணி நேரம் கழித்து இருவருக்கும் மயக்கம் தெளி ந்தது.கண்ணைத் திறந்துப் பார்த்தார்கள் இருவரும்.
இதற்கிடையில் சாலையில் கனபாடிகள் பக்கத்தில் கிடைத்த ‘ஹாண்ட் பேக்கி’ல் ‘ஐயரின் உறவுக்காரங்க யாருடைய விலாசமாவது கிடைக்குதா’ என்று தேடிப் பார்த்தார் ‘பாதர்’.
‘என் பையன் பேர் மாதவன்.டெலிபோன் நம்பர்:9988765456.எல்லா அவசரதிற்கும் அவனு க்கு போன் பண்ணவும்’ என்கிற காகிதம் கிடைத்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்ட பாதர்.அந்த நம்பருக்கு உடனே ‘போன்’ பண்ணினார் பாதர்.

ஆனால் அந்த நம்பா¢ல் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.பல தடவை முயறசி பண்ணியும் பலனில்லாது போகவே,மனம் உடைந்துப் போனா ‘பாதர்’.
சற்று நேரம் ஆனதும் ‘ஹாண்ட் பாக்கில்’ இருந்த மற்ற காகிதங்களைத் தேடினார் ‘பாதர்’.நல்ல வேளையாக கனபாடிகள் தனக்கும் தன் மனைவிக்கும் எடுத்து இருந்த ‘இன்சூரன்ஸ்’ பாலிஸியின் ‘ஜெராக்ஸ்’ காப்பி கிடைத்தது. அதை உடனே ‘சீப் டாக்டரிடம்’ காட்டினார் பாதர்.

”இது போதும் ‘பாதர்’.நான் உடனே ‘இன்சூரன்ஸ்காரங்க’ கிட்டே ‘போனில் பேசி மேலே ஆக வேண்டியதை கவனிக்கிறேன்.ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு” என்று சொல்லி அந்த இன்சூரன்ஸ் கம்பனிக்கு ‘போன்’ பண்ணி நடந்தவற்றை எல்லாம் சொல்லி, சிகிச்சை பண்ண அனுமதி வாங்கி விட்டார் அந்த ‘சீப் டாகடர்’.

‘சீப் டாகடரை’ பார்த்து “டாகடர் என் பேர் ஜோஸப்.நான் ‘ஹோலி ஏஞ்சஸ் சர்ச்சிலே பாதரா’ இருக்கேன்.இந்தாங்க அந்த ஐயரின் ‘ஹாண்ட் பாக்’.இதிலே அவர் செல் ‘போன்’ இருக்குது. உங்க ளுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’.நான் போய் வறேன் டாக்டர்” என்று சொல்லி விட்டு,ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு தான் ‘ஸ்கூட்டரை’ வைத்து விட்டு வந்த இடத்திற்குப் போனார் அந்த ‘பாதர்’.

கனபாடிகள் மெல்லிய குரலில் “நான் இப்போ எங்கே இருக்கேன்.என் காமாக்ஷ¢ எங்கே… “ என்று மெல்ல முனகினார்.உடனே அங்கு இருந்த நர்ஸ் “நீங்க இப்போ ‘இஸபெல்ஸ் ஹாஸ்பிடல்லெ ‘எமர்ஜென்ஸி செக்ஷன்லே’ இருக்கீங்க.உங்க மனைவியும் இங்கே பக்கத்து பெட்லே தான் இருக்கா ங்க” என்று சொல்லி அவருக்கும் காமாக்ஷ¢க்கும் குடிக்க கொஞ்சம் ‘ஜூஸ்’ கொடுத்தாள்.

இருவரும் ‘நர்ஸ்’ கொடுத்த ‘ஜூஸை’ மெல்ல குடித்தார்கள்.

உடனே டாக்டரைப் கனபாடிகளைப் பார்த்து “மிஸ்டர் ஐயர்.நீங்களும் உங்க ‘வைப்பும்’ஒரு சாலை விபத்லே அடிப்பட்டு கீழே விழுந்து இருங்க்கிங்க.அந்த வழியே போய்க் கொண்டு இருந்த ஒரு ‘பாதர்’ நான் ஒரு ‘கால் டாக்ஸி’யிலே உங்க ரெண்டு பேரையும் இங்கே கொண்டு வந்து சேர்த்தார். அவர் தன் கையிலே இருந்த ரெண்டாயிரம் ரூபாயை என் கிட்டேக் கொடுத்து உடனே வைத்தியத்தே ஆரம்பிக்கச் சொன்னார்.உங்க வைப்புக்கும்,உங்களுக்கும் உடனே ரத்த செலுத்த வேண்டியதாய் இருந்திச்சு.எங்க ‘ப்ளட் பாங்கிலே’ உங்க ‘வைப்’ ’க்ரூப் ரத்தம்’ தீந்துப் போய் இருந்திச்சு.நல்ல வேளையா ‘பாதர்’ ரத்தம் உங்க ‘வைப்’ ‘ரத்த ‘க்ரூப்’ பாவே இருந்ததாலே,நாங்க உடனே அவர் ரத் ததை உங்க ‘வைப்பு’க்கு ஏத்தி அவங்களே பிழைக்க வச்சு இருக்கோம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவர் ‘செல் போன்’ அடிக்கவே அவர் ‘போனை ஆன்’ பண் ணிப் பேசினார்.

கனபாடிகள் “டாகடர்,அந்த நல்ல மனசு உள்ள ‘பாதர்’ பேர் என்ன” என்று கேட்டதும் டாகடர் “அவர் பேர் ஜோஸப்.அவர் ‘ஹோலி ஏஞ்சல்ஸ் சர்ச்சிலே’ ஒரு ‘பாதரா’ இருக்கேன்னு சொன்னார்” என்று சொல்லி விட்டு அந்த டாக்டர் “மிஸ்டர் ஐயர்,உங்களுக்கும் ரத்தம் ஏத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிச்சி.நல்ல வேளையா இங்கே நிக்கற ‘நர்ஸின்’ ரத்தம் உங்க ரத்த ‘க்ரூப்’பாக இருந்ததால், அவங்க ரத்தத்தை உங்களுக்கு ஏத்தி உங்களே பிழைக்க வச்சு இருக்கோம்.அந்த கர்த்தர் தான் எங்க ளுக்கு இந்த பொ¢ய உதவியே பண்ண வச்சு அருள் புரிஞ்சி இருக்கார்.இல்லாட்டா என்னலே உங்க ரெண்டு பேரையும் காப்பாத்தியே இருக்க முடியாது” என்று சொல்லி விட்டு,அவர் கழுத்திலே தொங்கி க் கொண்டு இருந்த சிலுவையை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

கொஞ்ச நேறம் ஆனதும் டாக்டர் “மிஸ்டர் ஐயர்,’அந்த பாதர்’ உங்க ‘ஹாண்ட் பாக்கை’ப் பார் த்து உங்க பையன் நம்பருக்குப் பல தடவை ‘போன்’ பண்ணிப் பார்த்தார்.அவருக்கு பதில் கிடை க்கலே.நல்ல வேளையா, அவருக்கு உங்க ‘ஹாண்ட் பாக்லே’ நீங்க எடுத்து இருந்த ‘இன்சூரன்ஸ் பாலிஸி’ ‘ஜெராக்ஸ்’ ‘காப்பி’ கிடைச்சுது.நான் உடனே அந்த ‘இன்சூரன்ஸ்’ கமபனிக்கு ‘போன்’ பண்ணீ உங்க ரெண்டு பேருக்கும் வைத்தியம் பண்ண ‘பர்மிஷன்’ வாங்கிக் கிட்டு வைத்தியம் பண் ண ஆரம்பிச்சு இருக்கேன்” என்று சொன்னார்.

டாக்டர் சொன்னதை கேட்டார்கள் கனபாடிகளும் காமாக்ஷ¢யும்.“காமாக்ஷ¢,பகவான் தான் நம்ப பக்கத்திலே இருந்து இருக்காரு காமாக்ஷ¢” என்று சொல்லும் போதே அவர் குலுங்கி குலுங்கி அழுதார்.

‘நர்ஸ்’ கொஞ்சம் தயிர் சாதத்தை இருவர் வாயிலும் ஊட்டி,குடிக்க கொஞ்சம் தண்ணீரும் கொடுதாள்.இருவரும் ‘நர்ஸ்’ ஊட்டின தயிர் சாதத்தை சாப்பிட்டு விட்டு,அவள் கொடுத்த தண்ணீ ரையும் குடித்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் டாக்டர் “மிஸ்டர் ஐயர்,உங்க வலது காலிலும்,இடது கையிலேயு ம்,உங்க ‘வைப்’ இடது கையிலும்,வலது காலிலும் எலும்பு முறிவு இருக்குதுன்னு நாங்க உங்க ரெ ண்டு பேர் உடம்பையும் ‘எக்ஸ்ரே’ எடுத்து பாத்ததிலே தொ¢ஞ்சிச்சி.உங்க ரெண்டு பேருக்கும் நாங்க ‘ஆபரேஷன்’ பண்ணீயே ஆகணும்” என்று சொன்னதும்,கனபாடிகள் ”எங்க ரெண்டு பேர் உடம்பிலே யும் எலும்பு முறிவு இருக்கா.பகவானே இது என்ன சோதனை.எல்லாம் எங்க போதாத காலம்.எங்க ரெ ண்டு பேருக்கும் இன்னும் மாவுக் கட்டு வேறே போடணுமா” என்று சொல்லி அலுத்துக் கொண்டு இருந்தார்.

டாகடர் இருவரையும் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப் போனார்.

‘ஆபரேஷன் தியேட்டரில்’ டாக்டர் இருவருக்கும் மயக்க மருந்துக் கொடுத்து விட்டு, ரெண்டு பேருடைய எலும்பு முறிவுக்கும்,நாலு மணி நேரம் ஆபரேஷன் பண்ணீ விட்டு,கனபாடிகள் இடது கையிலும்,வலது காலிலும்,காமாக்ஷ¢யின் இடது கையிலும்,வலது காலிலும் மாவுப் கட்டு போட்டு ‘வார் ட்டில்’ கொண்டு வந்து விட்டார்.

மூன்று மணி நேரம் கழித்து இருவருக்கும் மயக்கம் தெளிந்தவுடன்,அங்கு இருந்த ‘நர்ஸ்’ இருவருக்கும் குடிக்க கொஞ்சம் ஜூஸ் கொடுத்தாள்.

ஜூஸை குடித்து முடித்து ‘க்லாசை’ ‘நர்ஸ்’ கையிலே கொடுத்தார் கனபாடிகள்.’நர்ஸ்’ போனதும் “என்ன இது காமு,நம்ம ரெண்டு கைலேயும், கால்லேயும் மாவுக் கட்டுப் போட்டு இருக்கா.இந்த மாவுக் கட்டுப் பிரிக்கவே ஒரு மாசத்துக்கு மேலேயே ஆயிடுமே.அது வரைக்கும் நான் குளிக்காம,எந்த நேம நிஷ்டையும் பண்ணாம வெளிலே கிடைக்கற ஆகாரத்தை சாப்பிண்டு வரணுமே.என் ஆசாரம் எல்லாம் என்ன ஆறது.என் உடம்பிலேயும்,உன் உடம்பிலேயும் ஒரு கிருஸ்தவாக் குடுத்த ரத்தம் தானே ஓடிண் டு இருக்கு.நான் மத்தவாளுக்கு எல்லாம் நேமம் நிஷ்டைன்னு எல்லாம் சொல்லிண்டு வந்தேனே, இப்போ நானே…”என்று சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர் வந்தது.

உடனே காமாக்ஷ¢ “அழாதீங்கோ.என்ன பண்றது.எல்லாம் நம்ம போறாத வேளை தான்” என்று சொல்லி தன் கணவரை தேற்றீனாள்.

அடுத்த நாள் சாயங்காலம் மாதவன் அப்பாவுக்கு போன் பண்ணினான்.கனபாடிகள் நடந்த வற்றை எல்லாம் விவரமாகச் சொல்லி அவனை எவ்வளவு சீக்கிரம் சென்னைக்கு வர முடியுமோ அவ் வளவு சீக்கிரம் வரும்படி சொன்னார்.

மாதவன் தான் கொண்டு வந்து இருந்த ‘டெண்டர் பேப்பர்களை’ கொடுத்து விட்டு ‘ஆபீஸ்’ வேலைகளை முடித்து விட்டு மாதவன் மூன்று நாள் கழித்து சென்னைக்கு வந்தான்.சென்ட்ரல் ஸ்டே ஷனில் இருந்து ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு ‘இஸபெல்ஸ் ஹாஸ்பிடலு’க்கு வந்தான்.

நேரே ஹாஸ்பிடலுக்கு வந்து அப்பா அம்மாவை பார்த்தான்.அப்பா,அம்மா ரெண்டு பேரும் மாவுக் கட்டுடன் படுத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து அழுதான் மாதவன்.கொஞ்ச நேரம் ஆன தும் மாதவன் “அப்பா,உங்களுக்கும்,அம்மாவுக்கும் ரத்தம் செலுத்தி காப்பாத்தின டாக்டரையும்,உங்க ரெண்டு பேருக்கும் எலும்பு ‘ஆபரேஷன்’ பண்ண டாக்டரையும் நான் ‘தாங்க்’ பண்ணிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு ‘ஹாஸ்பிடலில்’ விசாரித்து அந்த ரெண்டு டாக்டர்களையும் ‘தாங்க்’ பண்ணி விட்டு வந்தான்.

“அப்பா,உங்களே காப்பாத்தின ‘பாதர்’ பேர் என்னப்பா” என்று மாதவன் கேட்டதும் கனபாடிக ள் அந்த ‘பாதர்’ பேர்,அவர் வேலை செஞ்சு வந்த ‘சர்ச்’ விவரத்தைச் சொன்னார்.

கொஞ்ச நேரம் ஆனதும் மாதவன் “அப்பா,நான் ஒரு மணி நேரத்துக்குள்ளே அந்த ‘சர்சு’க்குப் போய் அந்த ‘பாதர்’ கிட்டே ரெண்டாயிர ரூபாயை குடுத்துட்டு அவரை ரொம்ப ‘தாங்க்’ பண்ணட்டு வறேன்” என்று சொல்லி விட்டு மாதவன் ‘பாதரை’ப் பார்த்து ரெண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு அவரை ரொம்ப ‘தாங்க்’ பண்ணி விட்டு வந்தான்.

அப்பா,அம்மா உடம்பு கொஞ்சம் சுமாராக ஆனதும்,டாக்டர் ‘பர்மிஷன்’ கொடுத்ததும்,அப்பா அம்மாவை ‘டிஸ்சார்ஜ்’ பண்ணிக் கொண்டு இருவரையும் ரெண்டு ‘வீல் சேரில்’ ‘ஹாஸ்பிடல் ஆம்பு லன்ஸில்’ அழைத்து வந்து,இருவரையும் கைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வந்து,வீட்டில் இருந்த ‘பெட்டில்’ படுக்க வைத்தான்.’ஹாஸ்பிடல் ஆம்புலன்சுக்கு’ கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு த்து அனுப்பினான்.பிறகு மாதவன் அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் சூடா ‘காபி’ப் போட்டுக் கொ டுத்தான்.இரண்டு பேர் பக்கத்திலேயும் உட்கார்ந்துக் கொண்டு அவர்களுக்கு ஆதறவாகப் பேசிக் கொ ண்டு இருந்தான் மாதவன்.

அவர்கள் இருவருக்கும் காலை சாப்பாடு,மதியம் டிபன்,இரவு டிபன் எல்லாம் பக்கத்தில் இரு ந்த ‘மெஸ்’ஸில் ஏற்பாடு பண்ணினான் மாதவன்.அடுத்த நாளே மாதவன் தன் கம்பனி முதலாளி ளியை சந்த்தித்து அப்பா அம்மாவுக்கு நடந்த ‘ரோடு ஆகிஸிடெண்டை’ பத்தி சொல்லி, இப்போது அவர்கள் கண்டிஷனையும் சொல்லி ஒரு மாச லீவு வேண்டும் என்று கேட்டதும் அவர் “அப்படியா, உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கு ‘ரோடு ஆக்ஸ்டெண்ட்’ ஆயிடுத்தா.கேக்கவே ரொம்ப கஷ்டமா இரு க்கு.நீ லீவு எடுத்துண்டு, அவாளை நன்னா கவனிச்சுண்டு வா” என்று சொல்லி மாதவனுக்கு லீவு கொடுத்து அனுப்பினார் அந்த கம்பனி முதலாளி.

கனபாடிகள் “நான் அந்த ஆட்டோ டிரைவர் கிட்டே ‘வேகமா போகாதே,வேகமா போகாதே’ ன்னு முட்டிண்டேன்.அவன் கேக்காம ஆட்டோவை வேகமா ஓட்டிண்டு வந்து எங்க ரெண்டு பேரை யும் ஒரு பஸ்ஸூக்கும்,தண்ணி லாரிக்கும் நடுவில மாட்டி வச்சு ‘ஆக்ஸிடெண்ட்’ பண்ணி வச்சுட்டு, ஆடோவை விட்டு கீழே இறங்கிப் போய் அந்த ‘பஸ்’ டிரைவருடன் சன்டை போட போயிட்டான். எல்லாம் எங்க ரெண்டு பேருடைய போறாத காலம்.இப்படி ரெண்டு பேரும் கையிலும் காலிலும் மாவுக் கட்டோடு படுத்துண்டு இருக்கும்” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

உடனே “ஆமாம்ப்பா,எது நடக்குணுமோ அது நடந்தே தான் தீரும்.அது வரைக்கும் அந்த பக வான் புண்ணீயத்தாலே, உங்க ரெண்டு பேருடைய உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லாம நீங்க ரெண்டு பேரும் பிழைச்சி எழுந்து வந்து இருக்கேளே.அது போதும் எனக்கு” என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் மாதவன்.மாதவன் வீட்டிலே இருந்து இருவருக்கும் எல்லா உதவிகளையும் பண்ணீ வந்தான்.

“இந்த மாதிரி குளிக்காம,தோச்ச துணிகளே போட்டுக்காம,பகவானுக்கு ஒரு மந்திரம் கூட சொல்லாம,பூஜையும் பண்ணாம,நான் சாப்பிடறதை நினைச்சா,நாம பாழும் இந்த உசிரே உடம்ப்லே வச்சுண்டு வறத் தானே,இப்படி யாரோ பண்ணி தர சாப்பாட்டேயும் ‘டிபனை’யும் சாப்பிட்டிண்டு வறோம்.நம்ப ரெண்டு பேருடைய உசிரும் ஒரு கிருஸ்துவ ’பாதரும்,ஒரு கிருஸ்தவ ‘நர்ஸூம்’ குடுத்த ரத்தத்தில் தானே பிழைச்சு இருக்கு.எல்லார் உடம்பிலேயும் ஓடற ரத்தம் ஒன்னு தான்.ரத்தத்துக்கு ஜாதி மதம் இல்லையே.நான் ஒரு சிரேஷ்டமான பிராமணன் என்கிற ‘பெருமிதத்லே’வாழ்ந்து வந்துக் கொண்டு,மத்த ஜாதிக்காராளைக் கேவலம்ன்னு நான் நினைச்சிண்டு வந்து இருக்கேன்.நான் பண்ண து ரொம்ப தப்புன்னு இப்போ தான் எனக்கு நன்னா புரியறது காமாக்ஷ¢” என்று சொல்லி தன் தவறை உணர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார் கனபாடிகள்.

”நீங்க அழாதீங்கோ” என்று தன் கணவனுக்கு ஆறுதல் சொன்னாள் காமாக்ஷ¢.மாதவனும் “ஆமாம்ப்பா நீங்கோ அழாதீங்கோப்பா” என்று அப்பாவுக்குத் தேத்தறவு சொன்னான்.
ஒரு மாசம் ஆனதும் மாதவன் தன் பெற்றோர்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போய் டாக்டரிடம் காட்டினான்.

ஹாஸ்பிடலில் கட்டை பிரித்து விட்டு,‘எக்ஸ்ரே’ எடுத்துப் பார்த்து ‘செக் அப்’ பண்ணி விட்டு “மிஸ்டர் மாதவன்,அப்பாவுக்கு எலும்புகள் எல்லாம் சரியா சேரலே.இந்த வயசான காலத்திலே அவரு க்கு இன்னொரு ஆபரேஷன் பண்றது ரொம்ப சரியே இல்லே.இனிமேஅவர் காலை அதிகம் தரையில் ஊனாம ஒரு ‘வாக்கரை’ வச்சுக் கிட்டு மெல்ல நடந்து வரணும்.உங்க அம்மா தலையில் நரம்புகள் ரொ ம்ப பாதிக்கப்பட்டு இருக்கு.அவங்க முதுகுத் தண்டு பலம் இழந்து இருக்கு.அதனாலே அவங்க இனி மே அவள் அதிக நேரம் நிக்கக் கூடாது அவங்க ‘வீல் சேரில்’ தான் இருந்து வரணும்.ரொம்ப ‘வெயி ட்டும்’ தூக்கக் கூடாது” என்று சொன்னார் அந்த டாக்டர்.

டாக்டர் சொன்னத்தை கேட்டு திடுக்கிட்டு போனார்கள் கனபடிகளும்,காமாக்ஷ¢யும்,மாதவனும்.

ஹாஸ்பிடலில் இருந்து அப்பா அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்தான் மாதவன் காமாக்ஷ¢க்கும் கனபாடிகளுக்கும் வீடே கதி என்று ஆகி விட்டது.அப்பா அம்மாவுக்கு அந்த மெஸ் சாப்பாடி பிடிக்கவே இல்லை என்று சொன்னதால் மாதவன்,தனக்கு தொ¢ந்த ஒருவா¢டம் சொல் லி.சமையலுக்கு ஒரு சமையல் கார மாமியை ஏற்பாடு பண்ணீனான்.

சமையல் கார மாமி பண்ணின சாப்பாட்டை சந்தோஷப் பட்டு சாப்பிட்டு வந்தார்கள் இருவரும்.

ஒரு வாரம் ஆகி விட்டது.சற்று நேரம் கழித்து காமாக்ஷ¢ “இதோ பாருங்கோ,அந்த ‘பாதரை’ நம்ம ஆத்துக்கு ஒரு நாள் வரச் சொல்லுங்கோ.நாம அவருக்கு சாதம் போட்டு அவருக்கு வேஷ்டியும், அவர் மனைவிக்கு ஒரு நல்ல பட்டு புடவை வாங்கிக் கொடுத்து,ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல ‘பா¢சா’ வாங்கித் தந்து நம்ம நன்றியை தொ¢விக்கலாம்.அவர் பண்ண உதவியாலே தான்,நாம ரெண்டு பேரும் இப்போ உசிரோடு இருந்து வறோம் இல்லையா”என்று கேட்டாள்.உடனே “இதோ நான் போனிலே அவரையும் அவர் சம்சாரத்தையும் சாப்பிட கூப்பிடறேன்” என்று சொன்னார் சொன்னார் கனபாடிகள் அம்மா சொன்ன மாதிரி மாதவன் ஒரு நல்ல வேஷ்டியும்,ஒரு பட்டுப் புடவையும், ஒரு ‘கிப்டை’யும் வாங்கிக் கொண்டு வந்தான்.

கனபாடிகள் அழைத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ‘பாதர்’ அவர் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கனபாடிகள் வீட்டுக்கு சாப்பிட வர ஒத்துக் கொண்டார். ஆபீஸூக்குப் போய் விட்டு ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாய் சொல்லி விட்டுப் வெளியே போனான் மாதவன்.

காமாக்ஷ¢ சமையல் கார மாமியைக் கூப்பிட்டு “இன்னேக்கு வடை பாயசந்த்துடன்,ரெண்டு கறி சாம்பார், ரசம்,பொரியல் எல்லாம் பண்ணுங்கோ.ஆத்லே சாப்பிட ஒரு ‘பாதரும்’ அவர் சம்சாரமும் வறா” என்று சொன்னதும் சமையல் கார மாமி” பேஷாப் பண்ணீடறேண் மாமி.நீங்கீ கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ” என்று சொல்லி சமையலைக் கவனிக்கப் போனாள்.

மணீ பன்னண்டு இருக்கும்.‘காலிங்க் பெல்’ அடித்தது.எழுந்து மெதுவாக வாக்கரை ஊன்றிக் கொண்டு மெல்ல நடந்துப் போய் கனபாடிகள் வாசல் கதவை திறந்தார்.பாதரு’டன், ஒரு பாட்டியும், தழைய தழைய பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு தங்க சிலையைப் போல ஒரு பெண்ணும் நின் றுக் கொண்டு இருந்தார்கள்
”வாங்கோ, வாங்கோ” என்று சொல்லி அவர்களை வரவேற்று ஹாலில் இருந்த சோபாவில் உட் காரச் சொன்னார் கனபாடிகள்.

கனபாடிகளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அந்த பெண்ணையேப் பார்த்துக் கொண்டு இருந்தார்.கொஞ்ச நேரம் ஆனதும் கனபாடிகள் அந்தப் பொண்ணைப் பார்த்து ”நீயாம்மா வந்து இருக்கே,இது உன் அப்பாவா” என்று கேட்டு விட்டு ‘பாதரை’ப் பார்த்து “இந்தப் பொண்ணு உங்க பொண்ணா” என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டார்.

காமாக்ஷ¢யும் அந்தப் பொண்ணே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.உடனே”பாதர்’ “ஆமாங்க,இவ என் பொண்ணுங்க.இவ பேர் மேரிங்க”என்று சொன்னார்.
கொஞ்ச நேரம் ஆனதும் கனபாடிகள் ”நீங்க ரெண்டு பேரும் தான் உங்க ரத்தத்தை குடுத்து, எங்க ரெண்டு பேருடைய உயிரையும் காப்பாத்தின தெய்வங்கள்.உங்க மனைவி உங்க கூட வரலை யா.இந்த அம்மா உங்க அம்மாவா ‘பாதர்” என்று கேட்டார் கனபாடிகள்.

உள்ளே வந்த ‘பாதர்’ மெல்ல சோபாவில் தன் அம்மாவையும் உட்கார வைத்து விட்டு, அப்புற ம்,அவரும்,அவர் மகளும் உட்கார்ந்துக் கொண்டார்கள்.காமாக்ஷ¢ “ஏன்னா,இந்த பொண்ணு இவ்வளவு கலரா அழகா,ஒரு பிராமணப் பொண்ணு மாதிரி இருக்காளே” என்று ஆச்சரியத்துடன் சொன்னாள்.

உடனே ‘பாதரின் அம்மா “நீங்க சொல்றது ரொம்ப நிஜங்க.இன்னை வரைக்கும் இவ நாங்க சாப்பிடற எந்த ‘நான் வெஜ் அயிட்டம்’ சாப்பிறதே இல்லீங்க..ஐயருங்க மாதிரி காய்கறி சாப்பாடு தான் சாப்பிட்டு வறா.நான் கூட என் பெயன் கிட்டே தமாஷா ‘ஜோ,மேரி ஒரு வேளை போன பிறவியிலே ஒரு ஐயர் குடும்பத்திலே பொறந்து இருப்பான்னு நினைக்கிறேன்’ன்னு அடிக்கடி சொல்லுவேன்” என் று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

பிறகு ‘பாதர்’ மெதுவாக ”சார்.என் மனைவி இறந்து பல வருஷங்க ஆயிடிச்சுங்க.இவ என் ஒரே பெண் மேரி.மேரிக்கு எட்டு வயசா இருக்கும் போது ஒரு சாலை விபத்து நடந்திச்சு.அதிலே எனக்கும் என் மனைவிக்கும் பலத்த அடிப்பட்டு விட்டதுங்க.அதிலே இறந்து போயிட்டா அவ” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் ‘பாதர்’.

சற்று நேரம் கழித்து “மேரி நர்ஸ் கோர்ஸ் படிச்சுட்டு ஒரு நர்ஸா வேலை செஞ்சுக் கிட்டு வறா. இவளுக்கு அம்மா இல்லாத குறை தொ¢யாம இது நாள் வரை நான் இவளை வளர்த்து வந்து இருக்கே ன்.ஆனா இப்போ……” என்று சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர் முட்டியது.

“சொல்லுங்கோ பாதர்,ஏன் இப்போ என்ன ஆச்சு” என்று கேட்டுப் பதறிப் போனார் கனபாடிகள்.

‘இவ என் பெண் மேரி’என்று பேச்சு ஹாலில் கேட்கவே உள்ளே நுழைய இருந்த மாதவன் சட்டென்று தன்னை பின்னுக்கு இழுத்துக் கொண்டு ஹாலில் பேசும் பேச்சை வாசலில் இருந்துக் கொண்டு கூர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

கைகுட்டையை எடுத்து தன் கண்களை துடைத்துக் கொண்டு “ஒன்னுமில்லே சார்.இவளை ஒரு ராஜாத்தி போல் நானும் என் அம்மாவும் வளத்துக் கிட்டு வந்து இருக்கோம் இந்த கல்யாணம் பண்ற விஷயத்திலும் அவ யாரைக் காதலிக்கிறாளோ,அந்த பையன் எந்த ஜாதியா இருந்தாலும் சரி, இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருந்தோம்.இவ ஒரு பையனை மனசார காதலிச்சு வறாங்க.அந்த பையனும் இவளை மனசார காதலிக்கறாருங்க.இவ காதலிக்கிற பையன் ஒரு பிராமண ஜாதியை சேர்ந்தவரு.அந்தப் பையனின் அப்பா என் பெண் கிருஸ்தவ ஜாதியை சேர்ந்தவ, அவங்க ஜாதிக்கு என் பெண் ஒத்து போவாதுன்னு சொல்லி மறுத்து வறாருங்க.மேரி ஆசைப் பட்ட பையனுக்கு அவளே கல்யணம் பண்ணி வக்க முடியலைன்னு நினைக்கறப்ப என் மனசு ரொம்ப வேத னைப் படுதுங்க.இந்த ஒரு பொ¢ய,முக்கியமான,சந்தோஷத்தை என்னால் என் பெண்ணுக்குத் தர முடி யலையேன்னு நினைக்கும் போது நான் என் உயிரை மாய்ச்சுக் கொள்ளலாம் போல இருக்குது சார்…:” என்று சொல்லி வருத்தப் பட்டார் ‘பாதர்’ ஜோசப்.

அந்த அம்மாவும் “நானும், ஜோவும் இதே நினச்சி தாங்க ரொம்ப வருத்தப் பட்டுக் கிட்டு இருக் கோம்.மேரியும் அந்த பையனைத் தவிர வேறே எந்த ஆம்பளை பையனையும் கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிக் கிட்டு வறா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து “சார், பாக்க நீ£ங்க கூட ஒரு வைதீக பிராமணரர் ஆக இருக்கீங்க.நீங்க கொ ஞ்ச பொ¢ய மனசு பண்ணி,அந்த வைதீக பிரா¡மணர் கிட்டே என் நிலமையை சொல்லி,தயவு செஞ்சு என் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பீங்களா சார்.அவரு ஆசைபட்டார் ன்னா என் பொண்ணை அவங்க ஜாதிக்கே மாத்தி கிட்டு அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி கிடட்டுங்க.இதிலே எங்க ரெண்டு பேருக்கும் பூரண சம்மதங்க.என் மேரிக்கு அவ ஆசைப் பட்டாப் போல ஒரு சந்தோஷ மண வாழ்கை அமைஞ்சா போதும் சார்” என்று சொல்லி கனபாடிகளின் காலில் விழப் போனார் ‘பாதர்’.

’பாதரை’த் தொட்டு மெல்ல எழுப்பின கனபாடிகள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

அவர் தன் கண்களை துடைத்துக் கொண்டே “எழுந்திருங்கோ ’பாதர்’.என் பையன் எவ்வளவு தடவைக் கேட்டும் நான் தான் இந்தப் பாழும் ஜாதி தான் முக்கியம்ன்னு சொல்லி அவன் கல்யாண த்தே தடுத்து வந்த பாவி.எங்க ரெண்டு பேருடைய உயிரைக் காப்பாத்தின உங்களுக்கு நான் நிச்சி யமா இந்த உதவியே பண்ணுவேன்.உங்க பெண் இனிமே இந்த ஆத்துப் பொண்ணாயிட்டா.நானும் காமாக்ஷ¢யும் மேரி பேரை எங்க ஜாதிப் பொண்ணு பேரைப் போல மாத்தி என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னார் கனபாடிகள்.

”என் காதுகளை என்னால் நம்பவே முடியலே சார்.இந்த மாபெரும் உதவியை நான் காலம் பூரா வும் மறக்க மாட்டேன்.எங்க மேரி உங்க வீட்லே,உங்க பையனோடு சந்தோஷமா வாழ்ந்துக் கிட்டு வர ட்டும்” என்று சொன்னார் ‘பாதர்’.கர்த்தருக்கு தன் நன்றியை சொல்லிக் கொண்டு இருந்தார்..

உடனே அந்த அம்மாவும் எழுத்து நின்றுக் கொண்டு “எங்க மேரி ஆசை பட்ட பையன் உங்க பையனா.என்னால் நமபவே முடியலே.நீங்க பொ¢ய மனசு பண்ணீ எங்க மேரியே உங்க மருமக ஆக்கி க் கிட சம்மதம் குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க”என்று தன் கையைக் கூப்பி சொன்னாள்.

மாதவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அவன் மெல்ல வீட்டுக்கு உள்ளே வந்து செருப்பைக் கழட்டி வைத்துக் கொண்டு இருக்கும் போது,அவனைப் பார்த்த கனபாடிகளும்,காமாக்ஷ¢யும் ”வா மாத வா வா.சரியான நேரத்திலே தான் நீ வந்து இருக்கே.மேரி தான் இந்த ஆத்து மாட்டுப் பொண்ணு ” என்று ‘கோரஸாக’ சந்தோஷத்துடன் சொன்னார்கள்.சமையல் மாமி பண்ணீ வைத்து இருந்த கல்யா ண சமையல் சாப்பாட்டை எல்லோருக்கும் பா¢மாறினாள்.எல்லோரும் அந்த சாப்பாட்டை ரசித்து சாப்பீ ட்டார்கள்.கனபாடிகளும்,காமாக்ஷ¢யும் மாதவன் வாங்கிக் கொண்டு வந்த வேஷ்டியையும்,பட்டு புட வையும் ‘கிப்டையும்’ ‘பாதரி’டம் கொடுத்தார்கள்.

பிறகு கனபாடிகள் இடமும் காமாக்ஷ¢ இடமும்,மாதவன் இடமும் சொல்லிக் கொண்டு ‘பாதர்’ தன் அம்மாவையும்,மேரியையும் அழைத்துக் கொண்டு சந்தோஷமாக தன் வீட்டுக்கு வந்தார்.

ஒரு நல்ல முஹ¥ர்த்ததில் கனபாடிகள் கூட பிறந்தவர்கள்,அவர் மனைவி கூட பிறந்தவர்கள் ‘பாதர்’ ஜோசப்,அவரது தாயார்,அவர்களின் உறவுக்காரர்கள் எல்லோர் முன்னிலையில் ‘மேரி’ என் கிற பேரை ‘மீனாக்ஷ¢’ என்று மாற்றி,வேத மந்திரம் சொல்லி மாதவனுக்கும்,மீனாக்ஷ¢க்கும் கல்யாணத் தை சுபமாக செய்து முடித்தார் கனபாடிகள்.மாதவனும் மேரியும் சந்தோஷப் பட்டார்கள்

அன்று இரவே மேரி மாதவனைப் பார்த்து “நான் நமக்கு நிச்சியமா கல்யாணம் நடக்கும்ன்னு ஒரு நாள் சொன்னேனே. ‘பாத்தேளா அது நடந்துடுத்து’ “என்று ‘பிராமண பாஷையிலே’ சொல்லி விட்டு ஒரு ‘ரோமானிடிக்’ சிரிப்பு சிரித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *