கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 4,869 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 |

கதவை திறந்து வைத்துக் கொண்டு வெளியிலேயே காத்துக் கொண்டு இருந்தார் சிவலிங்கம். காரிலிருந்து இறங்கினார்கள் எல்லோரும். மெல்ல அப்பாவை கை கொடுத்து இறக்கி அவருக்கு ‘அக்குள் கட்டைகளை’ கொடுத்து மெல்ல அழைத்துக் கொண்டு வந்தான் நடராஜன்.“வாங்க,வாங்க” என்று சொல்லி எல்லோரையும் கையை கூப்பி வரவேற்றார் சிவலிங்கம்.எல்லோரும் உள்ளே நுழைந்ததும் எல்லோரையும் சோபாவில் உட்காரச் சொன்னார் சிவலிங்கம்.“வாங்க வாங்க” ன்னு சொல்லி எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தாள் சரோஜா.கொண்டு வந்த பழங்கள், பூ, எல்லா வற்றையும் பார்வதி சரோஜாவிடம் கொடுத்தாள்.எல்லோரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள். “என் பேர் பரமசிவம்,இவ என் சம்சாரம் பார்வதி.அவரு என் பெரிய மச்சான் குமாரசாமி,பக்கத்திலே இருக்கிறது அவங்க சம்சாரம் லக்ஷ்மி” என்று எல்லோரையும் அறிமுகப் படுத்தினார் பரமசிவம். “எல்லோருக்கும் வணக்கம்ங்க “என்று சிவலிங்கமும் சரோஜாவும் மறுபடியும் வணக்கம் தெரிவித்தார் கள்.சிவலிங்கமும் சரோஜாவும் சோபாவில் வந்து உட்கார்ந்தார்கள்.“எங்க ஊர் அரியலூர் ங்க.எங்களுடையது ஒரு விவசாய குடும்பங்க.உங்களுக்கு எந்த ஊர்ங்க” என்று முதலில் கேட்டார் பரமசிவம்.“எங்க ஊர் திருச்சி பக்கத்திலே இருக்கிற பிக்ஷ¡ண்டார் கோவிலுங்க.எங்க அப்பா காலத்திலே எங்களுக்கும் விவசாயம் தாங்க இருந்தது.நான் தான் முதல்லே படிச்சு சென்னைக்கு வந்து வேலைக்கு வந்து சேர்ந்தேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் “பிக்ஷ¡ண்டார் கோவிலா,எங்க ஊறவுக் காரங்க அங்கே இருக்காங்க. உங்களுக்கு சோமசுந்தரத்தை தெரியுங்களா. மிராசுதார் அவர்.எனக்கு தூரத்து உறவு.பங்காளியும் கூட” என்றார் பெரிய மாமா குமாரசாமி.“எனக்கு தெரியாதுங்க.என் அப்பாருக்குத் தெரிஞ்சு இருக்கும். நான் திருச்சி யிலே படிப்பு முடிச்சதும் சென்னைக்கு வந்து விட்டேங்க.என் சித்தப்பா இங்கே வேலையா இருந்தார்.அவர் தான் என்னை இங்கே வேலைக்கு சேர்த்து விட்டார்”என்று சொல்லி முடிக்கும் முன் “நம்ப நடராஜன் வந்த மாதிரி போல் இருக்கு.இவனும் சென்னைக்கு வந்து வேலை தேடிக் கிட்டான்”என்றாள் பார்வதி.

பிறகு எல்லோரும் நிதானமாக ஒவ்வொறு சமாசாரமா ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டு இருந்தார்கள் “பேசிகிட்டே இருக்கீங்களே.செஞ்சு வச்ச பலகாரம் ஆறிப் போவுது .நான் இதோ கொண்டு வரேன் சாப்பிடுங்க. சாப்பிட்டுக் கிட்டே நாம பேசலாமே” என்று பலாரத்தை கொண்டு வரப் போனாள் சரோஜா.“நீங்க உக்காருங்க. நின்னுகிட்டே இருக்கீங்களே.பலகாரம் இருக்கட்டுங்க. நாம பேசிட்டு அப்புறமா உங்க கமலாவையும் நாங்க ‘பொண்ணு’ பாக்கிறோம்.எல்லாம் நல்ல போனா கமலாவையே பலகாரம் தரச் சொல்லலாம்.உங்க பொண்ணை எங்க எல்லோருக்கும் கா·பியிலேயே சக்கரைப் போடச் சொல்லுங்க.ஆனா நம்ப நடராஜனுக்கு மட்டும் காப்பியிலே சக்கரை போடாமல் தரச் சொல்லுங்க” என்றாள் பார்வதி.சிவலிங்கமும் சரோஜாவும்,மற்ற எல்லோரும், ஒன்னும் புரியாமல் பேந்த பேந்த விழித்தனர்.எல்லோரும் ஒரே குரலில் “அது ஏங்க” என்று ஒன்றும் புரியாமல் கேட்டார்கள்.உடனே பார்வதி ”அது ஒன்னுமில்லேங்க.நடராஜனுக்கு கமலா தன் கையினால் கொண்டு காப்பி கொண்டு வந்து கொடுத்தால் அந்த சந்தோஷத்தில் கமலா கையில் இருக்கும் சக்கரை அவள் கையில் இருந்து அந்த காப்பியில் கலந்து விடும்.அது தன்னாலே இனிக்கும். சக்கரையே போட வேண்டாம்” என்று சொன்னதும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு “பெண்ணை வரச் சொல்லுங்க நாம பாக்கலாங்க” என்றார் பரமசிவம்.

சிவலிங்கம் “சரோஜா உள்ளே போய் கமலாவை இட்டுக் கிட்டு வா”என்றார்.சரோஜா உள்ளே போய் அலங்காரம் பண்ணி இருந்த கமலாவை அழைத்துக் கொண்டு வந்தாள்.கமலாவும் அலங்காரம் பண்ணின பதுமைப் போல மெதுவாக நடந்து வந்தாள்.”பெரியவங்களுக்கு எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணுமா” என்றார் சிவலிங்கம்.கமலாவும் எல்லோருக்கும் தனித் தனியாக நமஸ்காரம் பண்ணி விதுச் அடக்கமாக ஒரு ஓரத்தில் உட்கார்ந்தாள்.”உன் பேர் என்னம்மா” என்றாள்.“கமலாங்க” என்று சொல்லி நிறுத்தினாள்.“கமலா,உங்க அம்மா உனக்கு சமைக்க சொல்லிக் கொடுத்து இருக்காங்களா நடராஜனுக்கு வித விதமான சாப்பாட்டு வகைங்க ரொம்பப் பிடிக்கும்.என்னை ‘இது பண்ணுமா’ ‘அது பண்ணுமா’ன்னு தொந்தரவு பண்ணுவான்.கல்யாணம் ஆயிட்டா எனக்கு அந்த தொந்தரவு இருக்காது பார்” என்றாள் பார்வதி.“எனக்கு சமைக்கச் சொல்லி கொடுத்து இருக்காங்க.எனக்கும் வித வித சாப்பாடு பிடிக்குங்க.நான் அவைகளை செய்ய முயற்சி பண்றேங்க” என்றாள் கமலா நிதானமா.

“ கொஞ்சம் நேரம் கழித்து “போம்மா,உங்க அம்மாவோட உள்ளே போய் பலகாரங்களை எல்லாம் எடுத்து வா”என்றாள் பார்வதி.கமலாவும் சரோஜாவும் எல்லோருக்கும் பலகாரம், குடிக்கத் தண்ணி,எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.எல்லோரும் பககாரங்களை ரசித்து சாப்பிட்டார்கள்சற்று நேரம் கழித்து எல்லோருக்கும் சூடாய் கா·பி கொண்டு வந்து கொடுத்தாள் கமலா. இரு குடும்பதாரும் ‘சீர்’ செய்வதைப் பத்தி விவரமாகப் பேசினார்கள்.நடராஜன் குடும்பத்தார் கேட்ட ‘சீர்’ எல்லாம் செய்வதாய் சிவலிங்கம் ஒத்துக் கொண்டார்.”உங்க குடும்ப ஜோஸ்யரைக் கேட்டு கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாள் நல்ல முஹ¥ர்த்தம் பார்த்து எங்களுக்கு தெரிவிங்க.நாங்களும் எங்க உறவுக் காரங்களுக்கு எல்லாம் துணி எடுக்கணும் நடராஜன் கல்யாணம் தான் எங்க குடும்பத்துலே வெளியிலே இருந்து பொண்ணு எடுத்து பண்ற முதல் கல்யாணம்.மத்த கல்யாணங்கள் எல்லாம் கிட்ட உறவிலே,கொஞ்ச தூரத்து உறவிலேன்னு தாங்க நடந்து இருக்கு” என்றாள் பார்வதி.எல்லாம் நல்லதா முடிஞ்சி இருக்குங்க.நம்ப ரெண்டு குடும்பமும் கல்யாணம் முடிஞ்சு சுவாமி மலைக்குப் போய் நாம நம்ம பிரார்த்தனையை சேந்தே செய்யலாம்ங்க” என்றார் குமாரசாமி.”மாங்க ரொம்ப நல்ல ஐடியாங்க” என்றார்கள் சிவலிங்கமும் சரோஜாவும்.

வெளியிலே போன நடராஜன் ஒரு பதினைந்து நிமிஷத்திற்கெல்லாம் காரில் இருந்து கீழே இறங்கினான். அவன் இரண்டு பெரிய ‘காரி பேக்கு’களை கையில் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். நடராஜன் வந்ததும் “ரெண்டு தாம்பாளங்களை கொண்டு வா£ங்களா “ என்று கேட்டாள் பார்வதி.சரோஜாவும் ரெண்டு தாம்பாளங்களை கொண்டு வந்து கொடுத்தாள்.பார்வதி அதில் நடராஜன் வாங்கி வந்த பூ,பழங்கள்,கல்கண்டு,சக்கரை, தாம்பூலம், தேங்காய், பாதாம் பருப்பு, எல்லாம் எடுத்து வைத்தாள்.“நல்ல நேரம் போவதுக்குள்ளார நாம தாம்பூலம் மாத்திக்க லாங்களா” என்று சொல்லி தன் அண்ணனிடமும் அண்ணியிடமும் பார்வதி தாம்பாள தட்டுகளைக் கொடுத்தாள் பார்வதி.இரு குடும்பத்தாரும் தாம்பூல தட்டுகளை மாற்றிக் கொண்டார்கள்.சற்று நேரம் இருந்து விட்டு பிறகு எல்லோரும் கிளம்பிப் பொனார்கள்.வாசல் வரை வந்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள் சிவலிங்கமும் சரோஜாவும்.

“ரொம்ப நல்ல மாதிரி இருக்காங்க பிள்ளை வீட்டாருங்க.எனக்கு அவங்களே ரொம்ப பிடிச்சு இருக்குங்க” என்றாள் சரோஜா.“ஆமாம் சரோஜா.எல்லோரும் நல்ல முறையில் பழகினாங்க.சீர் எல்லாம் ரொம்ப அதிகம் கேக்கலே. ‘லிமிட்டா’த் தான் கேட்டு இருக்காங்க.நம்மால் செய்யக் கூடியது தான் அவைகள். நாம் நல்ல விதமா அவங்க கேட்டதெல்லாம் செஞ்சி கல்யாணத்தை நல்ல விதமா முடிக்கணும் சரோஜா” என்றார் சிவலிங்கம். “செஞ்சிடலாங்க” என்று சொன்னாள் சரோஜா.

தன் பெண்ணையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனார். சிவவலிங்கம்.முருகப் பெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்தார் அவர்.மூவரும் கோவிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.கோவிலில் இருந்து திரும்பி வந்த சிவலிங்கம் தம்பதிகள் கல்யாணத்திர்கு என்ன செலவு ஆகும் என்ரு கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.சரோஜாவும் தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் போட்டு விட்டு புதுசாக ‘மார்டர்ன்’ டிசைனில் என்ன எல்லாம் பண்ண முடிவு பண்ணி இருக்கிறாள் என்பதை தன் கணவனிடம் சொன்னாள்.சிவலிங்கமும் தன்னிடம் இருக்கிற பண நிலவரத்தை சரோஜாவிடம் சொன்னார்.உன் கிட்டே இருக்கும் நகைகளை எல்லாம் நீ போட்டு விட்டு உனக்கு என்று நகைகள் இல்லாம இருக்க வேணாம் சரோஜா, நாம கமலாவுக்கு புது நகைகள் பண்ணிப் போட்டு விடலாம். உனக்கு நகை பண்ண அப்புறம் கை வராது சரோஜா” என்று சொல்லி விட்டு அதற்கும் சேர்த்து கணக்குப் போட்டார். கொஞ்சம் பணம் துண்டு விழும் போல் இருந்தது.”கல்யாண செலவு எல்லாத்துக்கும் நம்ம கைலே இருக்கும் பணம் போதாது சரோஜா…..” என்று சிவலிங்கம் சொல்லி முடிக்கும் முன்பே “ஏங்க கமலாவின் கல்யாணம் தானுங்களே.நாம ஏன் கமலா சேர்த்து வச்சு இருக்கிற பணத்தை நமக்குக் குடுன்னு கேட்டா என்னங்க தப்பு” என்று சரோஜா ஐடியா கொடுத்தாள்.சற்று நேரம் யோஜனைப் பண்ணினார் சிவலிங்கம்.அவர் மௌனமாக இருந்ததைக் கவனித்த சரோஜா தான் சொன்னது தன் கணவனுக்குப் பிடிக்கவில்லை என்று யூகித்துக் கொண்ட சரோஜா “ஏங்க நான் சொன்னது உங்களுக்கு சரின்னு படலையா,பேசாம இருக்கீ¢ங்களே” என்று கேட்டாள் சரோஜா.

“இல்லை சரோஜா.கமலா கல்யாணம் கட்டிக் கிட்டு அவ புருஷனோடப் போகப் போறா.அவ புருஷன் கிட்டே அவ ‘எங்க வீட்டுலே நான் சம்பாதித்து சேர்த்து வைத்து இருந்த பனத்தை என் கல்யாணத்திற்கு என் அப்பா கேட்டார் நான் குடுத்துட்டேன் இப்ப என் கையிலே பணம் ஏதும் இல்லீங்க’ ன்னு அவ மாப்பிள்ளை கிட்டே சொன்னா அவர் நம்மை என்ன மதிப்பார் சரோஜா.,இவர் என்ன மனுஷன் என்று இல்லை நினைச்சுக்குவாரு.அது நம்ப கௌரவத்துக்கு கேவலம் இல்¨யா சரோஜா.நீ யோஜனை பண்ணவில்லையா” என்று கெஞ்சிய குரலில் கேட்டார் சிவலிங்கம். சரோஜா “ஆமாம்ங்க தப்பு தான் நான் சொன்னது. நாம கல்யாண செலவுக்குக் கேக்கக் கூடாதுங்க. நமக்கு கேவலங்க” என்று ஒத்துக் கொண்டாள் சரோஜா.“அப்ப துண்டு விழற பணத்துக்கு நாம என்ன பண்ணிவோம்ங்க. யாரை நாம் பணத்துக்கு போய் கேப்பது” என்றாள் ஒரு வித பயத்தோடு.“வேறு வழி இல்லே சரோஜா, நான் அந்த வீட்டு ஓனர் கிட்டே போய் ‘ என் பொண்ணு கல்யாணம் நான் நிச்சியம் பண்ணி இருக்கேன்.செலவுக்கு பணம் தேவை படுத்துங்க. அதனால் என் மீதி பணத்தை உடனே முழுசாகக் குடுங்கன்னு பிடிவாதம்மா கேக்கப் போறேன்.பாக்கலாம் அவர் என்ன சொல்றார்ன்னு.இந்த மாதிரி எனக்கு பண முடை, பொண்ணு கல்யாணம்ன்னு சொன்னா அவர் மனசு மாறி என் மீதி முழு பணத்தைத் திருப்பி தர மாட்டாரா,என்ன சரோஜா” என்று தன் மனதில் இருந்த ஐடியாவைச் சொன்னார் சிவலிங்கம். “ஆமாங்க இது தாங்க நல்ல சந்தர்ப்பம்.நம் பணத்தை நாம திருப்பி அவர் கிட்டே இருந்து திருப்பி வாங்க.நீங்க கொஞ்சம் பிடிவாதமா கேளுங்க’ என்று கணவனை ஊக்குவித்தாள் சரோஜா.

“சரி சரோஜா நான் கண்டிப்பான குரலில் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு “நான் கொஞ்சம் பார்க்கு வரை போய் விட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார் சிவ்லிங்கம்.
சிவலிங்கம் சரோஜா தம்பதிகள் அவர்களை வாசல் வரை வந்து வழி அனுப்பியதை எண்ணி மகிழ்ந்தவாறு காரில் வந்துக் கொண்டு இருந்தார்கள் நடராஜன் குடும்பத்தினர் அனைவரும். எல்லோரும் ஹோட்டலுக்கு வந்தார்கள். “பொண்ணு பார்க்க நல்லா இருக்கா.குடும்பமும் நடுத்தர குடும்பம் தான். நம்ம குடும்பம் மாதிரி” என்றார் பரமசிவம்.“ஆமாங்க நமக்கு ஏத்த குடும்பம் தான் அவங்க குடும்பம்” என்றாள் பார்வதி.”என் நடராஜன் செலக்ஷன் ரொம்ப நல்லா இருக்கு.நல்ல இடமாத் தான் பிடிச்சி இருக்கான் நடராஜன்” என்று புகழ்ந்தார் குமாரசாமி.பிறகு சாப்பிட்டு விட்டு எல்லோரும் தூங்கப் போய் விட்டார்கள்.

நடராஜன் விருப்பம் என்ன என்று தெரிந்து அவன் மனசுக் கேத்த பொண்ணு கிடைக்கணுமே ன்னு நான் ராப் பகலா கவலைப் பட்டு வந்தேணுங்க.அந்த முருகப் பெருமான் தயவிலே அவன் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு நல்ல பொண்ணு அவனுக்கு கிடைச்சுட்டாங்க” என்றாள் பார்வதி ”உண்மைத் தான் பார்வதி.எனக்கும் இந்த கவலை நிறையவே இருந்திச்சு.வீணா உங்கிட்டே சொல்லி உன்னை கஷ்டப் படுத்த நான் விரும்பவில்லை பார்வதி.அந்த முருகப் பெருமான் தான் நமக்கு அருள் புரிஞ்சி இருக்கார்” என்று சொன்னார் பரமசிவம்

வெளியில் இருந்து கமலாநடராஜனுக்கு போன் பண்ணினாள்.“என்ன சார்,இனிமே ‘மஜா’ தான்.நம்ப ரெண்டு குடும்பமும் ஒன்னும் தகராறு இல்லாம ஒத்துக் கிட்டு தாம்பூலம் மாத்திகிட்டா ங்க.என்ன உங்களுக்கு குஷி தானே நான் இப்போ ஆகாயத்திலே பறந்துக் கிட்டு இருக்கேங்க” என்றாள் கமலா.“இல்லையா பின்னே குஷி தான் நானும் ஆகாயத்திலே தான் பறந்துக் கிட்டு தான் இருக்கேன் கமலா.நான் இல்லேங்கலே.நாம இனிமே சீக்கிரம் ஒன்னு சேரணும் கமலா.நீ உங்க அப்பா அம்மாவை நம்ப கல்யாணத்திற்கு சீக்கிரம் ஒரு நல்ல நாள் குறிக்கச் சொல் கமலா.ரொம்ப நாள் கடத்த வேணாம்ன்னு சொல்லு.உன் கையாலே,உன் சமையலை எனக்கு சாப்பிடணும் போல் இருக்கு கமலா” என்றான் நடராஜன்.நான் என் அப்பா கிட்டே உடனே சொல்லி சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாள் குறிக்கச் சொல்றேங்க” என்று கொஞ்சினாள் கமலா.

அடுத்த நாள் காலையில் எல்லோரும் ஹோட்டலில் டிபன் சாப்பிட்டார்கள்.நடராஜன் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் அரியலூரில் அவர்கள் வீட்டில் விட்டான்.விஷயம் அறிந்த எல்லா உறவுக்காரர்களும் நடராஜன் விட்டுக்கு வந்து நடராஜனையும் அவன் அப்பா அம்மாவையும் வாழ்த்தி விட்டுப் போனார்கள். நடராஜன் தனக்கு லீவு அதிகம் இல்லை என்று சொல்லி அன்று இரவே சென்னை கிளம்பி வந்து அடுத்த நாள் காலையில் வேலைக்குச் சேர்ந்து விட்டான்.

சிவலிங்கம் தம்பதிகள் தங்கள் வீட்டு ஜோஸ்யரைப் பார்த்து கல்யாணத்திற்கு ஒரு நல்ல நாள் குறித்து வந்தார்கள்.கல்யாண தேதி தெரிந்த உடனே கமலா நடராஜனுக்கு கல்யாண தேதியை போனில் சொன்னாள். சிவலிங்கம் உடனே நடராஜன் அப்பா அம்மாவுக்கும் போனில் அந்த தேதியைத் தெரிவித்தார். உடனே பரமசிவம் சிவலிங்கத்திடம் போனிலேயே ”நடராஜன் கமலா கல்யாணம் சென்னையிலே நடக்கப் போவுதுங்க.எங்களுக்கு உறவுக் காரங்க ரொம்ப அதிகம்ங்க. அவங்க எல்லோரையும் சென்னைக்கு கல்யாணத்துக்கு அழைச்சு வரதுங்கறது முடியாத சமாசாரம் ங்க.நடராஜன் கமலா நிச்சியதார்த்ததை நாங்க இங்கே அரியலூரில் வச்சுக லாம் என்று நினைக்கிறோ முங்க.அதனாலெ நீங்க,உங்க சம்சாரத்தையும் கமலாவையும் அரியலூருக்கு ஒரு நாள் அழைச்சு வாங்க.நீங்க மூனு பேரும் தயவு செஞ்சி அரியலூருக்கு இந்த ஞாயித்துக் கிழமை வர முடியுங்களாங்க” என்று கேட்டார். “நிச்சியமா ங்க.பிள்ளை வீட்டிலே தானேங்க நிச்ச்சியதார்த்தம் பண்ணுவது முறை யாச்சேங்க. நாங்க மூனு பேரும், மாப்பிள்ளை யையும் அழைச்சுக் கிட்டு ஞாயித்துக் கிழமை காலை யிலே அரியலூர் வந்து சேர்ந்து விடறோமுங்க” என்று சொல்லி ‘போனைக் கட்’ பண்ணினார்.

பரமசிவம் நடராஜனுக்குப் போன் பண்ணி அவர் சிவலிங்கத்திடம் போனில் பேசியதைச் சொல்லி, நிச்சியதார்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணி இருப்பதாயும்,எல்லா உறவு காரங்களையும் நிச்சியதாத்ததிற்கு அழைத்து இருப்பதாயும் சொல்லி விட்டு, சென்னையில் இருந்து கமலா அவங்க அப்பா அம்மா மூனு பேரையும் கூட்டிக் கிட்டு வர ஞாயித்துக் கிழமை காலையிலே வந்து சேரும் படி சொன்னார்.உடனே நடராஜன் “சரிப்பா.நான் நீங்க சொன்னா மாதிரி அவங்களையும் கூட்டிக் கிட்டு ஞாயித்துக் கிழமை காலையிலே அரியலூர் வந்து விடுகிறேன்.நீங்க நிம்மதியா நிச்சியதார்த்த வேலை யை கவனியுங்கப்பா” என்று சொல்லி போனை ‘கட்’ பண்ணினான்.சொன்னது போல நடராஜன் கமலா அவங்க அப்பா அம்மா மூன்று பேரையும் கூட்டிக் கிட்டு ஞாயித்துக் கிழமை காலையிலே அரியலூர் வந்து சேர்ந்தான்.பரமசிவம் பார்வதி தம்பதிகள் அந்த வீதியையே வளைச்சுப் போட்டு விதி பூராவும் பெரிய பந்தலாகப் போட்டு நிறைய கலர் விளக்குகள் எல்லாம் போட்டு அலங்காரம் பண்ணி இருந்தார்கள்.உறவுக் காரங்க எல்லோரும் வந்து இருந்தார்கள். சரியாக பத்து மணிக்கு பரமசிவம் வீட்டு ஐயர் வந்து நடராஜன் கமலாவுக்கு விமா¢சையாக நிச்சிய தார்த்தம் பண்ணி வைத்தார்.நடராஜன் கமலா நிச்சியதார்த்தத்திற்கு வந்து இருந்த அத்தனை உறவுக் காரங்களும் பரமசிவம் பார்வதி போட்ட விருந்தை மிகவும் ரசித்து சாப்பிட்டு விட்டு அவர்கள் ரொம்ப பாராட்டி விட்டுப் போனார்கள். அன்று சாயந்திரம் பரமசிவம் பார்வதி தம்பதிகளும்,சிவலிங்கம் சரோஜா தம்பதிகளும் பேசிக் கொண்டு இருந்து விட்டு இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு கமலாவை அழைத்துக் கொண்டு நடராஜனுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்.

கமலா கல்யானத்துக்கு ஒரு பெரிய கல்யாண சத்திரத்தை ஏற்பாடு பண்ணினார் சிவலிங்கம். பிறகு ஐயர், நாதஸ்வரம் பூக்காரன் சமையல் காரர் எல்லாம் ஏற்பாடு பண்ணி அட்வான்ஸ் கொடுத்தார். பிறகு தன்னிடம் இருந்த பணத்தையும் எல்லாம் சேர்த்து கமலாவுக்கு நகை,துணி மணி, முஹ¥ர்த்த புடவை,குடும்பத்துக்கு வேண்டிய எவர் சில்வர் பாத்திரங்கள்,தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் வேண்டிய ஜவுளி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேகா¢க்க ஆரம்பித்தார்கள்சிவலிங்கம் தம்பதிகள்

கல்யாண தேதி நிச்சியம் ஆனதால் சிவலிங்கம் அந்த வீட்டு ஓனா¢டம் போனார்.சிவலிங்கத்¨ப் பார்த்த அந்த ஓனர் “வாங்க” என்று வரவேற்று அவர் வீட்டு ஹாலில் உட்காரச் சொன்னார்.சிவலிங்கம் நிதானமாக “சார் என் கடைசி பொண்ணுக்கு நான் கல்யாணம் நிச்சியம் பண்னி இருக்கேங்க.வர மாசம் இருபத்தைஞ்சாம் தேதி கல்யாண நாளுங்க எனக்கு இப்போ பணமுடை அதிகமா இருக்குங்க. நீங்க எனக்கு சேர வேண்டிய மீதி அடவான்ஸ் பணத்தை உடனே திருப்பிக் குடுங்க” என்றார் கண்டிப்பான குரலில்.“சந்தோஷ சமாசாரம் தான் கொண்டு வந்து இருக்கீங்க.நான் என்ன முடியுமோ அந்த பணத்தை நிச்சியம் நான் தந்து விடுகிறேன்.உங்களுக்குத் தெரியும் எங்க கட்சி இந்த தடவை அதிக சீட்கள் கிடைக்கலே.அதனால் எங்கள் கட்சி இந்த தடவை ஆட்சியைப் பிடிக்கலே…..’ என்று இழுத்தார் அந்த ஓனர்.சிறிது நேரம் ஆனதும் “நான் என் கையில் பணம் வந்ததும் உங்களுக்கு தந்து விடுறேங்க.நீங்க நிம்மதியா போய் மத்த வேலைங்களை கவனிங்க” என்று சொல்லி விட்டு உள்ளே போனார் அந்த ஓனர்.சிவலிங்கத்திற்கு கோவம் கோவமாக வந்தது.‘இப்படி சொல்லி விட்டானே இந்த பாவி ஓனர்’ என்று அவரைத் திட்டிக் கொண்டே வெறுப்புடன் வீடு திரும்பினார் சிவலிங்கம். வீட்டுக்கு வந்து அந்த ஓனர் சொன்னதை தன் மணைவியிடம் சொல்லி வருத்தப் பட்டார் சிவலிங்கம்.

‘தன் சம்மந்தி தன் கடைசிப் பெண்ணுக்கு கல்யாணம் நிச்சியம் பண்ணீ இருக்கிறார்’ என்று லதாவின் மாமியாருக்குத் தெரிந்து விட்டது.இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து லதாவின் மாமியார் லதாவை அழைத்து “உங்க அப்பா உங்க தங்கை கமலாவுக்கு கல்யானம் நிச்சியம் பண்ணி இருக்கார்.அவர் உன் கல்யாணத்தில் உனக்கு மிகவும் குறைவான நகை தான் போட் டார்.இப்ப உனக்கு ஒரு பெண் குழந்தை வேறு பிறந்து இருக்கிறது. நீ உன் அப்பா கிட்டே சொல்லி உன் பெண் குழந்தைக்கு மூனு பவுனில் ஒரு செயின் வாங்கப் போடச் சொல்லு.கமலா கல்யாண செலவோடு செலவாக இந்தச் செயினையும் உன் அப்பா பண்ணிப் போட்டார்ன்னா சௌகா¢யமாய் இருக்கும். இப்போ விட்டா அப்புறம் நீ கேக்க முடியாது..உன் அப்பா அவர் தன் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் உன் தங்கை கல்யாணத்துக்கு செலவழிச்சு விடுவார்.நீ உடனே உங்க வீட்டுக்குப் போய் உன் குழந்தைக்கு மூனு பவுனில் ஒரு செயினை பண்ணிப் போடும் படி உங்க அப்பா அம்மா கிட்டே கேள்” என்று நச்சரித்துக் கொண்டு இருந்தாள்.லதா ஏதேதோ சமாதானம் எல்லாம் சொல்லி சமாளித்து வந்தாள்.ஆனால் மாமியார் கேட்பதாய் இல்லை.

லதாவுக்கு அவள் குடும்ப சூழ் நிலை நன்றாகப் புரியும்.அவள் அப்பா ரிடையர் ஆன பணம் கரைந்து வருகிறது.கடைத் திறக்க குடுத்த ‘அட்வான்ஸ் பணம்’ இன்னும் அப்பா கைக்கு திரும்பி வந்த பாடு இல்லை.மாமி உமாவுக்கு வேறு அவர்கள் மாதா மாதம் வீட்டு செலவுக்கும்,வீட்டு வாடகைக்கும் பண உதவி பண்ணி வருவதும் அவளுக்குத் தெரியும்.இப்போது கமலாவுக்கு கல்யாணம் நிச்சியம் ஆகி இருக்கிறது. அவளுக்கு வேண்டியதை எல்லாம் அப்பா செய்ய வேண்டாமா? கல்யான செலவு பண்ண வேண்டாமா? இந்த மாமியார் இப்படி நச்சரிக்கிறாளே’ என்று நினைத்து வேதனை பட்டள்.மாமியார் நச்சரிப்பு தாங்காமல் லதா ஒரு நாள் தன் அப்பா வீட்டுக்கு வந்து தன் மாமியாரின் நச்சரிப்பை தன் அப்பாவிடம் சொல்லி வருத்தப் பட்டாள் லதா.சிவலிங்கம் ஆடிப் போய் விட்டார்.‘இது என்னடா புது பூகம்பம்.கமலா கல்யாண செலவையே நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கும் போது லதா மூனு பவுனில் ஒரு செயின் கேக்கறாளே’ என்று நினைத்து மிகவும் வேதனை பட்டார். லதாவின் மாமியார் லதாவை கண்டபடி பேசுவாள் என்று சிவலிங்கத்திற்கு நன்றாகத் தெரியும்.அந்த அம்மா ரொம்பவும் கண்டிப்பானவங் கன்னு சிவலிங்கத்துக்கு நல்லாவே தெரியும்.பேசாமல் செலவோடு செலவாக இந்த செயினையும் பண்ணிப் போட வேண்டும்’ என்று முடிவு பண்ணினார்.சரோஜாவிடம் தன் அபிப்பிராயத்தை சொன்னார் சிவலிங்கம்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *