பேராசை பெருங்கேடு




(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேரா சையினால் நாயொன்று
பெரிதும் இரையைத் தேடிநொந்து
ஊரில் திரிந்து திருடியதோர்
அப்பத் துண்டை வாய்கௌவி
செல்லும் வழியில் ஓர் மடுவைச்
சென்று கடக்கப் போட்டதொரு
நல்ல பாலம் வழியாக
நடந்து சென்ற நாய்நீரில்
எட்டிப் பார்த்துத் தன்நிழலே
இருக்கக் கண்டே அதன்வாயில்
அப்பமும் இருக்கக் கண்டதனை
எட்டிப் பிடிப்பேன் எனஎண்ணி
எழுந்து நீரில் பாய்ந்ததுவே
இருந்த அப்பமும் வீழ்ந்ததுவே
அழுந்திச் சேற்றில் பாய்ந்ததுவே
ஆசை முழுதும் தீர்ந்ததுவே.
அருஞ் சொற்கள்
அழுந்தி
திருடி
பேராசை
இரை
தீர்ந்தது
மடு
கடக்க
நொந்து
மாய்ந்தது
கௌவி
பாய்ந்தது
முழுதும்
சேறு
பெருங்கேடு
வீழ்ந்தது
– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.