பேகன்




(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழையபழைய நாளிலே
பகரும்இந்த நாட்டையே
அரசர்பலரும் புகழவே
ஆண்டான்பேகன் என்பவன்.
கருணைசேரும் நெஞ்சமும்
கனிந்துநோக்கும் கண்களும்
உரிமையாகக் கொண்டவன்
உயரும்நல்ல பேகனே.
சோலையில் உலாவவே
சூழ்ந்துமன்னன் சென்றனன்
மாலைபெய்த மழையினால்
மனமகிழ்ந்த ஓர்மயில்
தோகையைப் பரப்பியே
தோன்றஆடும் காட்சியைப்
பேகன்கண்டு குளிரினால்
பெரிது நடுக்கம் கொண்டதே
குளிரைப்போக்கும் கொள்கையே
குணம்எனத்தான் கொண்டனன்
களியுடன் தன் போர்வையால்
கனிந்துமயிலைப் போர்த்தனன்.
பேகனைப்போல் நாமுமே
பேணும்உள்ளக் கருணையால்
ஆகும்எல்லா உயிரையும்
அணைத்துக்காத்தல் கடமையே.
அருஞ் சொற்கள்
அணைத்து
உரிமை
உலாவ
கனித்து
கொள்கை
சூழ்ந்து
கருணை
நெஞ்சம்
பகரும்
பரப்பி
போர்வை
மனமகிழ்ந்த
– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.