பஞ்சு வர்த்தகருக்கு ஒரு பூனையால் வழக்கு நேரிட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,434 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாலுபேர் பங்காக, பஞ்சு வர்த்தகம் பண்ணினார்கள். பஞ்சு மூட்டைகளை எலி கடிக்காமலிருக்கும் பொருட்டுக்காக ஒரு பூனையை வளர்த்தார்கள். 

வளர்க்கும்போது அதனுடைய நாலுகாலுகளையும் ஆளுக்கு ஒருகாலாகப் பங்குவைத்துக்கொண்டு, அவனவன் தன் தன் பங்காகிய காலுக்குத் தண்டை கொலுசு சலங்கை முதலானதுகளால் அலங்கரித்துச் சிறப்பாக வைத்திருந்தார்கள். 

அப்படியிருக்கையில் அந்தப் பூனைக்கு ஒருகாலிலே காயம்பட்டது. அந்தக்காலுக்குச் சுபத்திரகாரன் எண் ணெய்ச் சீலை சுற்றிவைத்தான். அது அடுப்பண்டையிலே போனபோது அடுப்புத் தீ எண்ணெய்ச் சீலையிலே பற்றிக் கொண்டது. 

அது உடனே அந்தப் பூனையானது பஞ்சுமூட்டை களின் மேலே விழுந்து ஓடிப்போகையால் அம்மூட்டைகள் பற்றிக்கொண்டு வெந்துபோய்விட்டதுகள், அதைக்கண்டு எண்ணெய்ச்சீலை சுற்றின கூட்டாளி கையில் மற்ற மூன்று பேரும் தங்களுக்கு வந்த நஷ்டத்தை வாங்கிக் கொடுக்கும் படியாக மரியாதைராமனிடத்தில் பிராது அருளிக் கொடுத்தார்கள். 

அந்த நியாயாதிபதி பிரதிவாதியை அழைப்பித்து விசாரணை செய்து அவன் மனமறிந்து செய்ததல்லாமையினாலே. வாதிகளே செய்த பிராது அநியாயமென்றறிந்து அந்த வாதிகளைப்பார்த்து, ‘பிரதிவாதி பூனைக்கு எண் ணெய்ச் சீலை சுற்றிவைத்த கால் காயமுள்ளதாயிருக்கிறபடி யால் நடக்கிறதற்கு உதவாதே! காயமில்லாத உங்கள் மூன்றுபேர்களுடைய கால்களினாலே நடந்து போகையில் இப்படிப்பட்ட சேதம் வந்தது. ஆகையால், நீங்கள் மூன்று பேரும் பிரதிவாதியினுடைய நஷ்டத்தைக் கொடுக்க வேணும்” என்று தீர்ப்புச் செய்தான். 

வாதிகள் மூன்றுபேரும் யானை தன் தலையிலே தானே மண்போட்டுக் கொள்கிறது போல் தங்களுக்குத் தாங்களே முன்வந்ததோடு பின்னும் நஷ்டம் தேடிக்கொண் டார்கள். திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்கிற பழமொழிப்படி அதிக விசனத்தை அடைந்த பிரதிவாதி தெய்வ சகாயத்தினாலே தன் பச்சம் தீர்ப்பானதைக் கண்டு அதிக சந்தோஷத்தை அடைந்தான். 

– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *