ஜொலிப்ப தெல்லாம் தங்கமல்ல
கதையாசிரியர்: நடராஜன் கல்பட்டு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 2,727
(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நூரு….. எப்பிடிடீ இருக்கே? அவரு வந்திருக்காப்புலெ இருக்கே. ஒரே கொண்டாட்டந் தான்னு சொல்லு.”

“ஆமாண்டீ கொண்டாட்டத்தெப் பாத்தா இவொ. ஜொலிக்கற தெல்லாம் தங்கமில்லேடி.’
“என்னடீ சொல்றே? அப்போ நீ போட்டுருக்குற நகையெல்லாம் அலிமா கவரிங்கா?”
“இல்லேடீ அதெச் சொல்லலெ நான். அதெல்லாம் ஒரிஜினல் தான்.”
“பின்ன என்ன கொறெ பட்டுக்கறெ நீ? வசதியான ஊடு. ஊரெச் சுத்தி வரக் காரு. ஊட்டோட காரெ ஓட்ட ட்ரைவரு. போட்டுக்க வித விதமா நகைங்க. இன்னும் என்னடி வேணும் ஒனக்கு?”
“அதெல்லாம் இருக்கு. இல்லேன்னு சொல்லலெ.”
“பின்னெ என்னவாம்? ஊட்டுக் காரரும் வந்திருக்காரு துபாய்லேந்து. இந்த வாட்டி இன்னும் தங்கமா? இல்லே எச்டீ டீ.வீ. யா?ஐபேடா?”
“மூணுந்தான்.”
“அப்புறம் என்னவாம்? மூஞ்சியெ எதுக்கு நசுங்கிப் போன ஈயச் சொம்பாட்டம் வெச்சிக்கிட்டு இருக்கே?”
“அதெ எப்டிடீ சொல்றது ஒங்கிட்டே?”
“வாயாலெ சொல்றது. என்னத்தெ சொல்ல முடியாமெ தவிக்கிறே?”
“நேத்து என் சின்னப் பையன் கவுசு கேக்குறான், ‘அம்மிஜான் யாரு அந்த ஆளு? நான் ஒருத்தன் ஒம் பக்கத்துலெ இருக்கேங் கறெதெக் கூடப் பாக்காமெ ஒன்னெக் கட்டுறான். என்னென்னமோ பண்ணுறான். நீயும் அவனெப் பாத்துப் பல்லெ இளிக்குறே?’ ன்னு. இப்பொ சொல்லுடீ நீ ஜொலிக்கிற தெல்லாம் தங்கமான்னு.”
“ஆமாண்டீ….. பாவண்டீ நீ. சலீமோட அத்தா, அதான் என் ஊட்டுக் காரரு, இங்கெ பேங்குலெ வேலெ பாக்குறாரு. அஞ்சடிச்சா டாண்ணு ஊட்டுக்கு வந்துடறாரு. சமோசா சாயின்னு இருக்கறதெச் சாப்டூட்டு சலீமெக் கூட்டிகிட்டு பார்க்குக்கு போயிடறாரு அவனோட வெளையாட”
“அதுக்கெல்லாம் அல்லாவோட துவா வேணுண்டீ. எனக்கு அது இல்லெ போலெ.”
– அபலைகள், முதற் பதிப்பு: ஜூலை 2017, மின்னூலாக்கம்: தனசேகர் (tddhanasekar@gmail.com), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEBooks.com.
![]() |
என்னைப் பற்றி சில (பல?) வரிகள்: எழுதும்படியாக ஒன்றுமே இல்லை. இருப்பினும் எழுதுகிறேன். பிறந்தது சிதம்பரத்தில், 1929 ஜூன் 15 அன்று. தந்தை தென் இந்திய ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். நான்கு அண்ணன்கள். நால்வரும் இன்று இல்லை. மூன்று தங்கைகளில் இருவர் இன்று இல்லை. பெற்றோர்கள் நரசிம்மன், ராஜலக்ஷ்மி - படம் கீழே சாந்த ஸ்வ்ரூபிகள். சுற்றத்தாரையும் அரவணைத்துக் கொண்டு, குழந்தைகளையும் வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர தனக்கென ஒரு சுகமும்…மேலும் படிக்க... |
