கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 1,626 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாலறுந்த நரி பேசுகிறது : 

“சகோதர சகோதரிகளே! முன்னால் செய்து விட்டு அப்புறம் பேசுவதே என் கொள்கை. வாலி னால்தான் மனிதனைவிடக் குள்ளநரிக்கு மதிப்புக் குறைந்துபோயிருக்கிறது. மனிதன் என்றால் என்ன? வால் இல்லாத குரங்கு! தவிரவும், இயற்கையிலே உண்டான ஒவ்வொரு பொருளும் பிராணிகளுக்குக் கட்டாயமாகப் பயன்படுகிறது என்று சொல்ல முடியாது. மனிதர்களுக்குள்ளே ஆணை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் முகத்தில் தாடியும் மீசையும் காடுகளைப்போல இராப்பகலாக வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அவன் அதைச் சுத்தமாக வெட்டி எறிந்து தன்னைச் சீர்திருத்திக்கொண்டிருக் கிறான். ஆகையால் நான் இன்று இந்த நரிக்கூட்டத் தினரை வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்: நாம் எல்லோருமாகச் சேர்ந்து வாலறுக்கும் தினம் ஒன் றைக் கொண்டாடவேண்டும். அன்றைத்தினம் நம் மில் ஒவ்வொருவரும் வாலை அறுத்து எறியும் சீர்திருத் தத்தை அமலுக்குக் கொண்டுவர வேண்டும். சகோ தரர்களே, அன்பர்களே, புரட்சி உங்களைக் கூப்பிடு கிறது. எழுந்திருங்கள், விழித்துக்கொள்ளுங்கள்!” 

எல்லா நரிகளும் தம்முடைய கிழத் தலைவரை உற்றுப் பார்த்தன. வாலறுந்த நரி சொல்லியது முற்றும் உண்மையே என்று அவற்றிற்குத் தோன்றியது. 

கிழ நரி எழுந்து நின்று, “இன்று ஒரு மகாவித்து வானுடைய அருமையான பிரசங்கத்தைக் கேட்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது. அவர் கூறிய விஷ யங்களை நான் என் வால் பூர்வமாக ஆமோதிக் கிறேன்’ என்று ஊளையிட்டுப் பேசியது. 

“கேளுங்கள், கேளுங்கள்!” என்று இடையி லேயே கத்தியது வால் அறுபட்ட நரி. 

கிழநரி தொடர்ந்து பேசியது: “வால் அறுந்து போனபின்பு மீண்டும் அது தேவையாக இருந்தால், மறுபடியும் வாலை முளைக்கச் செய்வதற்கும் இப் போது சௌகரியம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு விஞ் ஞான நிபுணர் சமீபத்திலேதான் அத்தகைய ஆராய்ச் சியைச் செய்து முடித்து,” 

“அந்த விஞ்ஞான நிபுணரின் பெயர் என்ன?” என்று வாலறுந்த நரி அவசர அவசரமாகக் கேட்டது. கிழநரி அதன் பேச்சையே கவனிக்காததுபோல மேலே பேசத் தொடங்கியது. 

அப்போது வாலறுந்த நரி திடீரென்று எழுந்து நின்று, “ஓய் கிழவரே, அந்த ஆராய்ச்சி செய்த விஞ்ஞான நிபுணரின் விலாசந்தான் இப்போது எனக் குத் தேவை” என்று கூவியது. 

ஒரேயடியாக எங்கும் பயங்கரமான நரியூளை கிளம்பிவிட்டது. அதைக் கேட்டபின்புதான் வால றுந்த நரிக்குத் தன் தவறு தெரிந்தது. ஆனால் இனி அதனால் என்ன பிரயோஜனம்? அது சொன்ன புரட் சிக்கு அர்த்தம் என்ன என்பதுதான் எல்லா நரிகளுக் கும் தெரிந்து போயிற்றே! 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *