சவுக்கடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 9,147 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் குற்றத்தை எடுத்துக் கூறியதற்காக முழுக்கு முனிவரின் தலையை வாங்கிய மகா கொடிய அரசன் ஏரோது, தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தீர்க்கன் தலையை வெட்டி தாம்பளத்தில் வைத்து சோர மனைவியிடம் கொடுத்த நீசன்.

அவன் ஒரு நாள் வெளியே போயிருக்கும்பொழுது அவன் வீட்டுப் பணிப் பெண்களில் ஒரு சிறுமி அவனது மஞ்சத்தில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டாள்.

அதனைப் பார்த்துவிட்ட மன்னன் நெருப்பாக நின்றான். சிறுமியை சவுக்கால் உதைத்தான்.

வேதனை தாங்கமுடியாது விழித்த சிறுமி சிரித்தாள். குடல் குலுங்கச் சிரித்தாள்.

மன்னன் மருண்டான். வியந்தான். அதிர்ந்தான்.

”ஏன் சிரிக்கிறாய்? சவுக்கடி உனக்கு உரைக்க வில்லையா?” என்று மன்னன் கேட்டான்.

சிறுமி சொன்னாள்:

”மன்னா, சிறிது நேரம் இந்த மஞ்சத்தில் தூங்கியதற்கு இத்தனை சவுக்கடி என்றால் வருடக்கணக்காய் இந்தப் படுக்கையில் தூங்கி வாழும் உனக்கு எத்தனை எத்தனை சவுக்கடி என்று எண்ணிப் பார்த்தபோது சிரிப்பு வந்தது, என் வேதனை மறைந்தது” என்றாள்.

(இது ஒரு கற்பனைக் கதையாய் இருப்பினும் இதில் பொருட் செறிவு உண்டு.)

கலிலேயா நாட்டு ஏரோது மன்னன் தன் எஞ்சிய நாட்களெல்லாம் பயந்து நொந்து வெந்தான். வேதனையில் தகித்து உருகினான். அவனது முடிவு பரிதாபமாயிருந்தது.

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள். (சங்கீதம் 4:4)

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *