கல் உடைகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 377 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆங்கில மாது ஒருவர் தம் இளவயதில் முதன் முறை யாக இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் நோக்கில் வந்திருந்தார்.

அது ஒரு ஜீவநதி—அந்த அழகிய ஆற்றோரம் அதிகாலை வேளை வந்து நின்றார். ஆண்களும், பெண்களுமாக தங்கள் தங்கள் துணிகளை கல்லில் அடித்துத் துவைத்துக்கொண் டிருந்தார்கள். அதனைக் கூர்ந்து கவனித்த ஆங்கில யுவதி அன்று இரவே இலண்டன் பட்டணத்திலுள்ள தம் பெற் றோருக்கு இப்படிக் கடிதம் எழுதினார்:

அன்புள்ள அப்பா, அம்மா!

“இந்திய மக்கள் அபார சாதனை புரிகிறார்கள். துணிகளைக்கொண்டு அடித்தே கற்களை உடைக்கிறார்கள், இந்த அபூர்வக்காட்சியை இன்று தாமிரவர்ணி ஆற்றோரம் கண்டு வியந்துபோனேன்.”

ஆடைகளின் அழுக்கைப் போக்க பலப்பல படிமங்களை உபயோகித்துவரும் மேலைநாட்டும் புதிய தலைமுறை யினருக்குக் கல்லில் துணி துவைப்பதுகூடப் புரியாத புதிராகி விட்டது.

இப்படித்தான் அநேகர் வேதாகமப் பகுதிகளைக்கூடப் புரியாமல் பொருள் காண்கிறார்கள்.

“வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதிருங்கள்.” – [1 தீமோத்தேயு 1:3]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *