பாடுமீன் சு.ஸ்ரீகந்தராசா

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
 

செந்தமிழ்ச் செல்வர், வழக்கறிஞர், “பாடும்மீன்” சு.ஸ்ரீகந்தராசா

வழக்கறிஞர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவர்கள், இளமையில் இருந்தே சிறந்த சமூகசேவையாளராகவும், எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், வில்லிசைக் கலைஞர் முதலிய பன்முகக் கலைஞராகவும் திகழுமொரு தமிழ் ஆர்வலராவார்.

சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர், சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர் விருதுகளையும், பேச்சுப் போட்டிகளில் மாவட்ட ரீதியிலும், அகில இலங்கை ரீதியிலும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். ஏறத்தாழ ஐம்பது நாடகங்களை எழுதியும், நடித்தும், நெறியாள்கை செய்தும் உள்ள இவரது நாடகங்கள் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் பலமுறை அரங்கேறியுள்ளன.

1993 இல் மெல்பேணில் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும் அனைத்துலக ரீதியிலான சிறுகதை. கவிதைப் போட்டிகளையும், முத்தமிழ் விழாவையும் ஆரம்பித்து, தொடர்ந்து 12 வருடங்கள் அவற்றை நடாத்தினார். அந்தப் போட்டிகளும், முத்தமிழ் விழாவும் சங்கத்தினால் இன்றுவரை தொடர்ந்து நடாத்தப்பட்டு வருவது அவரது தொலைநோக்குப் பார்வை மிக்க இன்றியமையாத பணியை எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. முதன் முதலாகத் தனித் தமிழ் இசை விழாவையும், தமிழ் நடன விழாவையும், மெல்பேணில் சிறப்பாக நடாத்தினார்.

இலங்கையில் பல சமூக அமைப்புக்களின் பதவிகளில் அமர்ந்து பணிசெய்திருக்கும் அவர் ஆஸ்திரேலியாவில் சமூக அமைப்புகளில் வகித்த பதவிகளும் பணிகளும்:

ஆஸ்திரேலியாவில்:

1. செயற்குழு உறுப்பினர், இலங்கைத் தமிழ் சங்கம் 1992 – 1999)

2. முத்தமிழ் விழாக்குழுத் தலைவர், (1993-2002)

3. தலைவர், இலங்கைத்தமிழ்ச்சங்கம் (ஈழத்தமிழ்ச்சங்கம்) (1999-2001)

4. தலைவர், ஆஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகம் (1993-1994)

5. ஆசிரியர், “தமிழ் உலகம் – Tamil World” 1994-1995

6. தலைவர், விற்றல்ஸீ தமிழ்ச்சங்கம் (2005-2010 வரை).

7. அறிவிப்பாளரும் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும். “வானமுதம்” தமிழ் ஒலிபரப்புச் சேவை (2005 இதுவரை)

8. தலைவர், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் (2011 – 2013)

9. தேசியப் பரீட்சைக்குழு உறுப்பினர், ஆஸ்திரேலிய பட்டதாரித் தமிழர் சங்கம் ( 2000 – இதுவரை)

10. தலைவர் (2010) மற்றும் ஆலோசகர் (தற்பொழுது) – மெல்பேண் தமிழ்ச் சங்கம்.

11. பொதுச்செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் – ஆஸ்திரேலியா (தற்பொழுது)

வெளியிட்ட நூல்கள்

1. கண்ணகியம்மன் ஊர்சுற்றுக்காவியம் (களுவாஞ்சிகுடி சைவமகாசபையின் சார்பில்)

2. புலம்பெயர்ந்த பூக்கள் (சிறுகதைத் தொகுதி – 1996)

எழுதி வெளியிட்ட நூல்கள்

1. சந்ததிச் சுவடுகள் (நாடகங்களின் தொகுப்பு). ம.தெ.எ.ப. பிரதேச கலாசாரப் பேரவையால் 1988 இல் வெளியிடப்பட்டது)

2. மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்(2002)

3. தமிழினமே தாயகமே (கவிதைத் தொகுப்பு)(2002)

4. தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் (ஆய்வுரைகள்)(2006)

5. ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப்பயணம் (2006)

6. சங்ககாலமும், சங்க இலக்கியங்களும் (எல்லோரும் அறிந்துகொள்ள இனியதோர் அறிமுகம்)(2009)

7. Sankam Period and Sankam Literature (2012) (சங்ககாலமும், சங்க இலக்கியங்களும் ஆங்கிலம்)

8. சங்க இலக்கியக் காட்சிகள்

9. இன்னும் கன்னியாக (சிறுகதைத் தொகுப்பு) மற்றும்,

10. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ( உரைச்சித்திர இறுவெட்டு 2011)

பெற்றுள்ள விருதுகள், பட்டங்கள்

1. சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர், சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர் முதலிய விருதுகளை மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் 1970 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்குமிடையில் பலமுறை பெற்றுள்ளார்.

2. பேச்சுப் போட்டிகளில் உள்ளூரிலும், மாவட்ட ரீதியிலும், அகில இலங்கை ரீதியிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

3. 1974 ஆம் ஆண்டு “சுதந்திரன்” பத்திரிகை நடாத்திய கவிஞர் நீலாவணன் நினைவு வெண்பாப் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.

4. தமிழ்ச் சமூகத்திற்கான சேவையைப் பாராட்டி, மெல்பேன் தமிழ்ச் சங்க்த்தினால், 5.12.2004 இல் “ஆறுமுகநாவலர் விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

5. 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் “செந்தமிழ்ச் செல்வர்” என்ற பட்டமும் சிறப்பு விருதும், பல்லினக் கலாசார அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

6. தமிழ் ஆஸ்திரேலிய தோழமைக் கழகத்தினால், “பட்டிமன்ற நடுவர்” சிறப்பு விருது 2006 இல் வழங்கப்பட்டது.

7. 2007 இல் ஆஸ்திரேலிய அரசால், விக்ரோறிய மாநிலத்துக்கான சமாதான நீதவானாக (Justice of the Peace, Victoria) நியமிக்கப்பட்டார்.

8. 2007 இல், இந்தியா, தமிழ் நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித வளனார் கல்லூரி, “அயலக முத்தமிழ்ப் பணி” க்கான விருதை வழங்கிக் கௌரவித்தது

9. 2010 இல் அடிலைட்டில், தெற்கு ஆஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச்சங்கம் “தென்தமிழீழக் கலைவாணர்” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

10. 2011 இல். “தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் சமுதாயம் என்பவற்றுக்கு அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்காக” மெல்பேண் திருமறைக்கலாமன்றம் விருது வழங்கிக் கௌரவித்தது.

11. 2013 இல், “கடந்த 22 வருடகாலத்திற்கும் மேலாக (1992 இல் இருந்து) மெல்பேணில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அரும்பணியாற்றியமைக்கான விருது” விக்ரோறிய ஈழத்தமிழ்ச்சங்கத்தினால் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

12. விக்றோறிய, வள்ளுவர் அறக்கட்டளையின் சிலப்பதிகாரத் திருவிழாவில், 13.02.2014 இல், “கலை இலக்கியப் பண்பாட்டு விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்

13. கடந்த 2020 இல் புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டில், உலக அளவில் தமிழ்த் தொண்டாற்றி, தமிழ்க்கல்விச் சேவையாற்றி, தமிழர் நலங்காக்கும் பெரும் பணிகளைப் பாராட்டி “உலகத்தமிழ் மாமணி” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

14. 06.11. 2021 இல், மெல்பேண் தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழாவில், தமிழ் மொழிக்கான “பாரதி நூற்றாண்டு விழா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

15. 2024 மார்ச் 23 இல் சிட்னியில் சுவாமி விபுலானந்தர் சிலை நிறுவப்பட்ட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

16. கடந்த (2024) நொவெம்பெர் 09 ஆம் திகதி, ஆஸ்.தமிழ் தொலைக்காட்சியின் விருதுவழங்கும் விழாவில், “மொழியியலுக்கான” சாதனயாளர் விருது வழங்கப்பட்டது.

17. கடந்த 2025.02.23 ஆம் திகதி, ஜேர்மெனி தமிழ் வான் அவை அவருக்கு ஒரு பாராட்டு விழாவை, மெய்நிகர் நிகழ்ச்சியாக நடத்தி அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டதோடு, அவருக்குப் “பல்கலை வித்தகர்” என்ற விருதையும் வழங்கிக் கௌரவித்தது.

தனது 15 ஆவது வயதில் இருந்து தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், நாடகம், என்பவற்றுக்காகவும், தமிழ் சமுதாயத்திற்காகவும் இலங்கையில் சேவை செய்துவந்த திரு. சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் தன்னலமற்ற பணிகள் 1991 ஆம் ஆண்டு அவர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த நாள் முதல் இன்றுவரை தொடர்கின்றன.