ஏலம்போன தலைவர்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 343
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஒருதரம், இரண்டு தரம்… எட்டாயிரத்து ஐநூறு… விடப்போறேன். போனால் வராது… ஒரு தரம், இரண்டு தரம்… எட்டாயிரத்து ஐநூறு… தலைவர் ஆயிட்டா ஒரே நாள்ல சம்பாத்தியம் செய்துறலாம்… விடப்போறேன்… எட்டாயிரத்து ஐநூறு… சென்னப்பன் ஐயா…”
போத்தரை பஞ்சாயத்துத் தலைவர் பதவி இவ்வாறு எலம் போனது.
பணம் உடனே ஊர்ச்சபை முன்னிலையில் கட்டப் பட்டது.
1986 பிப்ரவரி 23ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ளாட்சித் தேர்தல் நாள். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த தேர்தல். நாடு முழுவதும் தேர்தல் வேலைகள் சூடுபிடித்தன.
தேர்தல் விநோதங்களில் ஒன்றாக போளூர் பஞ்சாயத் தின் போத்தரை கிராமத்தில் மேல் சாதி இந்து மக்கள் ஒன்றுகூடி தலைவர் பதவியை ஏலம்விட சென்னப்பன் அவர்கள் 8,500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்கள்.
தன்கண் ஊரிக்கட்டை மீறி இன்னொரு போட்டி ஏற்படாது என்று கருதினர். ஆனால் ஆதி திராவிட மக்கள் தங்களுக்கென்று பிறிதொரு தலைவனைத் தேர்ந்தெடுத்து நிற்க வைத்தனர்.
ஏலப் பணம் இழுறியானது. மேல் சாதியினர் ”வச்சது குடுமி அடிச்சது மொட்டை” என்ற காலம் மலையேறி விட்டது. ஜன நாயகத்தில் வர்க்க முரண்பாடுகளின் கூன் நிமிரும்.
முதலாளித்துவ அமைப்பில் தலைவர் பதவி மட்டுமல்ல, இளைஞர்களின் திறமைகள் தாலந்துகள், கலை நுணுக்கங்கள் அனைத்தும் பணத்திற்கும் – பண நாயகர்களுக்கும் ஏலம் போகின்றன.
“எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.” – [சங்கீதம் 14:3]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
