Zomoto வில் வேலை செய்யும் பேய்
கதையாசிரியர்: தேவதர்ஷினி செல்வராஜ்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 165

ராத்திரி 2 மணி. நல்ல பசி. ரதி மட்டும் வீட்டுல தனியா இருக்கா. Zomato-ல பிரியாணி Order பண்றா.
அரை மணி நேரம் கழிச்சு… டக்… டக்… டக்…
கதவ திறந்தா… வெளிய ஒரு அக்கா. வெள்ள சேலை. கலைஞ்ச முடி. கையில பிரியாணி பார்சல். ஆனா… கால் இல்ல. காத்துல மிதக்குது.
ரதி பயந்து: “ஐயோ! அக்கா… கால் எங்கக்கா?”
பேய் அக்கா சிரிச்சுக்கிட்டே: “காலா? அது மேல தான் லாரி ஏறிச்சு. அப்பவே செத்துட்டேன் மா.”
ரதி: “எக்கா… பயமுறுத்துறீங்க…”
பேய்: “பயப்படாத மா. பிள்ளைங்க ஸ்கூல் பீஸ் கட்டணும். அதான் பார்ட் டைம் Zomato-ல சேந்துட்டேன். சரி… Cash-ஆ GPay-ஆ?”
ரதி நடுங்கிகிட்டே: “G…GPay க்கா…”
Phone-ல பீப். `₹240 Credited to Mohini Delivery Partner.`
பேய் அக்கா பார்சலை நீட்டி: “இந்தாமா பிரியாணி. Ratings முக்கியம். 5 Star போடு மா. வரட்டா…”
டப்புனு காத்துல கரைஞ்சுட்டா.
ரதி பார்சலை திறந்தா. பிரியாணிக்கு மேல ஒரு சின்ன தாள்: `பயப்படாத தங்கம். வயித்துக்கு சாப்பாடு முக்கியம் – அம்மா `
ரதி கண்ணு கலங்கிடுச்சு. அன்னைல இருந்து எல்லா Delivery Partner-க்கும் 5 Star தான்.
*நீதி: செத்தாலும் ஒரு அம்மா கடமைய மறக்க மாட்டா. மதிப்பு குடுங்க.*
தொடர்புள்ள சிறுகதைகள்
தர்மன்
பே.செல்வ கணேஷ்
May 13, 2026
தன் வினை தன்னைச் சுடும்
கே.என்.சுவாமிநாதன்
May 10, 2026
அலெக்ஸா, மணி என்ன?
கே.என்.சுவாமிநாதன்
May 7, 2026