கதையாசிரியர் தொகுப்பு: ஹ.மு.நத்தர்ஷா

1 கதை கிடைத்துள்ளன.

செப்புத் தூக்கி

 

 பகல் பதினொன்று இருக்கும். வீதியில் நடந்து செல்பவர்களை சிறியவர் பெரியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் தன் சுடுகதிர் வீச்சால் வறுத்தெடுக்கும் சூரியன், தன் வேலையில் சற்று முனைப்பைக் காட்டத் தொடங்கியிருந்த நேரம். வீட்டுப் பெரியவர்கள் மார்க்கெட் சென்று வந்த களைப்பில் அன்றைய நாளேட்டில் முகம் புதைந்து கிடைந்தார்கள். ‘சல்லிசாக’ ஆண்கள் வாங்கி வந்திருந்த மீனின் நாற்றத்தைத் தாங்க முடியாமல், மனதுக்குள் திட்டியபடி – வேறுவழியின்றிச் சலிப்புடன் அவன் பெண்கள் மீன்களை ஆய்ந்து கொண்டிருந்தார்கள், வக்திற்கு வக்த் மட்டுமே