கதையாசிரியர் தொகுப்பு: ஹெச்.ஜி.ரசூல்

1 கதை கிடைத்துள்ளன.

பச்சை நிறப் பூனை

 

 நசீறாவின் முகத்தில் படர்ந்திருந்த ஒளி மங்கத் தொடங்கி இருளடைந்திருந்தது. இருளின் நிறம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. உள் ஒடுங்கி பின்னப்பட்ட வலையொன்று வீசப்பட்டது போல் பகலையும் இரவையும் பிரித்துக் காட்டும் நிழல் படிமங்கள் மர்மமான முறையில் இறைந்துகிடந்தன. இப்போதெல்லாம் வீட்டு வாசலை விட்டு வெளியே வருவதில்லை . வாசல்படிகளில் அறிமுகமான முகங்களும் உதடுகள் தெறித்துப் போடும் வார்த்தைகளும் நசுங்கிப் போயின. ரெண்டு மூன்று நாட்களாக நெருங்கிய உறவினர்கள் நிறைய துக்கங்களைச் சுமந்து இங்கு வந்து இறக்கிவைத்து விட்டுப்