கதையாசிரியர் தொகுப்பு: விஷ்வதாரா

1 கதை கிடைத்துள்ளன.

கற்பு என்பது யாதெனின்

 

 மாடிப்படிகளில் வேகமாக ஏறிக் கொண்டு இருந்த ருத்ராவின் காதுகள் கேட்குமாறு பக்கத்துவீட்டுப் பெண்கள் பேசத் தொடங்கினர்.. “இங்கே பார்த்தியா.. எவ்வளவு ஸ்டைலா நடந்து போறா.. இதே நானா இருந்தா தூக்குல தொங்கி இருப்பேன்.. கொஞ்சமாவது மான மரியாதை வேணாம்.. கெட்டுப் போன அப்புறமும் எப்படி இவளாலே தலை நிமிர்ந்து நடக்க முடியுதோ..” என பேசிக் கொண்டு இருக்க நடந்துக் கொண்டு இருந்த அவளது கால்கள் தானாக நின்றது… அவர்களின் பக்கம் திரும்பி நேராகப் பேச ஆரம்பித்தாள் ருத்ரா..