கதையாசிரியர் தொகுப்பு: லோ.கார்த்திகேசன்

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாவின் வீடு

 

 ஒப்பாரியும் ஓலமும் இன்னும் ஓய்ந்‌த பாடில்லை. அம்மாவும் அக்காவும் துக்கம் விசாரிக்க வரும் நெருங்கிய உறவினர்களைக் கண்டவுன் ‘ஓ’ வெனக் கதறுகிறார்கள். என்னை விடவும் அவர்கள் அப்பாவிடம் அதிகப் பற்று கொண்டிருந்‌தார்கள். சொல்லபோனால் என்னைவிடவும் அவர்கள் அப்பாவுடன் அதிக நேரம் செவழித்துள்ளார்கள். நீண்ட ஒல்லியான அவரது உடல் வெள்ளைத் துணியால் போர்த்த்ப் பட்டிருக்கிறது. அவர் எதையோ நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்பா நிஜ வாழ்விலும் அப்படித்தான். அதிக நேரம் சிரித்த முகத்துடன் தான் அவரைப் பார்க்க முடியும்.