கதையாசிரியர் தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மீட்பு

 

 “”முத்தம்மா! பங்களா ஊட்டுப் பெரியம்மா காலமாயிட்டாங்களாம்!”என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனாள் அஞ்சலை. முத்தம்மாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. இருக்காதா பின்னே! அவள் கஷ்டப்பட்டு சிறுகச் சிறுக சேர்த்த பணம் இரண்டாயிரமும், அவள் மருமகள் அவளிடம் கொடுத்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் மூவாயிரம் ரூபாயைப் பெரியம்மாவிடம்தான் கொடுத்து வைத்திருந்தாள். அவள் மகன் பரஞ்சோதி மொடாக் குடியனாக இருந்தான். வீட்டில் ஒரு பொருளையும் விட்டு வைக்க மாட்டான். அவன் கண்ணுக்குத் தெரியாமல் பணத்தை மறைப்பதே பெரும்பாடாக இருந்ததால்


வள்ளி

 

 ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பில் மேற்பார்வையாளர் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அங்கன்வாடிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்த விவரங்களைச் சரிபார்க்கும் பணி. அப்பணியில்தான் வள்ளி அக்காவை கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத இந்த ஊரில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தன் வயதான அம்மாச்சியுடன் ஒரு சிறிய வீட்டில் இருந்தாள். அருகில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் வேலை செய்கிறாள் போலும். இன்னமும் அதே கம்பீரத்துடன் இருந்தாள். என்னைவிட வயது மூத்த வள்ளி எங்கள் அனைவருக்கும் கிராமத்தில்