கதையாசிரியர் தொகுப்பு: ரஞ்சன்

35 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்காக்கும் உதவிகள்…

 

 ”குருவே எனக்கு ஒரு பிரச்சனை” என்று தன் முன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்சனை?” “என் கணவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. எல்லோரிடமும் இரக்கப்பட்டு உதவிகள் செய்கிறார். அதனால் என்ன பலன் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள். குருவுக்கு அவளின் பிரச்சனை புரிந்தது. அவளுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல துவங்கினார். ‘இது ஒரு பனி மலையில் நடந்த சம்பவம். இரண்டு நண்பர்கள் பனி மலையில் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்கு


முழுமையான முயற்சி தோற்பதில்லை

 

 ”எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது” என்று நொந்து சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன், என்னாச்சு” “என்னால் எந்த காரியத்தையும் முடிக்க இயலவில்லை ஏதாவது தடங்கள் வருகிறது. அதன்பின் என்னால் தொடர இயலவில்லை” என்று சொன்னான் வந்தவன். அதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார். “சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. பெரு நாட்டில் சியுலா க்ராண்டே என்று ஒரு மலை இருக்கிறது. 21000 அடி உயரம். அந்த


வீணான சர்ச்சைகள்…

 

 ”குருவே, எனக்கு எந்த காரியத்தையும் செய்ய நேரமே கிடைப்பதில்லை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன், என்ன பிரச்சனை?” “எந்த காரியத்தை துவங்கினாலும் எதாவது பிரச்சனை வந்துவிடுகிறது. அதை சிந்தித்து முடிவெடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது” என்று வந்தவன் சொனனதும் குருவுக்கு அவனின் பிரச்சனை புரிந்தது. ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ‘ஒரு ராஜா பூனை ஒன்று வாங்கினார்.அழகான பூனை. அதற்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று மந்திரிகளை அழைத்து ஆலோசித்தார். ஒரு


உற்சாகப்படுத்தினால் உழைப்பு அதிகமாகும்

 

 ”குருவே என்னுடைய நிறுவனத்தில் ஒரு பிரச்சனை” என்று வருத்ததுடன் சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “என்னாச்சு?” என்று கேட்டார் குரு. “என் வேலையாட்கள் யாரும் சரியாக வேலை பார்ப்பதில்லை. எவ்வளவு திட்டினாலும் கேட்க மறுக்கிறார்கள்” என்றான். இதைக் கேட்டதும் குருவுக்கு அவனின் பிரச்சனை என்னவென்று புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார். ’ஒருவன் வெளியூருக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தான். ஒரு கிராமத்தைக் கடந்துக் கொண்டிருந்தபோது சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கார் இறங்கிவிட்டது. ஆக்சிலேட்டரை முடுக்கிப் பார்த்தான்


அவசரப்பட்டு யாரையும் நம்பக் கூடாது

 

 ”குருவே, எனக்கு ஒரு பிரச்சனை” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “என்னப் பிரச்சனை?” “என்னை எல்லோரும் ஏமாற்றிவிடுகிறார்கள். நானும் ஏமாந்துவிடுகிறேன்” என்று சொன்னவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ‘ஒரு பணக்காரன் தன்னுடைய பெரிய காரில் போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு புல்வெளியை அவனுடைய கார் கடந்த போது, அந்தப் புல்வெளியில் இரண்டு பேர் புல்லைப் பிடுங்கி சாப்பிடுவதைப் பார்த்தான். ‘புல்லைத் தின்கிறார்களே’ என்று ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்தி அவர்களிடம்


தவறுகளை மறைப்பது…

 

 “எனக்கு மனசு ரொம்ப பாரமாய் இருக்கிறது” என்ற சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “என்ன பிரச்சனை? என்ன ஆயிற்று” என்று அவனைத் தேற்றும் விதத்தில் கேட்டார் குரு. “குருவே நான் ஒரு தப்பு செய்து விட்டேன். அது என் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது” வந்தவனின் பிரச்சனை குருவுக்கு புரிந்த்தது. அவனுக்கு ஒரு கதையைச் சொல்லத் துவங்கினார். “ராணி, ராமுனு அக்கா, தம்பி இருந்தாங்க. சின்னப் பசங்க. ஒரு தடவை லீவுக்கு கிராமத்துல இருக்கிற பாட்டி வீட்டுக்குப் போனாங்க.


மாசுக்களைப் பார்த்தால்…

 

 ”குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “அப்படியா, என்ன பிரச்சனைகள் வருகின்றன?” “அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா பழக முடியல” சொன்னவனின் சிக்கல் குருவுக்கு புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார். ஆண்ட்ரூ கார்னகி என்று அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரர். அமெரிக்காவின் முதல் பணக்காரர்களில் அவரும் ஒருவர். ஐரோப்பாவிலிருந்து


வேலையை எப்படி செய்கிறீர்கள்…

 

 “குருவே, எனக்கு ஒரு பிரச்னை’ என்று வந்தவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “என்ன பிரச்னை?’ “நான் ஒரு நிறுவனம் வைத்திருக்கிறேன். ஆரம்பித்தில் நிறைய வேலை கிடைத்தது, ஆனால் இப்போது வேலை வருவது குறைந்துவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை’ என்று அவன் சொன்னதும், குருவுக்கு அவனுடைய பிரச்னை என்னவென்று புரிந்துவிட்டது. அவனுக்கு அமெரிக்காவில் நடந்து சம்பவம் ஒன்றைச் சொல்லத் துவங்கினார். “அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்புச் செலவுக்காக வேலைகள் செய்து சம்பாதிப்பார்கள். அப்படி ஒரு பெண்மணியைத்


நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாய்…

 

 தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனை பார்த்தார் குரு. “என்ன பிரச்சனை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாக பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை” அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்சனை என்னவென்று குருவுக்கு தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ஒரு ஊருக்கு வெளில மரத்தடில பெரியவங்கலாம் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அங்க புதுசா ஒருத்தன் வந்தான்.


பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

 

 “குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு. “என்ன சங்கதி’ என்றார். “என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள்தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை’ என்றான் வந்தவன். இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார். “ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட்தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை