கதையாசிரியர் தொகுப்பு: ம.வே.சிவகுமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னை நீ நம்பு

 

 கொஞ்ச நாட்களாகவே எதைத் தொட்டாலும் பிசகிக்கொண்டு இருந்தது. அதிர்ஷ்ட தேவதை அறிவிப்பின்றி அகன்றது போல் அடுத்தடுத்து ஆயிரம் சறுக்கல்கள் அணிவகுத்தன. ஒரு மந்திரம் போல் கையில் புரண்ட காசு, திடீரென்று காணாமல் போனது. செலவு மூச்சுத் திணறியது. காரியங்கள் கை மீறின. கடனுக்கு வாய்தா சொல்லி பொய்கள் தீர்ந்து போயின. என் கம்பீரம் தொலைந்தது. அகத்தின் அழகு முகத்தில் அசடு தட்டியது. சிரிப்பு குறைந்தது. எதற்கெடுத்தாலும் நான் சிடுசிடுப்பதாக என் மனைவி புடவை ஓரத்தை நனைத்தாள். நான்


கடவுள்

 

 இரண்டு நாட்களாகவே அந்தக் கருப்புப் பூனை இரவில் நான் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்கு வந்துகொண்டு இருந்தது. இருட்டில் தொப்பென்ற சப்தத்தில் கனவு கலைந்து நான் திடுக்கிட்டு கண் விழிப்பேன். காலடியில் மெத்தென்று பூனை இடறும். இன்னதென்று புரியாத கலவரத்தில் சுவரில் துழாவி விளக்கைப் போடுவேன். வெளிச்சம் பழகுவதற்குள் பூனை கட்டிலுக்கடியே போயிருக்கும். பயத்தில் வியர்க்கும். ஒரு சந்தேகத்தில் கட்டிலுக்கடியே குனிந்து பார்ப்பேன். அந்தக் கருப்புப் பூனை தரையோடு தரையாய் படுத்திருக்கும். ‘‘மியாவ்.’’ இரவு பூராவும் ஒரு நாள்