கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் வா.நேரு

5 கதைகள் கிடைத்துள்ளன.

மிஸ்டர் இரக்கசாமி…

 

 ” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்…. ‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி. மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கசாமி என்று பெயர் வைத்தாதாலோ


ஒரு தலைமுடியைக் கூட….

 

 ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் ஆத்திரமாக வந்தது. இப்படிப் படித்த முட்டாள்களாக , அறிவிலிகளாக இருக்கின்றார்களே என்னும் வருத்தமும் வந்தது. கீதா, இன்று நேற்றல்ல, 20 ,25 வ்ருடங்களாக நட்பு ரீதியாகப் பழகியவர். பல நேரங்களில் உதவியாக இருந்தவர் என்றாலும் அவர் செய்த செயலை மாறனால் தாங்க முடியவில்லை. நேரே அவளின் இருக்கைக்கு சென்ற மாறன், அவளிடம் ‘ உங்கள் பிரார்த்தனையால் தலையில் இருக்கும் ஒரு முடியை கீழே விழ் வைக்க முடியுமா


அடி உதவுறது மாதிரி

 

 உழைத்து உழைத்து உரத்துப்போன கை. அந்தக் கையின் மூலமாக விழுந்த அடி ஒவ்வொன்றும் இடியைப் போல மதியின் முதுகில் விழுந்து கொண்டிருந்தது. அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருந்தான் முத்து. மாதம் ஒரு முறையோ, இருமுறையோ அம்மாவைப் பார்க்க கிராமத்திற்கு வரும் முத்துவுக்கு அப்போதுதான் அவனது அம்மா, சோற்றை வடித்து, கறிக்கொழம்பை ஊத்தினார். பக்கத்தில் வறுத்த கோழி வேறு இருந்தது. ஆசையாக சாப்பிடப்போகும் நேரந்தான் இந்தச்சத்தம் கேட்டது. அண்ணே, அடிக்காத, அடிக்காத, படிச்சிறேன், நான் படிச்சிறேன் என்னும் சத்தமும் அழுகையும்,


தீவிர சிகிச்சைப் பிரிவு

 

 “நீங்கள் சுட்டிக் காட்டும் குறைகள் ,எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு ” அந்த மருத்துவ மனையின் உள்ளும் புறமும் அநேக இடங்களில் வண்ணப்போர்டுகளில் வேறு வண்ண எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனை பல ஏக்கரில் ,பல மாடிக் கட்டிடங்களோடு அமைந்திருந்தது. இப்போது இந்த இடத்தை வாங்குவதென்றால் பல கோடி ரூபாய் ஆகலாம். ஆனால் மருத்துவமனையின் நிறுவனர் பல வருடங்களுக்கு முன்னால் இந்த் இடத்தை வாங்கிப்போட்டிருப்பார் போலும். ஒரு தொழிற்சாலை போல இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனை மிகப்பெரிய பிரமிப்பை


சீரு சுமந்து அழிகிற சாதி சனமே !

 

 சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சுகின்ற அளவில் பிரமாண்டமாய் அந்தக் கட் அவுட் இருந்தது. கிளம்பும்போதே என் மகன் முத்துவிடம் ,” டேய், உன்னுடைய பிரண்டு வீட்டு விசேசத்துக்கு போகணும்னு சொன்னியே, தெருப்பெயரைக் கேட்டாயா? மண்டபம் பெயர் கேட்டாயா? ” என்று கேட்டபோது முத்து சிரித்துக்கொண்டே ” அப்பா, அந்தப் பகுதிக்கு போய் விட்டாலே , வரிசையாக கட் அவுட் இருக்குமாம் , ஈஸியா கண்டுபிடித்து விடலாம் ” என்று சொன்னான் , உண்மைதான், கட் அவுட்டுகள்தான் கண்டுபிடிக்கும்