கதையாசிரியர் தொகுப்பு: மலர்மதி

2 கதைகள் கிடைத்துள்ளன.

பேருந்தில் வந்த பேரழகி

 

 அலுவலகத்திலிருந்து களைத்து வீடு திரும்பியபோது எனக்காகக் காத்துக் கொண்டிருந்தான் நண்பன் பிச்சமுத்து. “வாடா, ஏன் தாமதம்..?” என்றான். “அலுவலகத்துல எனக்கு மேலே இருந்த அதிகாரி திடீர்னு வேலையை ராஜினாமா பண்ணிட்டார். இப்ப எல்லா வேலையும் என் தலையில விழுந்துடுச்சு.” என்றவாறே காலணிகளைக் கழற்றினேன். “அப்ப உனக்கு கூடிய சீக்கிரம் பதவி உயர்வு கிடைக்கப்போகுதுன்னு சொல்லு.” என கிண்டலடித்தான் பிச்சமுத்து. “அதெல்லாம் அவ்வளவு லேசுல கொடுத்துடமாட்டானுங்க. மாடு மாதிரி உழைக்கணும்…” என்று நான் சொல்லிக்கொண்டே நாற்காலியில் அவனுக்கெதிரில் அமரவும்,


விளையும் பயிர்

 

 சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய குடியாத்தம். நடுப்பேட்டையில் அஞ்சுமான் தெருவும், கோபாலபுரம் மஜீத் தெருவும் இணையும் இடத்திலிருந்து தொடங்கும் வயற்காடு பச்சைப் பசேல் என்றிருக்கும். சுற்றிலும் கம்பி வேலி போடப் பட்டிருக்கும். முகப்பில் ஆளுயர கல் தூண்கள் நான்கைந்து நட்டு வைத்திருப்பார்கள். ஒரு நபர் மட்டும் நுழையக்கூடிய விதத்தில் அவை அமைந்திருக்கும். ஆடு, மாடு போன்ற பிராணிகள் வயற்காட்டில் நுழையாமல் இருக்கத்தான் அந்த ஏற்பாடு. வயற்காட்டுக்குப் போகும் வழியில் இடது பக்கம் வஹாப் பாயோட மரக் கடையும்,